/* */

JKKN வித்யாலயா பள்ளியில் 14வது விளையாட்டு விழா கோலாகலம்..!

குமாரபாளையம், JKKN வித்யாலயா பள்ளியில் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

JKKN வித்யாலயா பள்ளியில் 14வது விளையாட்டு விழா கோலாகலம்..!
X


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN வித்யாலயா பள்ளியின் 14-வது விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை, தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ரம்யா வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி உடற்கல்வி ஆசிரியை வசந்தி விளையாட்டு விழா ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். விழாவில் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா சாரண, சாரணியர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, யோகா, சிலம்பம், கராத்தே மற்றும்

1) PROPERTY EXERCISE (GRADE 1-3 BOYS, GIRLS), 2) BALL EXERCISE (GRADE 4 & 5 BOYS & GIRLS),

3) SAREE DRILL (GRADE 6 - 8 GIRLS), 4) UMBRELLA EXERCISE (GRADE 6 - 8 BOYS),

5) PYRAMID (GRADE 8 - 10 BOYS), 6) AEROBICS (GRADE 9 & 10 GIRLS)


உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


14வது விளையாட்டுவில்லாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை பள்ளியின் தாளாளரும், JKKN கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஸ்ரீமதி செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் வழங்கினர். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


JKKN கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தாமல், மாணவர்களின் உடல் ஆரோக்யமும் முக்கியம் என்ற நோக்கத்தில் விளையாட்டையும் கட்டாயமாக்கியுள்ளது. அதற்காகவே மாணவர்களுக்கென்று விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு மைதான பராமரிப்பு போன்றவைகளில் பள்ளி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல ஆண்டுதோறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு விழாவையும் நடத்தி வருகிறது.

Updated On: 22 Nov 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!