/* */

Pune Graduate Google Job News in tamil-ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்..! இந்திய பட்டதாரிக்கு அள்ளிக்கொடுக்கும் கூகுள் நிறுவனம்..!

கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பெறப்போகும் மாணவர், இன்ஜினியரிங் படித்தவர் அல்ல என்பது கூடுதல் ஆச்சர்ய செய்தி.

HIGHLIGHTS

Pune Graduate Google Job News in tamil-ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்..! இந்திய பட்டதாரிக்கு அள்ளிக்கொடுக்கும் கூகுள் நிறுவனம்..!
X

Pune Graduate Google Job News in tamil, Pune Graduate Harshal Juikar appointed in Google in tamil, Pune Graduate Harshal Juikar Got a job in Google, Pune Graduate Harshal Juikar, MIT World Peace University Pune

பல இளைஞர்களின் வேலைக்கனவுகளில் Google -ல் பணி செய்வது முதன்மையாக இருக்கும். அதன் சம்பளம் மற்றும் திறமையை அங்கீகரிக்கும் மனப்பான்மையே அதற்கான காரணங்கள்.

படித்து முடித்தாலும் அதற்கேற்ற வேலை கிடைக்காதது ஒன்று. மற்றொன்று தனித்திறமைகளை வளர்க்காமல் கல்வியை கற்பது. இன்றைய இளைஞர்கள் இதை சரியாக புரிந்துகொள்வது அவசியம். கற்றல் அறிவின் விருத்திக்கு. அந்த அறிவை அனுபவமாக மாற்றுவது தனித்திறன். ஆனால், அந்த தனித்திறனுக்கும் கூட கொஞ்சம் சிந்தனை ஆற்றல் மற்றும் கொஞ்சம் முயற்சி இருக்கவேண்டும். முயற்சியே செய்யாமல் எந்த வெற்றியும் கிடைத்துவிடாது.

அதுவும் தற்காலத்தில் தனித்திறன் இருந்தால் போதும். என்ன படித்தோம் என்பது தேவையில்லாமல் போய்விடும். உங்கள் திறமைக்குத்தான் வேலை. படிப்புக்கு அல்ல என்பதை உறுதிசெய்யும் காலம்.

இலக்கு இல்லாமல் படித்தவர்களே கிடைத்த வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது. குடும்பச் சூழல் ஏதாவது ஒரு வகையில் குடுமத்தின் சுமைக்கு உதவியாகவேண்டும் என்கிற நிலையில் அந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால் படிக்கும்போதே திறமையை வளர்த்துக்கொண்டவர்கள் மட்டுமே பெரிய நிறுவனங்களில் வேலை பெறுகின்றனர்.

இப்படி பல மாணவர்கள் திறமையால் உயர்ந்துள்ளனர் என்பதற்கு இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்க டெக் நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் உள்ளனர் என்பதற்கு சான்றுகளும் உள்ளன.

அந்தவகையில் அந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர் (Harshal Juikar) என்னும் இளம் பட்டதாரி ரூ.50 லட்சம் சம்பளத்தில் கூகுளின் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். வளர்ந்து வரும் திறமையான மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். இத்தனைக்கும் ஹர்ஷல் ஜூய்கர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

புனேவில் உள்ள எம்ஐடி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டியில் (MIT World Peace University) எம்எஸ்சி பிளாக்செயின் டெக்னாலஜி (M.Sc in Blockchain Technology) படிப்பை முடித்துள்ளார். படிக்கும்போதே, இவரது அதீத திறமையால், கூகுள் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா சயின்டிஸ்ட் (Junior Data Scientist) இன்டர்ன்ஷிப்புக்கு தேர்வாகியிருக்கிறார்.


அங்கு ஒன்றரை ஆண்டுகள் இன்டர்ன்ஷிப் டிரெய்னியாக பணிபுரிந்தார்.அந்த நேரத்தில் ஹர்ஷலின் திறமையும், டெக்னாலஜி மீதான அவரது ஆர்வமும் அவருக்கு கூகுள் நிறுவனத்தின் நன்மதிப்பை பெற்றுத் தந்தது.படிப்பை முடித்த அவருக்கு எம்ஐடி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டியில் கூகுள் நிறுவனம் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹர்ஷல் ஜூய்கர், அந்த நிறுவனத்தின் டேட்டா சயின்டிஸ்ட் பணியிடத்தை தட்டிச் சென்றார். ஆச்சர்யம் என்னவென்றால், அவரது திறமையை மதித்து கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் மேலாக அவருக்கு சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையுள்ள சம்பளம் பொதுவாக கம்ப்யூட்டர் சார்ந்த இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், அவரது தனித்திறமை இன்ஜினியரிங் பட்டம் பெறாத அவருக்கு இந்த உயர்ந்த சம்பளத்தை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. வளரும் இளைஞர்கள் தனித்திறன் வளர்ப்பிப்பதை கருத்தில் கொள்ளவேண்டும். திறமை இருந்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதை நிரூபித்து, உயர்ந்த சம்பளத்தை ஹர்ஷல் ஜூய்கர் பெற்றுள்ளார். இவரது எதிர்காலம் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போல இருக்கும் என்று அவருடன் படித்த மற்ற மாணவர்கள் கூறுகின்றனர்.

Google நிறுவனத்தில் வேல்;ஐ கிடைத்தது குறித்து ஹர்ஷல் ஜூய்கர் கூறும்போது,'கல்லூரி காலத்தில் டெக்னாலஜி மீதான ஆர்வம் என்னை அதில் பயணிக்கவைத்தது. அது, சில நேரங்களில் மிகப்பெரும் சவால்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. ஆனாலும் கூட சளைக்காமல், பாதை மாறாமல் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.

அந்த முயற்சி இப்போது, நான் நினைத்துப்பார்க்காத வெற்றியை எனக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த வெற்றிப்பயணத்தில் எனக்கு ஆதரவு அளித்த எம்ஐடி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டிக்கு,நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவர்களின் உதவி இல்லாமல், இந்த சாதனை எனக்கு சாத்தியமாகியிருக்காது என்றார்.

இவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இதுகுறித்து அவர் படித்த யுனிவர்சிட்டியின் துணை வேந்தர் ரவிக்குமார் சிட்னிஸ் கூறுகையில், 'ஹர்ஷலின் சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். அவரது, இந்த வெற்றியானது, எங்களது கல்வி நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கான பிரதிபலிப்பாக இதை நாங்கள் உணர்கிறோம். அதே நேரத்தில், தற்போது படித்து வரும் மாணவர்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்வதற்கும், புதுமையான விஷயங்களை ஆய்வு செய்வதற்கும் இந்த வெற்றி உத்வேகமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

இளைஞர்கள் தனித்திறன் பெற்று, சாதிக்கும் முனைப்புடன் இருந்தால் வெற்றி நம்மைத் தேடிவரும் என்பதற்கு ஹர்ஷல் ஜூய்கர் இன்னொரு உதாரணம். தனித்திறன் வளர்ப்பதின் அவசியம் இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

Updated On: 31 July 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்