/* */

அகிம்சையால் ஆங்கிலேயரை விரட்டியடித்த மகாத்மா காந்தியின் பொன்மொழியை படிங்க....

Gandhi Thoughts in Tamil-பாரதநாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களிடம் போராடி சுதந்திரம்பெற்றுத்தந்த பெருமை மகாத்மா காந்தியடிகளையே சாரும்.. அவரது பெருமைகள் இதோ....

HIGHLIGHTS

Gandhi Thoughts in Tamil
X

Gandhi Thoughts in Tamil

Gandhi Thoughts in Tamil

ஆங்கிலேயரை எதிர்த்து தண்டிக்கு உப்புச்சத்தியாக்கிரக யாத்திரை மேற்கொண்ட காந்தியடிகள்.(கோப்பு படம்)


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869 ம் ஆண்டு ஜனவரி 30ம்தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை

பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.


காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா

வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.

இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

மறைவு

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5.17 மணிக்கு தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

காந்தியடிகளின்பொன்மொழிகள் இதோ.....

மனதில் தீயவற்றைச் சிந்திப்பவன், தீய செயல்களைச் செய்பவன் போன்றவனே.. சிந்திப்பவனைவிடச் செய்பவன் மோசமானவன் அல்ல..

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதின் மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியாது

இந்த உலகத்துக்கு அமைதியை போதிக்க விரும்பினாலும், உண்மையான போருக்கு எதிரான போரைத் தொடங்கவேண்டுமென்றாலும் அதைக்குழந்தைகளிடமிருந்துதான் தொடங்கவேண்டும்.

நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு

ஒருவன் தாம் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்துகொள்வதில் கவலையாக இருந்தால் அவனுக்கு தடைகளும் எதிர்ப்புகளும்தான் அதிகம் தென்படும்

ஒருவனிடம் துக்கமும், துாக்கமும், எப்போது குறையுமோ அப்போதே அவன் மேதையாகிறான்

தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவும் இல்லை

எது முழுமையானதாகவும் உண்மையானதாகவும் இல்லாமலிருக்கிறதோ அதை எந்த பெயர் சொல்லி அழைப்பதிலும் பயனில்லை..

எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை.. அந்த அறத்துக்கே உண்மைதான்அடிப்படை..

வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் மட்டும் கொல்லப்படுவதில்லை.. அவர்கள் மேற்கொண்ட கொள்கையால்தான் கொல்லப்படுகின்றனர்.

ஒரு தியாகி போல சாக ,நமக்கு வீரம் வேண்டும். அதற்காக தியாகியாக வேண்டுமென்ற வெறியாருக்கும் இருக்க கூடாது.

எல்லா நீதிமன்றங்களையும் விட உயர்ந்தது மனசாட்சி எனும் நீதிமன்றம்தான். அது எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலானது

ஒரு கலாச்சாரத்தை அழிப்பதற்காக அதன் நுாலை அழிக்காதீர்கள் அதை மக்கள் படிக்க விடாமல் செய்யுங்கள் போதும்

நம்பிக்கை காரணத்துடன்இருக்கவேண்டும். குருட்டாம்போக்கு நம்பிக்கை எளிதில் மறைந்துவிடும்

எளிமையான வாழ்க்கை என்ற விருப்பத்திலிருந்து மாறும் மனிதனுக்கு தேவைகள் அதிகரித்து விடுகின்றன. இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மனநிலைதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்

ஒருமனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்தக் கணமே எல்லாமே கறைபட்டுவிடும்

இந்த உலகில் மனிதனின் தேவைக்கு போதுமான அளவு வளங்கள் உள்ளது. அவனின் பேராசையளவுக்கு வளங்கள் இங்கில்லை.

தன் சகமனிதனின் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவனே சிறந்தவனாக கருதப்படுகிறான்.

அரசியலுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.

மனிதனாக இருப்பது அல்ல மனிதம்மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.

மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.

உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால், நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.

பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அது போல் முதலில் நீ மாறு.

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்

பிறரை தாழ்த்துபவன் தானும் தாழ்ந்து போவான் என்பது இயற்கையின் தர்மம்..!

மனிதர்களை திருப்திப்படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை உலகில்நண்பர்களைப் பற்றிபெருமையாக நிறையப் பேசுங்கள்.பிடிக்காதவர்களைப் பற்றிஎந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.

நட்பு என்பது உடன்படிக்கையன்று.கைம்மாறு விரும்பாத ஒரு உறவேயாகும்.

முன்னாள் மறைந்த பாரத பிரதமர் ஜவஹர்லார் நேருவுடன் காந்தியடிகள்

உரையாடுகிறார். (கோப்பு படம்)

எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல.கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத்

தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.

ஒருவர் துன்பப்படும்போதுநிபந்தனை ஏதுமின்றிஉதவுவது தான் நட்பு.

கடவுள் மாறாதவர்.அவரைப்பற்றி மக்கள்தெரிந்து கொண்டிருக்கும்எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன.

அன்பு எங்கிருக்கிறதோஅங்கே கடவுள் இருக்கிறார்.நீங்கள் எதை செய்தாலும்உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும்

உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

தியாகம் தான் வாழ்க்கை.அது இயற்கை கற்றுத் தரும் பாடம்.உன் எதிர்காலம்,உன் இன்றையசெயலை பொருத்தது.

பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால்சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம்.

தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை.மாறாக ஊக்கத்தையே தருகிறது.

பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல,வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது.

மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே,எளிதாக வெற்றிபெற்று விடலாம்.

முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள்,பிறகு கேலி செய்வார்கள்,

அதன் பிறகு சண்டையிடுவார்கள்,கடைசியில் நீ வென்றுவிடுவாய்.

நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு,வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு.உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான்,உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள்என்பதை மறந்துவிடாதே.

நேரான பாதையிலிருந்து விலகியவன் ஒரு போதும் தன்இலக்கை அடையமாட்டான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 March 2024 8:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?