/* */

free apps for parents to protect their children-குழந்தைகள் பாதுகாப்பு இலவச 'ஆப்'கள் (free app)..! பெற்றோரே தெரிஞ்சுக்கங்க..!

Free Apps For Parents To Protect Their Children-தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் கல்வி கற்றலில் இணையம் பெரும் பங்கு வகிக்கிறது. அதை குழந்தைகள் பாதுகாப்பாக கையாள சில 'ஆப்'கள் உள்ளன.

HIGHLIGHTS

free apps for parents to protect their children-குழந்தைகள் பாதுகாப்பு  இலவச ஆப்கள் (free app)..! பெற்றோரே தெரிஞ்சுக்கங்க..!
X

Free Apps For Parents To Protect Their Children-மொபைல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் கல்வியின் நோக்கத்தை எளிதாக கற்றுக்கொள்வதில் மேம்படுத்தியுள்ளன. ஏனெனில் குழந்தைகள் தங்கள் விரல் நுனியில் உலகத்துடன் இணைய முடியும்.

தகவல்களை பெறுவதற்கு எளிதான அணுகுமுறை இருப்பதால் அவர்கள் உண்மையான உலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தை மாற்றியுள்ளது.

இருப்பினும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குழந்தைகளை மோசமான பக்கத்திற்கு இருகி செல்லும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் அவர்கள் பல சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகம்.

எனவே, ஆன்லைனில் குழந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஏதேனும் குறும்புதனமான செயல்களில் ஈடுபடுவதைக்கண்டால் அவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவது பெற்றோரின் கடமையாகும்.

குழந்தைகள் ஆன்லைனில் நல்லவைகளை கற்றுக்கொள்கிறார்களா என்பது தெரியாமல் அவர்களின் வளர்ச்சி குறித்து கவலைப்படும் பெற்றோர் ஆப்களின் அற்புதமான பயன்பாடுகள் மூலம் இந்தக் கவலைகளைத் தீர்க்கமுடியும். ஆன்லைனில் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும் அவர்களை கண்காணிக்கவும் தொழில்நுட்பமே பல தேர்வுகளை நமக்கு வழங்குகிறது.

free apps for parents to protect their children

குழந்தைகளை இணைய வெளிகளில் பாதுகாப்பதற்கு குறிப்பாக பெற்றோருக்கு உதவ பல்வேறு மொபைல் தளங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சில இலவச ஆப் பயன்பாடுகள் இங்கே தரப்பட்டுள்ளன.


Screen Time :

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கேஜெட்களில் செலவிடும் நேரத்தை நிர்வகிக்க இந்த இலவச ஆப்களை பயன்படுத்தலாம்.

ஸ்க்ரீன் டைம், அதாவது மொபைலில் குழந்தைகள் வேலைகள் மற்றும் பணிகளை முடிப்பதற்கு கூடுதல் திரை நேரத்தைப் பெறுவதற்கான ரிவார்டு அம்சம் போன்ற சில சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டுள்ளது. குழந்தைகள் என்ன, எங்கு பார்க்கிறார்கள் போன்றவை குறித்த அறிக்கையைப் பெற்றோர் பெற முடியும்.

free apps for parents to protect their children

குழந்தைகள் புதிய ஆப்ஸ்களை நிறுவச் செல்லும் நேரத்தில் அறிவிப்புகளை பெருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். கையாளப்பட வேண்டிய குழந்தைகள் மற்றும் சாதனங்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.


OurPact Parent :

இந்த அற்புதமான பெற்றோர் கட்டுப்பாட்டு ஆப்பின் பயன்பாடு, மொபைலில் குழந்தைகள் மொபைலில் எவ்வளவு நேரத்தை செலவு செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பெற்றோருக்கு உதவுகிறது. மேலும், அவர்களின் செயல்பாடு மற்றும் இருப்பிடத்தை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க உதவுகிறது.

free apps for parents to protect their children

OurPact Parent :

இந்த செயலியானது ஆப் பிளாக்கர் அம்சங்களுடன் வருகிறது. இது பெற்றோரின் ஒப்புதலுடன் அந்த குறிப்பிட்ட பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது. மிகவும் மதிப்பிடப்பட்ட இந்த திருப்புமுனையான ஆப் பயன்பாடு மிகுந்த பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் பல மொழிகளை கொண்டுள்ளது.


Kidslox

இந்த அற்புதமான பெற்றோர் கட்டுப்பாட்டு ஆப் பயன்பாட்டின் மூலம் குடும்பத்தினரின் மொபைல் பயன்பாட்டு நேரத்தை நன்றாக நிர்வகிக்க முடியும்.

Kidslox பயன்பாடு சாதனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாடுகளை மட்டுமே செயல்பட அனுமதிக்கிறது. மற்றவைகளை தடுக்கிறது. இணையம் மற்றும் இணைய உள்ளடக்கத்தை எளிதாக வடிகட்டலாம்.

உங்கள் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் சாதனங்களை இணைக்க ஒரே ஒரு கணக்கு மட்டுமே தேவை.

free apps for parents to protect their children

தினசரி திரை நேர வரம்புகளை எளிதாக அமைக்கலாம். மேலும் தனிப்பயனாக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் வெவ்வேறு முறைகளுக்கு இடையில் எளிதாக மாறலாம்.


Kid's Shell:

இந்த ஆப் பெற்றோர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பண்பாடாகும். உங்கள் சாதனத்தை உங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்குத் தனியான பாதுகாப்பான செயல்பாடுகளை பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கிறது.

கிட்'ஸ் ஷெல் ஆப்ஸ், அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடுகளை மட்டுமே உங்கள் சிஸ்டத்தில் தொடங்க அனுமதி வழங்குகிறது. ஆப்ஸ் அமைப்புகளுடன் சாதனத்தில் பணம் செலுத்திய பயன்பாடுகளை வாங்குவது போன்ற செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இது பன்மொழி தேர்வு செய்யும் விதத்தில் எளிமையான மற்றும் கூர்மையான செயல்பாட்டுக்கான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இதன் 'சைல்டு லாக்' அம்சம் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் சாதனத்திற்கும் ஒரு பரந்த பாதுகாப்பை வழங்குகிறது.


FamilyTime:

மன அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியான குடும்ப நேரத்தை செலவழிக்கும் வகையில் இந்த ஆப்ஸ் வழங்குகிறது. இது உங்கள் எந்த சாதனத்திற்கும் இணக்கமானது.

free apps for parents to protect their children

FamilyTime ஆப்ஸ், மொபைலைப் பூட்டுவது, ஆப்ஸைத் தடுப்பது முதல் அவர்களின் இருப்பிடங்களைப் பார்ப்பது வரையிலான விருப்பங்களுடன், குழந்தைகளின் சாதனப் பயன்பாட்டைப் பெற்றோர் நெருக்கமாக கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. இந்தப் பயன்பாட்டின் மூலம், பெற்றோர் தினசரி குழந்தைகளுக்கான திரை நேரத்தை அமைத்துக்கொள்ளலாம்.

பெற்றோர் தேவையற்ற கேம்களையும் ஆப்ஸையும் தொலைதூரத்தில் இருந்து கூட கண்காணித்து தடுக்கவும், அவர்கள் எவ்வாறான பயன்பாடுகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்கவும் இந்த ஆப்ஸ் அனுமதிக்கிறது.


Kids Zone:

இந்த இலவசப் பயன்பாடானது, கேஜெட்டை வினாடிக்கு 8 முறை கண்காணிக்கும் வகையில் பிரத்யேகமாக கிட் சேஃப் ஸ்கேனிங் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதனத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மண்டலமாக மாற்றுகிறது.

கிட்ஸ் சோன் ஆப்ஸ், முன்னரே திட்டமிட்டு அமைக்கப்பட்ட நேர இடைவெளிகளுடன் சாதனத்தில் குழந்தையின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சிறப்பு அம்சங்களாக, விளம்பர கிளிக்குகளைத் தடுப்பது மற்றும் மறுதொடக்கம் செய்யப்பட்டால் சாதனத்தை மீண்டும் பூட்டுவது (லாக் செய்வது) ஆகியவை அடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பட்ட தரவு, சாதன அமைப்புகள் மற்றும் கணினி மெனுக்களை அணுக முடியாமல் தடுக்கும்.


Net Nanny:

இந்த அற்புதமான ஆப் பயன்பாடு உங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு பயப்படாமல் பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்குகிறது.

குழந்தைகள் பாதுகாப்பான உலாவலுக்காக தனிப்பயன் மொபைல் உலாவியை Net Nanny ஆப்ஸ் வடிவமைக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் நடந்தால் பெற்றோருக்கு மின்னஞ்சல் அறிவிப்புகள் மூலம் தெரிவித்துவிடும்.

free apps for parents to protect their children

டீன் ஏஜ் மற்றும் குழந்தை வயதுக்கு ஏற்ப தேவை இல்லாததை வடிகட்டும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டிற்கான நேரக் கட்டுப்பாடுகளையும் பெற்றோர்கள் அமைத்துக் கொள்ளலாம்.


Toddler Lock

இந்த இலவச பயன்பாட்டு ஆப், பெற்றோர் தங்கள் குழந்தைகளை தங்கள் கேஜெட்களுடன் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

டாட்லர் லாக் ஆப்ஸ் குழந்தைகளுக்கு வடிவங்கள் மற்றும் வண்ணங்களைப் பற்றிக் கற்பிக்கிறது. மேலும், பிற ஃபோன் அமைப்புகள் மற்றும் தரவை அணுக அவர்களுக்கு நேரமளிக்காமல் பொழுதுபோக்கின் மூலம் அவர்களை திசை திருப்பி அதற்குள் நிலைநிறுத்துகிறது.

விருப்பமான airplane mode பயன்பாட்டு முறையுடன் செயல்படக்கூடியது. கூடவே சாதனத்தைப் பயன்படுத்தும் போது செல் கதிர்வீச்சு இல்லாத அம்சம் உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.


Funamo:

கேஜெட் பயன்பாட்டின் போது குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விரிவான தீர்வை இந்த ஆப் பயன்பாடு வழங்குகிறது.

ஃபுனாமோ பயன்பாட்டில் சாதன கண்காணிப்பு, வலை வடிகட்டுதல் மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடு ஆகியவை இணையம் மூலம் தேவையற்ற தரவு அணுகலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கின்றன.

free apps for parents to protect their children

ஆபாச இணைய தளங்கள் ஆப்பின் வடிகட்டுதல் தொழில்நுட்பம் மூலமாக தானாகவே தடுக்கப்படும். இது இருப்பிடம் குறித்த சரியான அறிக்கை, உண்மையான நேர கண்காணிப்பை அனுமதிக்கிறது. மேலும், அனைத்து முக்கிய இணைய உலாவிகளிலும் எளிதாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிளவுட் அடிப்படையிலான தீர்வு, ஆன்லைனில் சாதன அமைப்புகளை மாற்ற பெற்றோருக்கு அனுமதி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Secureteen:

இந்த அற்புதமான பெற்றோர் கட்டுப்பாட்டு ஆப் பயன்பாடு, பெற்றோர் தங்கள் டீனேஜ் குழந்தைகளின் மொபைல் பயன்பாடு குறித்து எவ்வித கவலையுமின்றி அமைதியாக இருக்க பெற்றோருக்கு உதவுகிறது.

செக்யூரெடீன் செயலியானது பாதுகாப்பான போர்ட்டலுடன் செயல்படுகிறது. இது குழந்தையின் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கிறதுடன் பொருத்தமற்ற தேடல்களை வடிகட்டுகிறது. குழந்தைகள் திறந்து பதிவிறக்கிய ஆப்ஸின் தகவல்கள் குறித்து பெற்றோருக்குத் தகவல் அனுப்பும்.

TeenSafe ஆப் பிளாக்கர்(TeenSafe's app blocker ) பொருத்தமற்ற பயன்பாடுகளைத் தடுக்கிறது. பெற்றோருக்கு ஒரு தெளிவான அறிக்கை அனுப்பப்படும். அதில் குழந்தையின் இருப்பிடம் மற்றும் கேஜெட் பயன்பாடுகள் குறித்த தெளிவான தகவல்கள் சுட்டிக்காட்டப்படும்.

அனைத்து Facebook செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம். மேலும் நண்பர்களுக்கு சந்தேகத்திற்குரிய இடுகைகள் அல்லது தொடர்புகள் குறித்த குறிப்பு தகவல்கள் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.


Kids Place:

இந்த இலவச ஆப்ஸ் உங்கள் குழந்தைகளை ஃபோன் கால் செய்வதிலிருந்தும், புதிய ஆப்ஸை அணுகுவதிலிருந்தும், பெற்றோரின் அனுமதியின்றி குறுஞ்செய்தி அனுப்புவதிலிருந்தும் கட்டுப்படுத்துகிறது.

கிட்ஸ் பிளேஸ் ஆப்ஸ் எந்த கட்டணமும் அல்லது இணைய இணைப்பும் இல்லாமலேயே இயங்கக்கூடியது. இந்த ஆப்ஸ் மூலம், அனுமதிக்கப்பட்ட செயல்களுடன் மட்டுமே குழந்தைகளுக்கான தனிப்பயன் முகப்புத் திரையை சாதனம் வழங்குகிறது.

free apps for parents to protect their children

கிட்ஸ் பிளேஸ் இயங்கும் போது, உள்வரும் அழைப்புகள் தானாகவே துண்டிக்கப்படும். செருகுநிரல் ( plugin based)அடிப்படையிலான வடிவமைப்பு வீடியோக்கள், படங்கள் மற்றும் இணையதள உள்ளடக்கத்தை வடிகட்டுகிறது. இதனால் குழந்தைகள் தேவை இல்லாததை தேட முடியாது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...