பி.பார்ம்.,(B.Pharm.) படிங்க..பெஸ்ட் வேலை..வாங்குங்க..!
வளர்ந்து வரும் இந்திய மருந்தியல் துறையால், பார்மசி படிப்புக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகமாகி வருகிறது.
HIGHLIGHTS

(B.Pharm) இளங்கலை மருந்தியல் பட்டபடிப்பு நான்கு ஆண்டுகால படிப்பாகும். பார்மசி துறையில் பட்டய படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களை மருந்தாளுனர்கள் (Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்) என்று அழைப்பார்கள்.பலநாடுகளில், மருந்தாளுநராகப் பயிற்சி பெறுவதற்கு இந்தப்பட்டம் ஒருமுன் நிபந்தனையாகும். மருந்தாளுநர்கள் புதிய மருந்துகள் மற்றும்சி கிச்சைகளை ஆராய்ச்சி செய்து, வடிவமைத்து, உருவாக்கி, சோதனைசெய்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்கிறார்கள். இந்தியாவில் பலவிதமான பார்மசி பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன: டிப்ளமோ இன்பார்மசி (டிபார்ம்), இளங்கலை மருந்தியல் (பிபார்ம்), மாஸ்டர் ஆஃப் பார்மசி (எம்.பார்ம்), மருந்தியல் அறிவியல் முதுகலை [MS(Pharm)] மற்றும் மருந்தியல் முதுகலை தொழில்நுட்பம் [ MTech (Pharm)], மருந்தியல்மருத்துவர் (PharmD).
இந்தியாவில் தற்போதுள்ள பாடத்திட்டங்களின்படி, பி.பார்ம். பட்டம் முக்கியமாக மருந்து தயாரிப்பு துறையில் பணிபுரிய மாணவர்களை தயார் படுத்துகிறது.
கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது:
இளங்கலை மருந்தியல் பட்டபடிப்பு (B.Pharm) படிக்க விரும்பும் அனைத்து மாணவமாணவிகளும், தாங்கள் சேரவிரும்பும் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் இந்திய பார்மசி கவுன்சில்(PCI) அங்கீகாரம் பெற்றுள்ளதா என முதலில் உறுதி செய்யவேண்டும். மேலும் அந்தகல்லூரி, பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழகத் துறையில் இணைந்த கல்லூரியா என உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டின் விவரங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கின்றன. பல்கலைக்கழகங்களால் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
தகுதி :
தேர்வுவகை:ஒருவருடB.Pharmபடிப்பில் 2 செமஸ்டர்கள் உள்ளன. நான்கு ஆண்டுகால B.பார்ம் படிப்பில் மொத்தம் 8 செமஸ்டர்கள் உள்ளன. குறைந்தபட்ச தகுதி : பி.பார்ம் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு 17 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். 10+2/அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் அல்லது PCI-அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் D.பார்ம் படிப்பை முடித்திருக்கவேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் (மொத்தம்): அறிவியல் பாடங்களில் 10+2 இல் குறைந்தபட்சம் 50%.மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.
பிரமாண்ட வளர்ச்சி :
என்ன விதமான வேலைவாய்ப்புகள்?: பி.பார்ம் முடித்த பிறகு நீங்கள் மேல்படிப்பை தொடரலாம் அல்லது சொந்தமாக தொழில் தொடங்கலாம். இந்திய மருந்து சந்தை தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவில் மருந்து உற்பத்தித்துறை 3% என்ற ஒற்றை இலக்கவளர்ச்சிக்கு மாறாக, கடந்த ஓராண்டில் கோவிட்-19 மருந்து தயாரிப்புகளின் வளர்ச்சியால் இந்திய மருந்து உற்பத்தித் துறை சுமார் 15% இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய பொருளாதார ஆய்வு 2021 இன்படி, அடுத்த பத்தாண்டுகளில் உள்நாட்டு சந்தை 3 மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்து உற்பத்தி துறையின் வளர்ச்சி, பி.பார்ம் படித்த மற்றும் படிக்கப்போகும் மாணவர்களுக்கு பெரிய வேலைவாய்ப்புகளை மருந்து உற்பத்திதுறையில் உருவாக்குகிறது.
இதரவேலைவாய்ப்புகள்: மிக பிரகாசமான வேலைவாய்ப்ப்புகள் பி. பார்ம் படிப்பிற்கு உண்டு. பார்மா பட்டதாரிக்கு வானமே எல்லை, தகுதி, மற்றும் திறமையை பொறுத்து, பலவேலைவாய்ப்புகள் உள்ளன.
வேலைவாய்ப்புகள் :
1. அரசுத்துறைமருந்துஆய்வாளர்வேலை (Drug inspector)
2. மருந்துபகுப்பாய்வுவேதியியலாளர்(Analytical Chemist)
3. மருந்துஉற்பத்திவேதியியலாளர்(Analytical Chemist)
4. மருத்துவமனைமருந்தாளுனர்
5. மருத்துவபிரதிநிதிகள் (Medical Representatives)
6. கிளினிக்கல்ரிசர்ச்அசோசியேட்
7. குவாலிட்டிகண்ட்ரோல்அசோசியேட்
8. ஃபார்முலேஷன்டெவலப்மென்ட்அசோசியேட்
9. அறிவியல்எழுத்தாளர் (Scientific Writer)
10. ஆராய்ச்சிமற்றும்மேம்பாட்டுசயின்டிஸ்ட்(R&D Scientist)
விபரங்கள் அறிய :
நீங்கள்பி.பார்ம் பற்றி மேலும் அறிய JKKN மருந்தியல் கல்லுரியை அணுகவும். இக்கல்லூரி இந்திய பார்மசி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது J. K. K. ரங்கம்மாள் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளமுகவரி: https://pharmacy.jkkn.ac.in/ Ph: 9345855001
அரசுகல்லூரிகள் சென்னை, கோவை, மதுரை, தஞ்சைஉள்ளிட்டசிலநகரங்களில்உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பார்மசி கல்லுரிகளின் விபரம் அறிய கீழே உள்ள லிங்கை 'கிளிக்' செய்யவும்.
http://www.highereducationinindia.com/india/pharmacy-institutes-tamil-nadu.php
இதுவரை பி.பார்ம் பற்றி அதிகம் அறியாதோரும் கூட நம்பி சேரக்கூடிய ஒரு மிக நல்ல படிப்பு பி.பார்ம். நம்பி பி.பார்ம் படிங்க பெஸ்ட் வேலையை வாங்குங்க.
-by Dr.N.Venkateswaramurthy M.Pharm., Ph.D. from ஜே.கே.கே.என் pharmacy college.