/* */

Buddha Quotes in Tamil நல்வாழ்க்கைக்கான புத்தரின் அர்த்தமுள்ள பொன்மொழிகள்.....

Gautama Buddha Quotes in Tamil வாழ்க்கையின் நல்லொழுக்க நெறிகளையும் போதனைகளையும் கௌதமபுத்தர் நமக்கு வழங்கியுள்ளார்.அவரது பொன்மொழிகள் பற்றி பார்ப்போமா?

HIGHLIGHTS

Gautama Buddha Quotes in Tamil
X

buddha quotes in tamil


புத்தர் என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்இவரது இயற்பெயர் "சித்தார்த்த கௌதமர்" என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்

சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார்.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.


கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். ராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை கூறினார். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார்.

புத்தரின் போதனைகள் இதோ.....

புயலுக்கு அசையாத பாறை போல புகழ்ச்சிக்கு மயங்காமல் வாழுங்கள்.

அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை - புத்தர்

தன்னை அறிந்தவன் வெற்றி, தோல்வி எது வந்தாலும் தலை வணங்காமல் வாழலாம்.

மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே வழி.

ஆசையை ஒழித்தால் தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை!


எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பதே பண்பட்ட மனிதனின் அடையாளம்.

தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாகும்.

அடக்கம் இன்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.

பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில், உங்கள் சுமையை வீசி ஏறியுங்கள்- புத்தர்

உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களை விடவும் உங்களை அதிகம் தொல்லை செய்வது, உங்கள் எண்ணங்கள் மட்டுமே! - புத்தர்

நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.

மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையெல்லாம் பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.

உங்களுடைய வார்த்தைகளால் ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல.

பொய்யைத் திரித்து கூறி பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம்.

தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து வருந்துவது அறிவுடைமையாகாது.

பெண்களின் நிம்மதியே நாட்டின் நிம்மதி

வீண் பேச்சால் தேவையற்ற சிரமம் வரும் என்பதை உணர்ந்து அதைத் தவிருங்கள்!


எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்!

உங்கள் மனம் தான் அனைத்துமே! நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்!

புரிதல் எங்கே இருக்கிறதோ, அங்கு தான் அன்பு பிறக்கும்!

உங்கள் மனதை நீங்கள் ஆளுங்கள் இல்லாவிட்டால், அது உங்களை ஆளும்!

அளவுக்கு அதிகமாக யோசிப்பது தான் மகிழ்ச்சியற்ற தன்மைக்கான ஒரே காரணம்!

அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! எனவே அதை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு அதன்மேல் நம்பிக்கை வையுங்கள்!

உங்கள் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறிந்த பின்னரும்கூட உங்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்துபவன் தான் உண்மையான நண்பன்.

மற்றவர்களிடம் உள்ள குறைகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிது! ஆனால் தன்னிடம் உள்ள குறைகளை கண்டு பிடிப்பதுதான் மிகவும் கடினமானது!

நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். எதை உணர்கிறீர்கள், அதையே ஈர்ப்பீர்கள். எதை கற்பனை செய்கிறீர்களோ, அதையே உருவாக்குவீர்கள்!

பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில், உங்கள் சுமையை வீசி ஏறியுங்கள்!

தீமையைமையால் வெல்லுங்கள்! பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்!

உங்களை நீங்கள் முழுமையாக நேசித்தால் ஒருபோதும் மற்றவர்களை வெறுக்க மாட்டீர்கள்!

பயனில்லாத சொற்களைப் பேசுபவன், வாசனை இல்லாத மலருக்கு சமமானவன். மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், மவுனமாக இருப்பதே மேல்!

மற்றவர்களிடம் உள்ள குறைகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. தன்னிடம் உள்ள குறைகளை கண்டு பிடிப்பது தான் மிகவும் கடினமானது.

buddha quotes in tamil


சூரியனையும் சந்திரனையும் நம்மால் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவை அதற்குரிய நேரத்தில் தான் பிரகாசிக்கும். அதுபோலவே ஒருபோதும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.

கடந்த காலம் உங்களை இன்னும் சிறந்தவனாக தான் மாற்றவேண்டும், கசப்பானவனாக அல்ல.

புரிதல் எங்கே இருக்கிறதோ, அங்கு தான் அன்பு பிறக்கும்.

உங்கள் மனம் தான் அனைத்துமே. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையை பற்றி முழுமையாக அறிந்த பின்னரும் கூட உங்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்துபவன் தான் உண்மையான நண்பன்.

ஒருநாள் உங்களது வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்கள். அப்போது ஒன்றுமே இல்லாத விஷயங்களுக்காக ஏன் இவ்வளவு கவலைப்பட்டோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

உங்கள் மனதை நீங்கள் ஆளுங்கள். இல்லாவிட்டால் அது உங்களை ஆளும்.

அளவுக்கு அதிகமாக யோசிப்பது தான் மகிழ்ச்சியற்ற தன்மைக்கான ஒரே காரணம்.

தினமும் காலையில் நாம் புதிதாக பிறக்கிறோம். இன்று நாம் எதை செய்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியானது.

உங்களை நீங்கள் முழுமையாக நேசித்தால், ஒருபோதும் மற்றவர்களை வெறுக்க மாட்டீர்கள்.


அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே அதை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு அதன்மேல் நம்பிக்கை வையுங்கள்.

நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். எதை உணர்கிறீர்கள, அதையே ஈர்ப்பீர்கள். எதை கற்பனை செய்கிறீர்களோ, அதையே உருவாக்குவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உண்மையாகவே மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அதற்கு உங்களது மனதில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.

மற்றவர்களை கைப்பற்றுவதை விட உங்களை நீங்களே கைப்பற்றுவது தான் மிகப்பெரிய இலக்கு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Feb 2024 5:46 AM GMT

Related News