/* */

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த நர்சிங் பட்டம் வழங்கும் கல்லூரிகள் எவை?

Top 5 nursing colleges in erode-ஈரோடு மாவட்டத்தில் நர்சிங் பட்ட படிப்புகளுக்கான கல்லூரிகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த நர்சிங் பட்டம் வழங்கும் கல்லூரிகள் எவை?
X

bsc nursing colleges in erode-நர்சிங் படிப்பு (மாதிரி படம்)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறந்த நர்சிங் கல்லூரிகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதன் சிறப்பை பெறுகின்றன. இந்த தரவரிசை கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதி, பணிசெய்யும் ஆசிரியர்களின் தரம் போன்றவைகளின் அடிப்படையில் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விபரம்.

JKKN காலேஜ் ஆஃப் நர்சிங் அண்ட் ரீசர்ச்

1. JKKN காலேஜ் ஆஃப் நர்சிங் அண்ட் ரீசர்ச்

Top 5 nursing colleges in erode-சாதாரண கிராமத்து மாணவர்களும் மருத்துவக்கல்வி பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான், JJKKN காலேஜ் ஆஃப் நர்சிங் அண்ட் ரீசர்ச். இங்கு M.Sc., B.Sc., மற்றும் P.B.B.Sc.,(Post Basic Bachelor of Science) பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. நல்ல காற்றோட்டமான வகுப்பறைகள்,நவீன ஆய்வுக்கூடம், தனி மருத்துவமனை, தனித்தனி விடுதி, மருத்துவ நூல்கள் நிறைந்த நூலகம், சிறந்த அனுபவம் மிக்க பேராசிரியர்கள் என சிறப்பான உட்கட்டமைப்பை பெற்றுள்ளது. INC அங்கீகாரம் பெற்றது.

நந்தா நர்சிங் கல்லூரி

2. நந்தா நர்சிங் கல்லூரி

நந்தா செவிலியர் கல்லூரி ஈரோட்டில் அமைந்துள்ளது. 2007ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தனியார் கல்லூரி. இந்த கல்லூரி INC அங்கீகாரம் பெற்றது. நந்தா நர்சிங் கல்லூரி, 3 பிரபலமான பட்ட படிப்புகளை வழங்குகிறது. அவை GNM, BSc, MSc ஆகும்.

வேளாளர் செவிலியர் கல்லூரி

3. வேளாளர் செவிலியர் கல்லூரி

வேளாளர் செவிலியர் கல்லூரி ஈரோட்டில் உள்ளது. 2008ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தனியார் கல்லூரி. இது இந்திய நர்சிங் கவுன்சில் (INC) அங்கீகாரம் பெற்றது. வேளாளர் செவிலியர் கல்லூரி, பிரபலமான BSc நர்சிங் பட்ட படிப்பை வழங்குகிறது. கற்பித்தல் தவிர, வேளாளர் செவிலியர் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டுகிறது.

தன்வந்திரி மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி.

4. தன்வந்திரி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

தன்வந்திரி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஈரோட்டில் அமைந்துள்ளது. 1992ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தனியார் கல்லூரி. இந்த கல்லூரி யுஜிசி அங்கீகாரம் பெற்றது. இந்திக்கு மருத்துவ தொழிற்கல்வி, பாராமெடிக்கல், நர்சிங் ஆகிய 3 பிரிவுகளில் 6 படிப்புகளை வழங்குகிறது. இங்கு வழங்கப்படும் பிரபலமான பட்டங்கள் BSc, GNM, MSc, Diploma ஆகியவை ஆகும்.

Updated On: 3 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்