/* */

போனஃபைடு சர்டிபிகேட்டின் உண்மையான பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

Bonafide Certificate Meaning in Tamil-போனஃபைடு சர்டிபிகேட் என்பது நம்மைப் பற்றிய உண்மையான தகவல் குறித்து அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளால் வழங்கப்படும் சான்றிதழ்... படிச்சு பாருங்க..

HIGHLIGHTS

போனஃபைடு சர்டிபிகேட்டின்  உண்மையான  பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?..
X
பள்ளி,கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் உறுதிச்சான்றிதழ் மாடல் (கோப்பு படம்)

Bonafide Certificate Meaning in Tamil

போனபைடு சர்டிபிகேட் என்பதன் தமிழாக்கம்தான் உறுதிச் சான்றிதழ் என்பதாகும். நீங்கள் வசிக்கும்இடத்தின் முகவரி பற்றிய சான்றிதழைப் பெற வேண்டுமாயின் அது விஏஓவிடம் இருப்பிடச்சான்று பெற வேண்டும்.விஏஓ என்பவர் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி என்பதால் அதுசெல்லுபடியாகிறது. அதுபோல் இந்த உறுதிச்சான்றிதழையும் நாம் கெஜடட் ஆபீசர் ரேங்கில் உள்ளவர்களிடம் இருந்துதான் பெறவேண்டும்.

உறுதிச்சான்றிதழின் பயன்கள் பல உண்டு. அது அவரவர்களின் செயல்பாடுகளைப் பொருத்து அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.உறுதிச் சான்றிதழ் என்பது நிறுவனம் அல்லது கல்வி நிறுவனத்துடனான உங்களுடைய தொடர்பினைச் சரிபார்க்கும் ஆவணமாக கருதப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரைப் பொறுத்த அளவில் இந்த சான்றிதழ் அவர்கள் அந்த நிறுவனத்தில் படித்ததற்கான உண்மைஆதராமாக கருதப்படுகிறது.வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்க விரும்புவோர் விசா எடுக்க வேண்டும் அதற்கு இச்சான்றிதழ் பெருமளவில் பயனளிக்கிறது. மேலும் வேலை குறித்த தேடல்கள் , வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் கடன் பெறவும் இந்த உறுதிச்சான்று உபயோகப்படுகிறது.

*பெருநகரங்களில் பள்ளி, கல்லுாரி மற்றும் தினந்தோறும் அரசு நகர பஸ்களில் பயணம் செய்பவர்கள் பஸ் சீசன் டிக்கெட் பெறுவதற்கு இந்த சான்றிதழ் உபயோகமாகிறது.

*பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அந்த விண்ணப்பத்தோடு இணைக்கும் சான்றாக இது பயன்படுகிறது.

*பல நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற இந்த சான்றிதழை மாணவர்கள் தரவேண்டியதிருக்கும். அதற்கும் பயனளிக்கிறது.

*போக்குவரத்து அதிகாரிகளிடம் டிரைவர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது இந்த சான்றிதழ் உண்மையான அடையாளமாக தேவைப்படலாம்.

*பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்தச் சான்றிதழை காண்பித்தால் மட்டுமே ஒரு சில கருத்தாய்வுக்கூட்டம் பயிற்சிப்பட்டறைகளுக்கு அனுமதி பெறமுடியும்.

*பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உதவித்தொகையினைப் பெறவும் இது பயன்படுகிறது.

Bonafide Certificate Meaning in Tamil

சான்றிதழ் வகைகள்

இவற்றுள் இரண்டு வகைகள் உண்டு. தற்காலிக சான்றிதழ் மற்றும் நிரந்தர உறுதிச் சான்றிதழ்.

தற்காலிக உறுதிச்சான்றிதழ்கள் ஆறு மாதங்களுக்குச் செயல்படும், மேலும் அவை ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.

நிரந்தர உறுதிச்சான்றிதழ்

நிரந்தர உறுதியான சான்றிதழைப் பெற, உங்கள் பாடநெறியின் நீளத்திற்கு இது செல்லுபடியாகும்.

Bonafide Certificate Meaning in Tamil

மாணவர்களுக்கான சான்றிதழ்

கல்வி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு மாணர் மற்றும் மாணவர் என்று பெயரிடப்பட்ட நபரினைச் சரிபார்க்கும் முக்கிய ஆவணமாக உறுதிச்சான்றிதழ் கருதப்படுகிறது.

மேலும் உங்கள் பெயர் பல்கலைக்கழம் மற்றும் கல்லுாரியில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சரிபார்க்கும் முக்கிய ஆவணமாக உறுதிச்சான்றிதழ் கருதப்படுகிறது.

மாணவன் பெயர், பட்டியல் மற்றும் எண்கள் பாடத்தின் நீளம் போன்ற மாணவர் விபரங்கள் முழுமையாக இந்த சான்றிதழில் சேர்க்கப்பட்டுள்ளதால் இது மாணவர்களைப் பொறுத்தவரை முக்கிய அடையாள ஆவணமாகவும்இதனைக் கருதலாம்.

பணியாளர்களுக்கான உறுதிச்சான்றிதழ்

ஒருநிறுவனத்தில் ஒருவர் பணியாளராக பணிபுரிந்ததற்கு, அல்லது பணியில் இருந்துவருகிறார் என்பதற்கு முழுமையான ஆதாரமாக இந்த ஆவணத்தினை கருதலாம். மனிதவளத்துறையானது இந்த சான்றிதழை வழங்குகிறது. மேலும் புதிய பணியாளர்களை உள்வாங்குவதற்காக இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் நிறுவனத்தின் பாதுகாப்பிற்கும் அதாவது மோசடி, மற்றும் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும்இந்த ஆவணங்கள் பெரிதும் பயனளிக்கிறது.

ஸ்காலர்ஷிப் பெறுபவர்களுக்கு

பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்பிற்கு இது தகுந்த ஆதாரமாக கருதப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கி வருகிறது. இதுபோன்ற நிறுவனங்களுக்கு இந்த உறுதிச்சான்றிதழானது முழுவிபரஙகளுடன் வழங்கப்படுவதால் பிரச்னைகளின்றி அவர்கள் வழங்க இது துணைபுரிகிறது.இந்த உறுதிச்சான்றிதழானது அரசிதழ் பெற்ற அதிகாரியின் கையொப்பம் அவசியம் ஆகும். (கெஜட்டட் ஆபீஸர் ).

பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மற்றும் வங்கிக் கணக்கு திறப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, பள்ளி அல்லது கல்லூரி போன்ற எந்தவொரு அதிகாரத்திடமிருந்தும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதியான சான்றிதழைப் பெறலாம். வழங்கும் அதிகாரியால் வழங்கப்படும் உறுதியான சான்றிதழில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை மற்றும் அங்கீகாரத்தின் கையொப்பங்கள் இருக்க வேண்டும். "அது யாரைப் பற்றியது" என்பது உறுதியான சான்றிதழில் உள்ள வணக்கம் மற்றும் அதற்கான காரணம் வெளியீடு குறிப்பிடப்பட வேண்டும். Bonafide சான்றிதழில் பெயர், பாடநெறி, நீளம் மற்றும் பிற அத்தியாவசியத் தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும்.

சான்றிதழ் விபரங்கள்

நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி

மாணவரின் பெயர் மற்றும் பட்டியல் எண்

பாடநெறி காலம்

வழங்கப்பட்ட தேதி மற்றும் செல்லுபடியாகும் காலம்

வழங்கும் அதிகாரத்தின் கையொப்பம்

பணியாளரின் விவரங்கள்

**********************************************

விண்ணப்பிக்கும் முறை

அனுப்புநர்

கே. முருகன்( மாடலுக்காக)

த/பெ. கந்தசாமி,

முதலாம் ஆண்டு வேதியியல்,

தஞ்சாவூர்..

பெறுநர்

உயர்திரு. கல்லுாரி முதல்வர் அவர்கள்,

அரசு கலைக்கல்லுாரி,

தஞ்சாவூர்

பொருள்: உறுதிச்சான்றிதழ் வழங்க வேண்டி விண்ணப்பித்தல் தொடர்பாக...

நான் நமது கல்லுாரியில் முதலாம் ஆண்டு வேதியியல் பிரிவில் சேர்ந்து பயின்று வருகின்றேன்.எனது ரோல் நெ;che 87878 ஆகும். மேலும் இந்த நிதியாண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற உறுதிச் சான்றிதழ் தேவைப்படுவதால் எனக்கு வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடம்: இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

நாள்:

இணைப்பு

மாணவர் அடையாள அட்டை நகல்

********************************************************************************************************************************************************************

பல்கலைக்கழகம் அல்லது கல்லுாரி முதல்வர் , டீன், ஆகியோரால் வழங்கப்படும் உறுதிச்சான்றிதழ் மாடல் (கோப்பு படம்)

********************************************************************************************************************************************************************


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 6:27 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு