/* */

நீட் தேர்வு ஹால் டிக்கெட் : நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை (11.07.2022) திங்கட்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

HIGHLIGHTS

நீட் தேர்வு ஹால் டிக்கெட் : நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்
X

2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெற உள்ளது.

நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் எழுத முடியும். கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது கொரோனாவை கருத்தில் கொண்டு 200 வினாக்கள் கொடுத்து 180 வினாக்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு தேர்வுக்கான நேரத்தை அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும்

இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை (11.07.2022) திங்கட்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 July 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?