/* */

abdul kalam history in tamil-'அக்னிச் சிறகை' விரித்த அப்துல் கலாம்..! மனிதரில் மாணிக்கம்..!

Abdul Kalam History in Tamil-மாணவர்கள் அறிவில் தங்களை எப்படி உயரத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம், மாணவர்களுக்கான ரோல் மாடல், அப்துல் கலாம் ஐயா.

HIGHLIGHTS

abdul kalam history in tamil-அக்னிச் சிறகை விரித்த அப்துல் கலாம்..! மனிதரில் மாணிக்கம்..!
X

abdul kalam history in tamil-முன்னாள் குடியரசுத்தலைவர், மறைந்த அப்துல் கலாம்.(கோப்பு படம்)

abdul kalam history in tamil-ஆசிரியர் தினத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயாவின் வரலாற்றை Instanews.city செய்தி தளத்தில் எழுதுவதில் பெருமைகொள்கிறோம். ஓய்வுக்குப்பின்னரும் மாணவர்களுக்காகவே தனது நேரத்தை செலவிட்டு அவர்களின் அறிவுக்கூர்மையை தீட்டுவதில் முனைப்புடன் இருந்தார். மாணவர்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கிவிழுந்து இன்னுயிர் துறந்தார்.

உலகம் வியந்த விஞ்ஞானி

இந்திய குடியரசுத்தலைவராக உயர்ந்தவர், அற்புத பேச்சாளர், உலகம் வியந்த விஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன், தலைசிறந்த ஆசிரியர், அனைவராலும் விரும்பப்படும் எளிய மனிதர், சிறந்த நூலாசிரியர், கருணை உள்ளம் கொண்டவர், தனது அறிவியல் திறன் மக்களுக்கு ஏதாவது ஒரு வழியில் பயனுற வேண்டும் என்று எண்ணியவர், இந்தியாவின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தவர், இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். இப்படி பல முன்னுதாரணங்களுக்கு சொந்தக்காரர்தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம். இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவர். மனிதர்களில் மாணிக்கம்.


இளமை வாழ்க்கை

கலாம், 1931ம் ஆண்டு, அக்டோபர் 15ம் நாளில் பிறந்தார். இவரது தந்தை, ஜைனுலாப்தீன்; தாய் ஆஷியம்மா. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் பிறந்தார். இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில், பள்ளிப்படிப்பை தொடங்கினார்.

அவரது குடும்பம் ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவைத்தது. படிக்கும் காலத்திலேயே குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில், செய்தித்தாள்கள் விநியோகம் போன்ற வேலைகளை செய்து குடும்பத்திற்கு உதவினார். கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார்.

அறிவியல் விஞ்ஞானி

abdul kalam history in tamil

1954ம் ஆண்டில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1955ம் ஆண்டில் விண்வெளி பொறியியல் படிப்பை சென்னை எம்.ஐ.டி-யில் தொடர்ந்தார். 1960ம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சிப்பணியைத் தொடங்கிய அப்துல் கலாம், இந்திய ராணுவத்திற்காக முதன் முதலில் ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார்.

பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.

விருது

விண்வெளித்துறையில் புரிந்த சாதனைகளுக்காக, 1981ம் ஆண்டு அவருக்கு "பத்ம பூஷன்" விருது வழங்கப்பட்டது. 1999ம் ஆண்டு, இவரது தலைமையில் பொக்ரான் அணு ஆயுத சோதனை நடைபெற்றது. இந்த நிகழ்வை உலகமே வியந்து பார்த்தது. இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், ஐந்து ஏவுகணைத் திட்டங்களை செயலாக்குவதற்கு பெரும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 2002ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான, பாரத ரத்னாவை, மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. 2007ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த கலாமை 'மக்களின் ஜனாதிபதி' என்று அனைவரும் அன்போடு அழைத்தனர்.

உயிரிழப்பு

abdul kalam history in tamil

2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஏ.பி.ஜே அப்துல் கலாம், பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் முக்கியமானவை, அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் போன்றவையாகும். பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், "கனவு காணுங்கள். அந்த கனவை நனவாக்க பாடுபடுங்கள்" என்ற அவரது வார்த்தைகள் என்றும் நமக்கெல்லாம் ஒரு வாழ்க்கைப் பாடமாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Updated On: 5 Sep 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  5. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  6. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  9. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை