/* */

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன? என்பது தெரியுமா?...படிங்க...

which food have immunity power ? நோய் வராம தடுக்கணும்னா என்னங்க செய்யணும். நல்ல சத்தான உணவு, சுற்றுப்புறச்சூழலை சுத்தமாகவைத்துக்கொள்ளுதல், முறையான உடற்பயிற்சி, உடலுழைப்பு, உள்ளிட்டவைகளை ஃபாலோ பண்ணாவே போதுங்க...நோய் நம்மை அண்டாதுங்கோ....

HIGHLIGHTS

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்   உணவுகள் என்னென்ன? என்பது தெரியுமா?...படிங்க...
X

நோய் எதிர்ப்பு தன்மை அதிகம் கொண்ட உணவுப்பொருள்களைத் தேடிச் சாப்பிடுங்க  (கோப்பு படம்)

which food have immunity power ?

மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருமே நோயால் பாதிப்படைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.அந்த வகையில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நோய்களுக்கு எதிராக போராடி இறுதியில் மரணமடைகின்றனர். ஏங்க ...நோய் தாக்காமல் வாழவே முடியாதா?... என கேள்வி கேட்பவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் சொல்லலாம். இந்த பூமியில் வாழும் எந்த ஒரு மனித இனமும் நோய் தாக்குதலில் தப்பிக்கவே முடியாது. அதுபோல் தப்பிக்க வேண்டும் என்றால் நோய் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதாவது உணவுக்கட்டுப்பாடு, உடல் உழைப்பு, உடற்பயிற்சி போன்றவைகளில் ஆர்வம் காட்டி நோய் வராமல் தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் அதனையும் மீறி தாக்குவதுண்டு.

சரிங்க... நம்மை நோய் எளிதாக தாக்குவதலிருந்து தப்பிப்பது எப்படி? என்று கேட்பவர்களுக்காகவேதான் இந்த செய்திங்க...அதாவது நம் உடம்பில் போதிய நோய் எதிர்ப்புச்சக்தியானது இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் எளிதாக நோய் தாக்கிவிடும். இதனால்தான் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் யார் யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததோ அவர்கள் அனைவருமே பாதிப்படைந்தனர். இதில் ஒரு சிலர் மீளாமல் உயிரிழந்த கதையும் உண்டு.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் மற்றும் உள்ள சத்தான பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்க வாய்ப்புண்டு. அந்த பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்...வாங்க...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்கள்

பூண்டு

பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், நல்லகுணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுகளையும் கொல்லவல்லது.

which food have immunity power ?


which food have immunity power ?

இஞ்சி

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்டுகள் எனப்படும் உடலைக் காக்கும்பொருள் நிறைந்துள்ளது.

which food have immunity power ?


which food have immunity power ?

தயிர்

தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கிய மன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

which food have immunity power ?


which food have immunity power ?

பார்லி,ஓட்ஸ்

பார்லியும், ஓட்ஸீம் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டாக்ளுக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும்.

which food have immunity power ?


which food have immunity power ?

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திற்கு உதவும். வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

which food have immunity power ?


which food have immunity power ?

காளான்

உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்தஅணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க்சத்து மற்றும் பிற ஆரோக்யம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

which food have immunity power ?


which food have immunity power ?

பழங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1,சி, மற்றும் உலோகச்சத்துகள் அதிகம் உள்ளதால் உலகிலேயே மிக ஆரோக்யமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.

which food have immunity power ?


which food have immunity power ?

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்கள் ப்ளுபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிப்பழங்கள், உடலைக்காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளுபெர்ரி பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவைக் கொண்டுள்ளதால் இவை ஆரோக்யமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளுட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது. ப்ளுபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிப்பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவைக் கொண்டுள்ளதால் , இவை ஆரோக்யமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளுட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துகளும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

which food have immunity power ?


which food have immunity power ?

கீரைகள், காய்கறிகள்

பச்சை நிறக்கீரைகள், மற்றும் காய்கறிகள் வைட்டமின்பி1, ஏ மற்றும் சி சத்துகளை அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த பச்சைக்காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொண்டால் நோய்களை அண்டவிடாமல் உடலைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

which food have immunity power ?


which food have immunity power ?

மேற்கண்ட பொருட்களையோ அல்லது அதனைக்கொண்டு செய்யப்பட்ட உணவினையோ சாப்பிடுகையில் நிச்சயமாக நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை விடுத்து நம் இளைய தலைமுறைகள் நாடும் ஃபாஸ்ட்புட், மற்றும் எண்ணெயில் பொறித்த உணவு வகைகளில் நம் உடலுக்கு ஆரோக்யக் கேடுதான். இன்று பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை அனைவருமே பரோட்டாவை நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால் அதிலுள்ள ஆபத்து அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தொடர்ந்து பரோட்டாவை ஒருவர் தினமும் சாப்பிடவேகூடாது. ஆனால் யாரும் கேட்பதாகவே இல்லை. ஒரு சில கடைகளில் நிச்சயம் ஒரு நாளைக்கு ஆயிரம் பரோட்டாக்கள் வரை விற்பனையாகிறது என்றால் பார்த்துக்கோங்களேன். எவ்வளவு வரவேற்பு இந்த பரோட்டாவிற்கு... ஆனால் உடல் நல பாதிப்பும் இதில் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. எனவே சத்தான உணவுகளை உண்டு உங்கள் உடம்பில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழியைப் பாருங்க...தேவையில்லாத உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை அறவே தொடாதீர்கள்....அதேபோல் நமக்கு ஏற்கனவே அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டிகளை உங்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடியுங்க பார்க்கலாம்....நிச்சயம் நோய் நமக்கு வரவே வராதுங்க...அதாவது அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி, முகக்கவசம் கூட்டம் உள்ள இடங்களுக்குமட்டும், இதை ஃபாலோ பண்ணுங்க எப்பவும் எதற்கும் பயப்படவே தேவையில்லைங்கோ....

Updated On: 4 April 2023 9:08 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?