walnut benefits in tamil-வழுக்கை விழாமல் இருக்க வால்நட் சாப்பிடுங்க..! முடி வளர்ச்சிக்கு உதவுகிறது..!
walnut benefits in tamil-வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ஆரோக்ய நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
HIGHLIGHTS

walnut benefits in tamil-வால்நட் பயன்கள் (கோப்பு படம்)
walnut benefits in tamil-வால்நட்(Walnut ) என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை நாம் யோசித்து இருக்கமாட்டோம். தமிழில் வால்நட் என்பதை வாதுமைக் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. அதன் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம் வாங்க.
Walnut அல்லது akhrot என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விதை தமிழில் வாதுமைக் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. இது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தில் விளையும் ஒரு வகை கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும். பச்சையாக இருக்கும் கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும், நன்றாக விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வழுக்கைத் தலைக்கு
வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதம் தாராளமாக கிடைக்கிறது. அதனால், இதை சாப்பிடுவதால் முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இந்த வாதுமை கொட்டையை தொடர்ந்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் தலையில் வழுக்கை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
மூளை வளரும்
வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரதப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்வதால் மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, மூளை நன்கு செயலாக்கம் சிறப்பாக இருப்பதாக இருக்கிறது. இதன்மூலமாக நல்ல சிந்தனை வளர்ச்சி பெறுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
walnut benefits in tamil
மார்பகப் புற்று
தற்காலத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பகப் புற்று நோய் இருக்கிறது. வால்நட் பருப்பை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. ஆகவே பொதுவாகவே பெண்கள் வால்நட் பருப்பை சாப்பிட்டு வரலாம்.
நோயெதிர்ப்பு சக்தி
வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது. இந்த நோய் பரப்பும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதால் உடலில் நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நல்ல தூக்கம் வரும்
நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு தூக்கமின்மை ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இந்த குறைபாட்டால் அவர்களுக்கு மன அழுத்தம் கூட ஏற்படலாம். அதற்குத் தீர்வாக தினமும் இரவு உணவின் போது வால்நட் பருப்பை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நல்ல தூக்கம் ஏற்படும். இதன் மூலம் அவர்களின் மன அழுத்தமும் குறையும்.
சுவாச நோய்கள்
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நுரையீரல் நோய்கள் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். இவ்வாறான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்பை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து சற்று நிவாரணம் பெறலாம் என்று தெரிகிறது.
walnut benefits in tamil
தோல் பராமரிப்பு
உடலின் வெளிப்புற பகுதியான தோல்தான் உடலின் பாதுகாப்பு கவசம் ஆகும். அத்தகைய தோல் சிறிது வறண்டு போகாமல் லேசான ஈரப்பதத்தோடு இருப்பது ஆரோக்யமானது. வால்நட் பருப்பு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலமாக தோல் சுருக்கங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
இதய இயக்கம் சீராக
உடலுக்கு உயிர் மூச்சாக விளங்குவது இதயம்தான். இதயம் இல்லாமல் உயிர் இயக்கமே இல்லை. அப்படி உயிர் மூச்சாக இருக்கும் இதய பாதுகாப்புக்கு வால்நட் சிறந்ததாகும். வால்நட் பருப்பு இதயத் தசைகளை நன்கு வலுப்படுத்துகிறது. இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக இயங்கச் செய்வதற்கு வால்நட் பருப்பு பெரிதும் உதவுகிறது.
செரிமானத்துக்கு
உண்ணும் உணவினை செரிமானம் அடையச்செய்து உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றும் பணியை வயிறு செய்கிறது. வால்நட் பருப்பு அதிகம் உண்பவர்களுக்கு செரிமானத்திறன் மேம்படுகிறது. அது வயிற்றில் அமிலங்களின் சுரப்பை சீராக்குகிறது. அந்த அமிலச் சுரப்பிகள் செரிமானப் பணிகளைத் தூண்டுவதில் பங்காற்றுகிறது.
walnut benefits in tamil
வலிப்பு நோய்
பிறக்கும் போதே ஏற்படும் சில நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வாக எந்த மருந்துகளும் இல்லை. வலிப்பு நோய் உள்ளவர்கள் வால்நட் பருப்பினை சாப்பிட்டு வந்தால் அது வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பித்தப்பை கற்கள்
நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகள் உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கின்றன. பித்தப்பையில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கற்களை கரைப்பதில் வால்நட் சிறப்பாக செயல்படுகிறது.