vitamin c foods in tamil வைட்டமின் ''சி'' அடங்கியுள்ள உணவுகள் என்னென்ன தெரியுமா? முதல்ல இதைப்படிங்க....

vitamin c foods in tamilநாம்அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் வைட்டமின் சத்துகளும்அடங்கியுள்ளன. இவைகளை நாம் முறையாக உட்கொள்ளாதபோது வைட்டமின் சத்து இழப்புஏற்படுகிறது. எந்தெந்த உணவுகளில் வைட்டமின் சி உள்ளது என்பதைப் பார்ப்போமா.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
vitamin c foods in tamil  வைட்டமின் சி அடங்கியுள்ள   உணவுகள் என்னென்ன தெரியுமா?   முதல்ல இதைப்படிங்க....
X

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள கொய்யா ....அனைவருக்கும் கிடக்கும் சாப்பிடுங்க....



வைட்டமின் சி அடங்கியுள்ள பழங்கள் உங்களுக்காக அழகாக நறுக்கி வைக்கப்பட்டுள்ளது. சாப்பிடுங்க.....

vitamin c foods in tamil

நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஏராளமான தாதுச்சத்துகளும் , வைட்டமின்களும் இருக்கின்றன. வைட்டமினின் வகையில் ஏ ,பி, சி, டி, இ, என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் ஒவ்வொரு வைட்டமினும் ஒரு சில உணவுப்பொருட்களில் ஏராளமாக உள்ளன. அந்த உணவுப்பொருட்களை நாம் அன்றாடம் சாப்பிட்டுவந்தால் வைட்டமின் சத்தின் இழப்பை ஈடுகட்டலாம்.

அந்த வகையில் வைட்டமின் சி யானது எந்தெந்த உணவுப்பொருட்களில் அடங்கியுள்ளது என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களில் வைட்டமின் சி யும் முக்கியமானதாகும். இந்த வைட்டமின் நீரில் எளிதாக கரையக்கூடியது. மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்களாகவும் செய்லபடுகின்றன. நம்கண்களில் காணப்படும் குறைகளுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சரும பிரச்னைகளுக்கும் வைட்டமின் சி காரணமாகிறது.

இந்த வைட்டமினைப் பொறுத்தவரை டி யைப்போல் மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாது. எனவே நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊட்டச்சத்தானது ரத்தநாளங்கள், எலும்புகள், பற்கள், மற்றும் கொலோஜன் திசுக்களுக்கு அவசியமாகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் 90 மி.கி. அளவுள்ள வைட்டமின் சி சத்தினை எடுத்துக்கொள்ளவேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் உடலில் ஏற்படும் இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், பேறு காலத்தில் ஏறப்டும் பிரச்னைகள், கண் நோய்கள், தோல் சுருக்கங்கள், போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சியானது பயன்படுகிறது. நாம் வைட்டமின் சி உள்ள உணவுகளை முறையாக உட்கொள்ளாத போது வைட்டமின் சி பற்றாக்குறையானது ஏற்படுகிறது.

ஸ்கர்வி நோய்

vitamin c foods in tamilநம் உடலில் போதுமான வைட்டமின் சி சத்து குறையும் பட்சத்தில் நமக்கு ஏற்படக்கூடிய நோயின் ஒரு வகைதான் ஸ்கர்வி. இந்நோயால் பாதிக்கப்படுபவர்கள் எப்போதுமே சோர்வாக காணப்படுவர். நம் உடலிலுள்ள உறுப்புகளான எலும்பு, தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது.

மேலும் வைட்டமின் சி யானது நம் உடலில் தேவைக்கேற்ப அளவு குறையும்போது அதிக ரத்த அழுத்தம், பித்தப்பையில் பிரச்னைகள், பக்கவாதம், ஒரு சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னைகளும் நம் உடலில் ஏற்படுகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் பழ வகைகளில் நமக்கு போதுமான வைட்டமின் சி சத்து அடங்கியுள்ளது நமக்கே தெரியும் என்றாலும் பெரும்பாலானவர்கள் பழ வகைகளை சாப்பிட ஆர்வம் காட்டுவதில்லை.

கொய்யா

vitamin c foods in tamilகொய்யா பழத்தில் நமக்கு போதுமான வைட்டமின் சி சத்தானது அதிகம் அடங்கியுள்ளது. ஒரு கொய்யா பழத்தில் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்தின் அளவான 62.8 சதவீதம் உள்ளது. எனவே முடிந்த வரை ஒரு நாளைக்கு ஒரு கொய்யாப்பழத்தினை அவசியம் அனைவரும் சாப்பிட்டு வைட்டமின் சி இழப்பிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்க

குடை மிளகாய்

குடை மிளகாய் என்பது வழக்கமாக பச்சை நிறத்தில் பார்த்திருப்போம். ஆனால் வைட்டமின் சி அடங்கியுள்ள குடைமிளகாயானது மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெரிய மஞ்சள் குடை மிளகாய் ஒன்றில் 341 மி.கி. வைட்டமின் சி அடங்கியுள்ளது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும்இது அதிகரிக்கிறது.

பார்சிலி என்ற மூலிகையில் 133சதவீத அளவு வைட்டமின் சி உள்ளது. எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதனை அவசியம் சேர்த்துக்குங்க.மேலும் சிவப்பு குடைமிளகாயிலும் வைட்டமின் சியானது 317 மி.கி. அடங்கியுள்ளது.மேலும் இதர ஊட்டச்சத்துகளும் நோயெதிர்ப்பு மண்டலத்தினை மேலும் வலுவாக்க பயன்படுகிறது.

ஒரு சிலர் பழ வகைகளை சாப்பிடுவதே இல்லை. இது நல்லபழக்கமாம். ஆனால்ஒருசிலரோ சளி பிடித்துவிடும் என சாப்பிடுவதில்லை என்று சொல்வார்கள். ஆனால் பழங்களில்தான் அதிக வைட்டமின் சத்துகள் உள்ளது என்பது இவர்களுக்கு தெரியாதா?

vitamin c foods in tamilகிவிபழத்தில் ஒரு துண்டு பழத்தில் எவ்வளவு வைட்டமின் சி உள்ளது தெரியுமா? 273 மி.கி. வைட்டமின் சியானது ஒரு துண்டு கிவி பழத்தில் உள்ளது என்றால் பாருங்களேன். ப்ராக்கோலி என்பது காய்கறியாகும். 1 கப் பிராக்கோலியி்ல் 135 சதவீத வைட்டமின் சி உள்ளது. லிச்சி பழத்திலும் வைட்டமின் சியானதுஉள்ளது. 100 கிராம்பழத்தில் 71.5 மி.கி. வைட்டமின் சி உள்ளது.

அன்னாசி பழம்

1 கப் அன்னாசி பழத்தில் 131 சதவீத வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன. காலிஃப்ளவர் காலிஃப்ளவர் வைட்டமின் சி அடங்கிய காய்கறியாகும். 1 கப் காலிஃப்ளவரில் 77% வைட்டமின் சி அடங்கியுள்ளது.

பப்பாளி

vitamin c foods in tamilபப்பாளி விலையும் அதிகம்இருக்காது. அனைத்து தரப்பினரும் எளிதாக வாங்கும் நிலையில் உள்ள பழம் இது. 1 கப் பப்பாளி பழத்தில் 144 சதவீத அளவு உள்ளது. அதாவதுநமக்கு ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி 1 கப் ஸ்ட்ராபெர்ரியில் 149சதவீத வைட்டமின் சி அடங்கியுள்ளது. . 1 ஆரஞ்சு பழத்தில் 163 சதவீத வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தை நீங்கள் ஜூஸாக அல்லது சாலட் போன்றவற்றின் மூலம் சாப்பிடலாம். எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி லெமன் மற்றும் சாத்துக்குடி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் லெமனில் 53 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் சாத்துக்குடி பழத்தில் 29.1 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவைகள் கலோரி குறைந்த கொழுப்பில்லாத பழங்கள். எனவே உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகும்.

மாம்பழம்

vitamin c foods in tamilமாம்பழம் சீசன் வகை பழங்களில் மாம்பழம் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான பழமாகும். 1 கப் மாம்பழத்தில் 76சதவீத வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து களும் இதில் உள்ளன. எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்,

நெல்லிக்காய்

சாப்பிடுவதற்கு புளிப்பு சுவையுடைய இந்த நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய உணவாகும். 100 கிராம் நெல்லிக்காயில் 27.7 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.

இதுபோல் நாம் வைட்டமின் சி அடங்கியுள்ள உணவுகளை தவறாமல் எடுத்துக்கொண்டு நமக்கு வைட்டமின் சி குறைபாடு நேராதவாறு கவனமாக பார்த்துக்கொண்டால் நமக்கு எந்த வித ஆரோக்ய குறைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

Updated On: 22 Aug 2022 3:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மேல்நிலைப்பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்க கோரிக்கை
  2. தொழில்நுட்பம்
    ChatGPT News Features: ChatGPT இப்போது பார்க்கிறது, கேட்கிறது மற்றும்...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் செப். 28, அக். 2 ல் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட...
  4. க்ரைம்
    வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த காதலன் கைது
  5. தஞ்சாவூர்
    Thanjavur News Today தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
  6. லைஃப்ஸ்டைல்
    lignocaine hydrochloride gel uses tamil அரிப்பு ,வலிகளைக் குறைக்கவும்...
  7. இந்தியா
    Man lighting up beedi in Delhi Metro: டெல்லி மெட்ரோ ரயிலில் பீடியை...
  8. தமிழ்நாடு
    yercaud flower show 2022: இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு...
  9. டாக்டர் சார்
    pentids 400 uses in tamil பல், தோல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    nanban quotes in tamil: நட்பின் அழகையும் முக்கியத்துவத்தையும்...