vetiver in tamil-முகப்பரு இருக்கா..? கவலைய விடுங்க..! வெட்டிவேர் இருக்கு..! பெண்களே உங்களுக்குத்தான்..!
vetiver in tamil-'வெட்டிவேர் வாசம்' என்று ஒரு சினிமாவுக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியிருப்பார். அந்த வெட்டி வேர் என்னென்ன பயன்கள் தருகிறது என்பதைப் பார்ப்போம் வாங்க.
HIGHLIGHTS

vetiver in tamil-வெட்டிவேர் பயன்பாடு
vetiver in tamil-வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடும், தாகமும் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.
முகம் அழகுபெறும்
vetiver in tamil-வெட்டிவேர் எண்ணெய் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் தழும்புகள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுதலாம். இவ்வாறு வெட்டி வேர் பவுடரை தொடர்ந்து தேய்த்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுபெறும்.
வியர்வை அரிப்புக்கு
வெயில் வந்தாலே பலருக்கு வியர்வையால் ஏற்படும் அரிப்பு போன்றவை வந்துவிடும். இந்த அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். வியர்வையாழ் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி புதிதுணர்வாக வைத்திருக்கும். அரிப்பும் இல்லாமல் போகும். தீக்காயங்களுக்கு வெட்டிவேரை அரைத்து பூசினால் காயங்கள் விரைவில் குணமாகும்.
vetiver in tamil
கால் வலிக்கு
கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அப்படியே இரண்டு நாட்களுக்கு ஊறவைக்கவேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அந்த எண்ணெயை வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம். கால் எரிச்சல்,கால் வலி மாயமாகும்.
சோர்வு நீங்க
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை தண்ணீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது.
vetiver in tamil
முகப்பரு நீங்க
சிறு சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர் சிறுதளவும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். மறுநாள் ஊறிய அந்த வெட்டிவேர் மற்றும் கடுக்காயை விழுதாக அரைக்கவேண்டும். பின்னர் அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால், பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் காணாமல் போகும்.