urad dal in tamil-குழந்தைகளுக்கு இரத்த சோகையா..? உளுந்து கொடுங்க..! சிறந்த தீர்வு..!

urad dal in tamil-தானியங்களில் உளுந்துக்கு ஒரு தனி இடம் உள்ளது. அதன் சிறப்புகளை பார்ப்போம், வாங்க.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
urad dal in tamil-குழந்தைகளுக்கு இரத்த சோகையா..? உளுந்து கொடுங்க..! சிறந்த தீர்வு..!
X

urad dal in tamil-இட்லி தோசை உண்ணும் பெண்கள்.(கோப்பு படம்)

urad dal in tamil-பருப்பு வகைகளில் உளுந்து (urad dal )தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டது. உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு ஊட்டக்கூடியதாகும். உடல் பெருக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் உளுந்து சாப்பிட்டால் உடலில் சதைப்பிடிப்பு ஏற்பட்டு முன்னேற்றம் இருக்கும்.


எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டவர்கள் கூட உளுந்தை சாப்பிடலாம். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அத்தகைய உளுந்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க.

'பீசாவாம், பர்கராம்'

இன்று பலர் மேற்கத்திய உணவு முறையின் மீது ஏற்பட்ட வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு பீஸ்ஸா, பர்கர் என பல ஜீரணத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடுகிறார்கள். பின்னர் வயிறு உப்பிசம், வயிறு வலி, கேஸ் பிரச்னை என்று பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். மேலும் அவர்களது உடலும் தாறுமாறாக குண்டாகிவிடும். இதைப்போன்ற உணவு மேலைநாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்றது. ஆனால், நமக்கு ஏற்றதா..?

அப்புறம் 'குனிஞ்சி நிமிர்வதே' பெரும்பாடாகிவிடும். ஏதோ ஐம்பது வயதைக் கடந்த தாத்தா,பாட்டி போல ஆகிவிடுவார்கள். இதைப்போன்ற அசௌகரியங்களை தவிர்க்க உணவில் உளுந்து அடிக்கடி சேர்த்து வந்தால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றித் தள்ளிவிடும். இதனால் செரிமான பிரச்னை தீர்வுக்கு வந்துவிடும்.எனவே அடிக்கடி உணவில் உளுந்தை சேர்த்துக் கொள்வது நல்லது. நல்ல செரிமானத்துக்கு வழிகிடைக்கும்.

urad dal in tamil


ஒல்லி ஒல்லி உடம்புக்காரி

மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உணவில் உளுந்து கஞ்சி அல்லது உளுத்தம் களி போன்றவைகளை உட்கொண்டு வரலாம். இதனை நாள்தோறும் தவறாமல் செய்பவர்களுடைய மெலிந்த தேகம் சீக்கிரமே நன்கு புஷ்டி பெறும்.

உடற் சூடு குறைய

உடலில் இருக்கும் சூட்டினை தணித்து உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். அதேபோல் உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

urad dal in tamil


பெண்களுக்கு ஊட்டச் சத்து அவசியம்

பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. பெண்களுக்கு உளுந்து ஒரு சிறந்த உணவு. எனவே, பூப்பெய்திய இளம் பெண்கள், நாற்பது வயதைக் கடந்த பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுத்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

இடுப்பு வலிக்கு

இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு, இடுப்பு எலும்புகள் வலுப் பெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.இதனால், எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்னைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வைத் துயரும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்.

urad dal in tamil


கருப்பு உளுந்து

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து இருப்பதால் மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.

குழந்தைகளுக்கு இரத்த சோகை

உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதனால், கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சாப்பிடக் கொடுப்பதன் மூலமாக ரத்த சோகை நோயை விரட்டிவிடலாம்.


மூட்டு வலி

கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

Updated On: 27 Jan 2023 11:48 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்