/* */

அல்சர் ஏன் வருகிறது..? அறிகுறிகள் என்ன..? பார்க்கலாம் வாங்க..!

Ulcer Symptoms in Tamil-கண்டதையும் சாப்பிடறது இல்லன்னா ஒண்ணுமே சாப்பிடாமல் இருப்பது இப்படி இருந்தால் கண்டிப்பா அல்சர் உறுதியா வரும்ங்க.

HIGHLIGHTS

Ulcer Symptoms in Tamil
X

Ulcer Symptoms in Tamil

Ulcer Symptoms in Tamil-மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தற்போதுள்ள துரித உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படுகின்ற மனஅழுத்தம் போன்றவைகளும் அல்சர் வரக்காரணமாகின்றன. உணவு உட்கொள்ள வேண்டிய நேரத்தில் டீ அல்லது காஃபி குடிப்பது. அல்லது சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் அல்சர் வருகிறது.

அல்சர் அறிகுறிகள்:

1. எதுக்கலிப்பு

  • இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையே இசோபோக்கள் (ESophagus) ஸ்டாலின்டரர் வால்வு அமில அதிகரிப்பினால் பலவீனம் அடையும்போது வயிற்றில் உள்ள அமிலமானது உணவுக்குழாயில் மேல் நோக்கி வரும். இதை எதுக்கலிப்பு என்கிறோம்.
  • ஏப்பம் அதிகமாக இருப்பது. சாப்பிட்ட உணவுப் பொருள் தொண்டை நோக்கி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது அல்சருக்கான முதல் ஆரம்ப அறிகுறி.

2.வயிற்று வலி

  • அல்சர் இருப்பவருக்கு மேல் மற்றும் நடு வயிற்று வலி ஏற்படும்.
  • சாப்பிட்ட உடனே வலி ஏற்பட்டால் இரைப்பையில் புண்கள் இருப்பதற்கான அறிகுறி. இது கேஸ்டிக் அல்சர் என்று அழைக்கப்படும்.
  • சாப்பிட்டப் பின்பு 2,3மணி நேரம் கழித்து வயிறு வலி குறைவது. இது முன் சிறுகுடலில் அல்சர் இருப்பதற்கான அறிகுறி.
  • வயிற்று வலி அதிகமாக இருப்பதும் அல்சரின் அறிகுறியே.

3. பசியின்மை

அல்சர் இருப்பவருக்கு உணவு செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். இதனால் வயிற்றில் வாயுக்கள் அதிகரித்து வயிறுஉப்புதல், வயிறு மந்தநிலை போன்ற பிரச்சனைகள் காரணமாக பசி உணர்வு இருக்காது.

4. குமட்டல் மற்றும் வாந்தி

  • வயிற்றில் உள்ள அமிலத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் போது குமட்டலுடன் கூடிய வாந்தி ஏற்படும்.
  • காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் வாந்தி ஏற்படுவது அல்லது சிறிது இரத்தத்துடன் கூடிய வாந்தி ஏற்படுவது போன்ற அறிகுறி அல்சருக்கான அறிகுறியே.

5. இரத்தசோகை

  • வயிற்றில் அதிக நாள் அல்சர் இருக்கும் போது வயிற்று சுவரில் உள்ள வில்லஸ் என்னும் குடல் உறிஞ்சிகளை சேதப்படுத்திவிடும்.
  • இதன் காரணமாக சாப்பிடும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சாமல் இரத்த உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் இரத்தசோகை ஏற்படும்.

6. நெஞ்செரிச்சல்

  • ulcer symptoms in tamil-எரிச்சலுடன் கூடிய நெஞ்சு வலி. இடது நெஞ்சின் அடிப்பகுதியில் குத்துதல் போன்ற உணர்வு. மார்பு பகுதி பாரமாக இருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறி இரப்பை மற்றும் உணவு குழாயில் அல்சர் இருப்பதை உறுதிசெய்கின்றன.
  • இதய பாதிப்பின் அறிகுறி போன்றே இருக்கும். ஆனால், அல்சர் இருக்கும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும்.

7. திடீர் எடை குறைதல்

வாய்க்குழி மற்றும் உணவுக்குழாயில், அல்சர் இருந்தால் உணவை விழுங்கும்போது அதிக வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அல்சர் இருப்பதால் உணவு செரிமான பாதிப்புகளுக்கு உள்ளாகும். அதனால் உணவு சரியாக சாப்பிட முடியாது. இதன் காரணமாக தேவையான சத்து கிடைக்காமல் உடல் எடை குறையும்.

8. அதிக உமிழ்நீர் சுரப்பது

வழக்கத்தைவிட அதிகமான உமிழ்நீர் சுரப்பது அல்சருக்கான அறிகுறியாகும். GERD என்னும் அமில எதுக்கலிப்பு அதிகமாக இருக்கும் போது வாயில் உமிழ் நீர் சுரக்கும். இரவு தூங்கும் போதும் அதிகமான உமிழ்நீர் சுரக்கும் இது பெப்டிக்(Peptic) அல்சருக்காண அறிகுறி.

9. மலம் கருப்பாக /ரத்தமாக வெளியேறுவது

  • வயிற்றின் உட்சுவரில் அதிக நாள் அல்சர் இருக்கும் போதோ, அல்லது அல்சர் அதிகமாக இருக்கும் போதோ வயிற்றில் உள்ள புண்களில் இருந்து இரத்தம் கசிந்து உணவுடன் கலந்து வெளியேறும் போது மலம் கருப்பாக இருக்கும்.
  • சில நேரங்களில் மலத்தில் அங்கங்கு இரத்தக்கசிவு இருப்பது அல்சருக்கான அறிகுறிகள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 10:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...