உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க 5 டிப்ஸ்
உடலில் ஹீமோகுளோபின்அளவு குறைவதால் உங்களுக்கு சோர்வாக அல்லது பலவீனமாக இருக்கும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வழிகள் உள்ளன
HIGHLIGHTS

ஹீமோகுளோபின் உடல் முழுவதும் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை அளிக்கும் வேலையை செய்கின்றன. நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு இரத்த ஓட்டத்தில் செல்கிறது, அங்கு ஹீமோகுளோபின் அதை எடுத்து செல்களுக்கு மாற்றுகிறது.
ஹீமோகுளோபின் குறைபாடு பலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஒரு தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சனையாகும். அதன் அளவு குறைவதால் உங்களுக்கு சோர்வாக அல்லது பலவீனமாக இருக்கும். அதற்கான காரணம், குறைவான ஹீமோகுளோபின், உடலின் உயிரணுக்களுக்கு குறைவான ஆக்ஸிஜனை அளிக்கும். இதனால், பல்வேறு உறுப்புகளின் செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கிறது.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தோன்றும் அறிகுறிகள்:
- தோல் நிறம் மாறும் அல்லது முகப்பரு தோன்றும்.
- முடியின் தரம் பாதிக்கப்பட்டு, முடி உதிர்தலும் இருக்கும்.
- மூளை செல்கள் சரியாக செயல்பட போதுமான ஆக்ஸிஜனைப் பெறாததால் சோர்வு மனநிலை நீண்ட நேரம் இருக்கும்.
- சின்ன சின்ன வேலைக்கு பிறகு மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு ஏற்படும்
- குமட்டல் மற்றும் தலைவலி தொடர்ந்து இருக்கும்
- மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு இருக்கும்
நல்ல உணவுடன் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வழிகள் உள்ளன. ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்குப் பின்னால் ஒரு ஆரோக்கியமான உணவு ரகசியம் உள்ளது.
ஹீமோகுளோபின் ஒரு இரும்பு மற்றும் புரதப் பகுதியை கொண்டுள்ளது. எனவே, இரும்புச் சத்துள்ள உணவில் மட்டும் கவனம் செலுத்துவது போதாது.. உணவில் வைட்டமின்கள் பி 12 மற்றும் சி, புரதம் மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வழங்கப்பட வேண்டும். இங்கே 5 குறிப்புகள் உள்ளன:
நீண்ட உணவு இடைவெளிகளைத் தவிர்க்கவும்: 2-3 மணி நேர இடைவெளியை வைத்திருங்கள், ஏனெனில் நீண்ட இடைவெளி இரும்பு சத்து குறைய வழிவகுக்கும். தேநீர், காபி, வறுத்த தின்பண்டங்கள், சிகரெட் அல்லது புகையிலையால் பசியைக் கொல்லாதீர்கள்.
மலமிளக்கி பயன்படுத்தாதீர்கள்: மலமிலக்கிகள் குடல்களைச் சுத்தப்படுத்துவதோடு, நல்ல குடல் பாக்டீரியாவையும் வெளியேற்றுகின்றன. எனவே, பி 12 அளவு குறைந்து ஹீமோகுளோபின் அளவு குறைகிறது, உடலில் ஆக்ஸிஜன் குறைகிறது மற்றும் கொழுப்பு எரியும் வளர்சிதை மாற்றம் குறைகிறது.
பருப்புகளை ஊறவைத்து, முளைகட்டி சமைக்கவும்: பருப்பு வகைகள் புரதங்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாகும். ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்க அவற்றை இரவில் ஊறவைத்து முளை கட்டி அவற்றை சமைக்கவும்.
நெல்லிக்காய் சாப்பிடுங்கள்: ஹீமோகுளோபின் அளவிற்கு அதன் வைட்டமின் சி உள்ளடக்கம் முக்கியமானது. இருப்பினும், நெல்லிக்காய் சாறு அல்லது மாத்திரைகளைத் தவிர்க்கவும். பழம் அல்லது அதன் ஊறுகாய் சாப்பிடுங்கள்.
அந்த பருவ காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கவும்: கீரை இரும்பு அளவை அதிகரிக்க உதவாது. பருவத்தில் இருக்கும் பல்வேறு பச்சை காய்கறிகளை தேர்வு செய்யவும். இவை பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். எனவே, உங்கள் உணவில் சரியான கவனம் செலுத்துங்கள், ஏனெனில் இது ஹீமோகுளோபின் உகந்த அளவை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.