அந்த 'மூன்று' நாட்கள் - இது லேடீஸ் ரொம்பவும் கவனிக்க வேண்டிய விஷயமுங்க...

மாதவிடாய் நாட்களில், பெண்களின் ஆரோக்கியம் குறித்த அதிகம் சிந்திக்கப்பட வேண்டியது மிக அவசியமாகிறது. குறிப்பாக, ‘அந்த’ நாட்களில், பெண்கள் பயன்படுத்தும் ‘நாப்கின்’ சுகாதாரம் குறித்து, அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அந்த மூன்று நாட்கள் - இது லேடீஸ் ரொம்பவும் கவனிக்க வேண்டிய விஷயமுங்க...
X

‘அந்த’’ நாட்களில், பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இது.

எல்லாவற்றிலும் ஆண், பெண் சம உரிமை என்று எப்போதும் போராடுவதைக் காட்டிலும், இயற்கை விதிகளை உணர்ந்து, நடைமுறைக்கு ஏற்ப உரிமைகள் கொடுக்கப்படுவதும், பெறப்படுவதுமே ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும்.

.சில தலைமுறைகள் வரை பெண்களின் பூப்பெய்தும் வயது, சராசரியாக 15-ஆக இருந்தது. இப்போதெல்லாம் 10, 11 வயது குழந்தைகூடப் பூப்பெய்யும் சூழலுக்குள் (உடலளவில் மட்டுமே) தள்ளப்படுகிறார்கள்.

ஒரு பெண் தன் வாழ்நாளில் 16,800 மாதவிடாய் பட்டைகளைப் (Sanitary Pads) பயன்படுத்துவதாகச் சில புள்ளியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நாப்கின்களின் விகிதாசாரத்தையும் மக்கள் தொகையையும் கணக்கிடும்போது, அனைவருக்கும் `ஆர்கானிக்' எனச் சொல்லப்படும் இயற்கையான நாப்கின்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. (பொதுவாகவே, இப்போது பல இடங்களிலும் `இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது', `ஆர்கானிக்' என்பதெல்லாம் வர்த்தக ஈர்ப்பாக மாறியிருந்தாலும்) மிக அவசியமான ஒன்றின் அவசியம் இன்னும் போய்ச் சேரவில்லை.

உண்ணும் உணவில், 'கெமிக்கல்' எனச் சொல்லி பயந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாதவிடாய் பட்டையின் பிரச்னைகள் குறித்தும் கவனிக்கப்படுவது மிக அவசியமாகிறது.

பெண்களின் ஆரோக்கியம் குறித்த அக்கறை அவர்களின் வாழ்க்கைச் சூழழைத் தாண்டி சிந்திக்கப்படுகிறதா எனக் கேட்டால், மனவருத்தத்துடன் `இல்லை' என்றோ அல்லது `சிந்திக்கும் சூழலை இழந்து கொண்டிருக்கிறோம்' என்றோதான் சொல்லத் தோன்றுகிறது. பெண்களைப் பன்முகத் திறமைசாலிகளாக உணர்ந்துகொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், அதிக நோய்களுக்கு ஆளாகும் தலைமுறையாகவும் மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் கசப்பான உண்மைதான்.

ஒரு டஜன் குழந்தைகள் பெற்ற மரபைக்கொண்ட இந்த மண்ணில்தான், இன்று குழந்தையின்மை தலைவிரித்தாடுகிறது. போதாக்குறைக்கு, பூப்பெய்திய நாள் முதல் கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேருக்காவது, மாதவிடாய் சுழற்சியில் குறைபாடுகள் இருக்கின்றன. பத்தில் எட்டுப் பேருக்காவது 'லைப் ஸ்டைல் டிசீஸ்' ஆக, ரத்தச்சோகை உருவாகிறது.

டாக்டரிடம் போகும் பலரில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பெண்கள், பி.சி.ஓ.எஸ் (Polycystic ovary syndrome - PCOS) பிரச்னையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பையில் நீர்கட்டிகள் இருக்கும் பிரச்னை. இதன் விளைவாக, உடல்பருமன், குழந்தைப்பேற்றில் சிக்கல்கள், படபடப்பு போன்ற பல சிக்கல்கள் உருவாகின்றன. முன்பு, இதன் சதவிகிதம் நிச்சயம் பாதியாகக்கூட இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்று இது பழகிப் போன ஒன்றாக மாறிவிட்டது. `பி.சி.ஓ.எஸ்-தானே... அது பெரும்பாலும் எல்லாருக்கும் இருக்கும்' எனப் பெண்கள் கூட்டத்தில்கூட அது போக்குக்காட்டிச் செல்கிறது.

முப்பதாயிரம் ரூபாய்க்கு மாத பட்ஜெட் போடும் பெண்கள்கூட 30 ரூபாய் நாப்கின்களைத் தேடுகிறார்கள் என்பதே நிதர்சனம். `யூஸ் அண்ட் த்ரோதானே...' என பிளாஸ்டிக் கப்புகளைப்போலக் குறைந்த செலவில் இதைச் சமாளிக்கத் திட்டமிடுகிறோம்.

சில நாப்கின்களில் கிட்டத்தட்ட நான்கு பிளாஸ்டிக்கின் திறன் இருப்பதாக மேற்கத்திய ஆராய்ச்சிக் கருத்துகள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால், சுற்றுப்புறத்துக்கு மட்டும் தீங்கு என்பதல்ல... சுயத்துக்கும் இது உகந்ததல்ல எனத் தோன்றுகிறது.

அதிக நேரம் ஒரே பட்டையை உபயோகிப்பதால், `டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்' (Toxic shock syndrome) ஏற்பட்டு உயிரழப்புக்கூட நேரும்' என்கிறது இது தொடர்பான ஆய்வு. ஆரோக்கியம் நம் கையில் மட்டுமே இருக்கிறது' என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

.எல்லா பெண்களுக்கும் எல்லா நாப்கின்களும் பொருந்தாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஒரே வகை நாப்கினை உபயோகிக்கவும் வாய்ப்புண்டு. அம்மா, பெண் அல்லது அக்கா, தங்கையோ உடல் வகை அறிந்து தேர்வுசெய்து பழக வேண்டும். காரணம், பெண்களை அதிகம் அச்சுறுத்தும் பல நோய்கள் இந்த மாதவிடாய் காலத்தில்தான் தொற்றிக்கொள்ளத் துடிக்கும்.

நோய்களில் மனிதகுலத்தின் இன்றையச் சவால்களில், புற்றுநோயும் ஒன்று. பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் இரண்டாவதாக இடம் பிடித்திருப்பது `சர்விகல் கேன்சர்' (Cervical cancer) எனப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். சில சூப்பர் அப்சார்பென்ட் பட்டைகளில் இருக்கும் செல்லுலோஸ் (Cellulose), சர்விக்கல் கேன்சருக்கான பல உபயங்களை வழங்குவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன . வாசனைக்கான டியோடரன்ட் மலட்டுத் தன்மையையும் வழங்கலாம்' என்கிறார்கள் சில டாக்டர்கள்.

இயற்கையான மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியம். உடலின் மீது அக்கறை செலுத்த இயற்கை கொடுத்த இந்த மூன்று நாள்களைக்கூட `நேரமில்லை', `வசதியில்லை', `இயலாமை' எனச் சொல்லி மாதத்தின் மற்ற நாள்களைப்போல மாற்றிக்கொள்ள முயற்சிப்பது மிகப்பெரிய தவறு.

ஆனால், `நான் ஒரு பெண். என் உடலில் ஏற்படும் இயற்கையான மாறுதல் இது. இதற்கான ஆரோக்கியமான சூழல் எனக்காகவும், என்னைத் தொடர்ந்து வரப்போகும் பெண்களுக்காகவும் உருவாக்கப்பட வேண்டும்' என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் அழுத்தமாக உணரப்பட வேண்டும்.

பேலன்ஸிங் (Balancing) என்பது உயரமான ஒன்றின் உயரத்தைக் குறைப்பதோ அல்லது பருமனான ஒன்றின் எடையைக் குறைப்பதோ அல்ல... மற்றொன்றையும் அதற்கு இணையாக ஈடுகட்டுவது என்பதுதான் சரியானதாக இருக்கும்.

மாற்றம் என்பது தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். ஆகவே 'சானிடரி பேட்'களின் தேவை ஆரோக்யத்துக்குப் பங்கம் விளைவிக்காதபடி இருக்க வேண்டும், ஒரு பெண்ணுக்கு இருக்கும் உண்மையான ஆரோக்கியம், 'அந்த' மூன்று நாட்களில்தான் இருக்கிறது, எனவே ஆரோக்கியம் என்பதே அடிப்படைத் தேவை. முதலில் அடிப்படைவசதியைத் தேடி முன்னேறும் விழிப்புணர்வு பெண்களுக்கு மிக முக்கியம்.

Updated On: 30 Nov 2022 3:35 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 2. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 3. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 5. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 6. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 7. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 8. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 9. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 10. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!