/* */

தோலில் இருக்கிற அரிப்பு பிரச்னை தீர, அடடா... இவ்வளவு சூப்பரான டிப்ஸ் இருக்கா...?

Itching Meaning in Tamil-வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்தே, தோலில் ஏற்படும் அரிப்பு பிரச்னைகளுக்கு எளிமையான முறையில் தீர்வு காண முடியும்.

HIGHLIGHTS

Itching Meaning in Tamil
X

Itching Meaning in Tamil

Itching Meaning in Tamil-சரும அழற்சி நமக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம். அரிப்பு ஏற்பட்டால் எந்த வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது. எப்பொழுதும் அரித்து கொண்டே இருக்கும் இந்த அரிப்பு பிரச்னையை, சில வீட்டுப் பொருட்கள் மூலம் சரி செய்யலாம்.

அதிக வறண்ட சருமம், அழற்சி, தலையில் ஏற்படும் பொடுகு இபபடி பல காரணங்களால் சரும அரிப்பும் அதனால் வடுக்களும் உண்டாகின்றன. இவற்றை வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எப்படி குணப்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

சரும அரிப்பும், வடுக்களும்

​நமது சருமமும், நம் ஆரோக்கியத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் ஒரு உறுப்பு. இந்த சருமத்தில் எதாவது தொற்று ஏற்பட்டால் எதாவது அறிகுறிகள் மூலம் அதை நமக்கு புரிய வைக்க முயலும். அது அரிப்பாக, சொறி, சிரங்கு, வறண்ட சருமம், தேமல், சரும வடுக்கள் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். சிலருக்கு சில வகை உணவுகள் அழற்சியை ஏற்படுத்தினால் கூட சருமத்தில் அது பிரதிபலிக்கும். உடனே தடிப்புகள் தோன்ற ஆரம்பித்து வீடும். அதே போல் குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடுவதால் கூட சருமத்தில் தடிப்புகள் வர வாய்ப்புள்ளது. சருமத்தை காற்றோட்டமாக விட வேண்டும். இல்லையென்றால் வறண்டு போய் தடிப்புகள் உண்டாக்க நேரிடலாம். இப்படி தடிப்பு வந்த இடம் சிவந்து போய் அரிக்க ஆரம்பித்து விடும். சில பேருக்கு ஒரு இடத்தில் ஏற்படும் வடுக்கள் அப்படியே உடம்பு முழுவதும் பரவ ஆரம்பித்து விடுகிறது.

சரிசெய்யும் வழிமுறைகள்

சரும வடுக்கள் ஏற்பட்டால், எந்த வேலையும் செய்ய முடியாது. சொறிய வேண்டும் போலவே தோன்றும். ஒரு இடத்தில் வைத்து மற்றொரு இடத்தில் கை வைத்தால் பரவ ஆரம்பித்து விடும். தோலின் மேல் சிவந்து படலம் போன்று தென்படும். இதனா‌ல் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லையென்றால் கூட, அசெளகரியமாக உணர்வீர்கள். நீங்கள் டாக்டரிடம் சென்றால் இதற்கு க்ரீம்கள், லோசன்கள், களிம்புகளை பரிந்துரைப்பார்.

ஆனால், இவை தற்காலிகமான பலனை கொடுக்கலாம். இதில் பக்க விளைவுகள் இருக்க வாய்ப்புள்ளது. உண்மையில் இந்த மாதிரி சரும அழற்சிகளை தடுக்க வீட்டு வைத்திய முறைகள் சிறந்தது. காரணம் இவை சரும அழற்சியை தடுப்பதோடு சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தும். சரும அழற்சியை தடுக்கும் தன்மை நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு உள்ளன.

​கற்றாழை ஜெல்

​தோல் அழற்சியை போக்க, வீட்டில் வளர்க்கும் கற்றாழை போதுமானது. கற்றாழை ஜெல்லை பிரித்து சரும வடுக்கள், எக்ஸிமா, பருக்கள் ஏற்படும் இடங்களில் தடவுங்கள். இதன் குளிர்ச்சியான தன்மை சரும அழற்சியை குறைத்து விடும். சீக்கிரமே அரிப்பெல்லாம் நின்றுவிடும். இதற்கு காரணம் கற்றாழையில் உள்ள ஆன்டி வைரல், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மையே காரணம். சரும புண்களை ஆற்றி நிவாரணம் தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது.

​​டீ ட்ரி ஆயில்

முகத்தில் ஏற்படும் பருக்கள், சரும வடுக்கள் இவற்றை போக்க சில சொட்டு டி ட்ரீ ஆயில் போதும். இந்த எண்ணெய்யை கேரியர் எண்ணெய்யுடன் கலந்தோ அல்லது மாய்ஸ்சரைசர் உடன் கலந்தோ நீர்த்துப் போகச் செய்து பயன்படுத்துங்கள். குளித்த பிறகு சரும வடுக்கள் வந்த இடத்தில் தடவுங்கள். கொஞ்ச நேரத்தில் ரேஸஸ் மறைந்து விடும். இதில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு சருமத்தை காக்கிறது.

​ஆப்பிள் சிடார் வினிகர்

​தலையில், அரிப்பு ஏற்பட்டால் ஆப்பிள் சிடார் வினிகர் சிறந்தது. தலையை ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் நீர் சேர்த்து அலசுங்கள். அரிப்பு குறைய இது உதவும். சருமத்தில் இரத்தக் கசிவோ, வெட்டோ உள்ள இடத்தில் ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்த வேண்டாம். இது எரிச்சலை ஏற்படுத்தும். சருமப் பிரச்சினைக்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று தலையில் இருக்கும் பொடுகுப் பிரச்னை. தலையில் பொடுகு அதிகமானால் கூட சருமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.

​ஐஸ் ஒத்தடம்

தோலில் அரிப்பு, ரேஸஸ், வீக்கம், சிவத்தல் இருந்தால் ஐஸ் ஒத்தடம் சிறந்தது. இதற்கு குளிர்ந்த நீரில் துணியை நனைத்து பிழிந்து பயன்படுத்தலாம். இல்லையென்றால் ஐஸ் கட்டிகளை துணியில் கட்டி வைக்கலாம். இது தோலை சுருக்கி அரிப்பை ஓட்டி விடும். ஆனால் அதிக வறண்ட சருமம் கொண்டவர்களாக இருந்தால் இந்த ஐஸ் ஒத்தடத்தைத் தவிர்ப்பது நல்லது. அது மேலும் சருமத்தை வறட்சியாக்கிவிடும் ஆயில் சரும் உள்ளவர்கள் தாராளமாக இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

​தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகச் சிறந்த ஒன்று. சருமம் ஆரோக்கியமாக இருக்க சில துளிகள் தேங்காய் எண்ணெய் தேய்த்தாலே போதும். இதை விட சிறந்த சருமப் பாதுகாப்பு மருநு்து வேறெதுதுவும் கிடையாது என்றே சொல்லலாம். இதில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமத்திற்கு ஈரப்பதத்தை தந்து வெடிப்பை நீக்குகிறது. எனவே, சரும வடுக்கள், சரும அரிப்பு, தலை அரிப்பு ஏற்படும் சமயங்களில் சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை தேய்த்தால், விரைவில் சரியாகி விடும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு தோலில் ஏற்படும் அரிப்பை குறைக்க ரேஸஸை குறைக்க பயன்படுகிறது. சரும வடுக்கள், முகத்தில் உள்ள பருக்கள், பூச்சிக்கடி ஏற்படும் போது, எப்சம் உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து பயன்படுத்துங்கள் . சரும அழற்சி நீங்கி விடும். மேற்கண்ட வீட்டு வைத்திய முறைகள், சரும வடுக்களை நீக்க உதவியாக இருக்கும். அதோடு வழக்கமாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு எப்சம் உப்பு கலந்து குளித்து வந்தால், சரும அரிப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகள் நீங்கி, சருமம் நல்ல பொலிவுடனும், பளபளப்பாகவும் இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 March 2024 9:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?