tamarind in tamil-என்னது..புளி புற்றுநோயை குறைக்குமா..? அட ஆமாங்க..! தெரிஞ்சுக்கங்க..!

tamarind in tamil-புளி என்றால் நமக்கு குழம்புக்கு ஊற்றுவார்கள், புளி சாதம் கிண்டுவார்கள் என்பது மட்டும் தெரியும்.ஆனால் புளியில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியுமா? தெரிஞ்சுக்கங்க.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
tamarind in tamil-என்னது..புளி புற்றுநோயை குறைக்குமா..? அட ஆமாங்க..! தெரிஞ்சுக்கங்க..!
X

tamarind in tamil-புலியின் மருத்துவ நன்மைகள்.

tamarind in tamil-அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவையும் ஒன்றாகும்.புளிப்பு சுவையை வைத்தே புளிக்கு புளி என்று பெயர் வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி சுவைக்காக மட்டுமல்ல அதில் பல சத்துக்களும், மருத்துவ பயன்களும் உள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.


புளியின் பயன்கள்

புளி உணவுகளுக்கு சுவை சேர்ப்பதுடன் உணவு கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது. வைட்டமின் டி மற்றும் யு நிறைந்துள்ளது.

புளி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜுரத்திற்கு - புளியின் பழக்கூழ் சிறிது எடுத்து தண்ணீரில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் காய்ச்சலுக்கு நல்லது. இதன் பழக்கூழ் (பல்ப்) மிதமான மல மிளக்கி. இதில் பொட்டாசியம் பைடார்டரேட் இருப்பதால் இது மலமிளக்கியாகவும் செயல் படுகிறது. சிறிது புளியின் பழக்கூழ் எடுத்து, நிறைய தண்ணீருடன் சேர்த்து குடிப்பதால் இது மலத்தை இலகுவாக்கி வெளிக்கொணர்கிறது.

tamarind in tamil


புளி அமிலத்தன்மை கொண்டதால் சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று கீழே தரப்பட்டுள்ளது.

பற்கள் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் தினசரி உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வாமை

அதிகப்படியான புளியை உணவில் சேர்த்துக் கொண்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இது போன்ற சமயத்தில் அரிப்பு, வீக்கம், தலை சுற்றல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம். உணவில் அதிக அளவில் புளியை பயன்படுத்தினால் புளியை குறைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக பச்சையாக சமைக்காத புளியை தொடவே கூடாது.

tamarind in tamil


செரிமான பிரச்னை உள்ளவர்கள்

அஜீரண கோளாறு இருந்தால் புளியை தவிர்க்க வேண்டும். அப்படி புளியை சாப்பிட்டால், வயிற்று உப்புசம் உண்டாகும். முக்கியமாக ஏற்கனவே வயிறு சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் முடிந்த வரை புளியை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

இதய ஆரோக்யம்

புளி இதயம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. ஆய்வுகளின்படி புளி தமனிகளில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. புளியில் உள்ள நார்ச்சத்துக்கள் கொழுப்பைக்குறைக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் உள்ள அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதிலுள்ள வைட்டமின் 'சி' இதய நோய்களின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தடுக்கிறது.

சர்க்கரை குறைபாட்டை குறைக்கிறது

ஆல்ஃபா அமிலேஸ் என்பது புளியில் இருக்கும் ஒரு கூட்டுப்பொருள் ஆகும். இது உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதை தடுக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்தால் கூட நீரிழிவு குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது. கணையம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தமுடியாமல் இருக்கும்போது அது சர்க்கரை நோய் மட்டுமின்றி மற்ற நோய்களுக்கும் காரணமாகிறது.

tamarind in tamil


நோய்த்தடுப்பு

புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நன்மைகள் உள்ளதாக மாற்றுகிறது. இதில் அதிகளவு வைட்டமின் 'சி' உள்ளது. மேலும், பல வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. மேலும் இதில் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரிய பண்புகள் இருப்பதால் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதுடன் நோயரெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.


உடல் சூட்டை தணிக்கிறது

வெப்பமான பகுதியில் வாழ்பவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் நீரின் அளவு குறையும்போது அது பல விளைவுகளை ஏற்படுத்தும். புளி கரைசலில் சிறிது சீரகத்தூள் கலந்து குடிப்பது உடல் சூட்டை உடனடியாக குறைக்கக்கூடும்.

எடை இழப்பு எடை அதிகரிப்பு என்பது இப்போது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்னை ஆகும். ஆனால் புளியில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் அதிக எடையைக் குறைப்பதில் பெரிதும் பங்கெடுக்கிறது. உடலில் உள்ள ஒரு என்சைம் கொழுப்பு மற்றும் ஹைட்ரோக்சிசிரிட் அமிலத்தை அதிகரிக்கிறது. புளி இதனை தடுக்கக்கூடியது. மேலும் செரோட்டினின் உற்பத்தியை அதிகரித்து பசியை கட்டுப்படுத்துகிறது. அதனால், எடை குறைய உதவுகிறது.

தசை மற்றும் நரம்புகளை வலுவாக்க

புளியில் உள்ள 'பி' காம்ப்ளக்ஸ, தயாமின் வடிவத்தில் உள்ளது. இது நரம்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது. இது ஒரு ஆரோக்யமான உடல் மற்றும் உடலின் சீரான செயல்பாடுகளுக்கு காரணமாக அமைகிறது.

tamarind in tamil


செரிமானம்

புளியில் டார்ட்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக உதவுகிறது. இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளில் கூட தனி மருத்துவ குணங்கள் உள்ளன.

அல்சரை குணப்படுத்தும்

ஆரோக்கியமான செரிமான மண்டலம் இருந்தால் மட்டுமே முழு திறனுடன் ஊட்டச்சத்துக்களை கிரகித்து உடலில் சேர்க்கமுடியும். . தொடர்ந்து உணவில் புளி சேர்த்துக்கொள்ளும்போது அது அல்சரை தடுக்கும். புளியம் பழத்தின் விதையில் அல்சர் ஏற்படுவதை தடுக்கும் குணங்கள் உள்ளன.


புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோய் ஏற்படுவதற்கு புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதுதான் காரணமாகிறது. ஆன்டிஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ள புளி, உடலில் ஆன்டிஆக்சிடண்ட்களை அதிகரித்து உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

என்றும் இளமை

புளி வயதாவதை தடுக்க கூடியது. சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் புளி முக்கியப்பங்கு வகிக்கிறது. சூரிய வெப்பத்தால் முகம் மற்றும் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை புளி சரிசெய்யக்கூடியதாக இருக்கிறது. மேலும் சரும மேற்பரப்பில் ஏற்பட்ட விரிசல்களையும் சரிசெய்ய பயன்படுகிறது. இதனால் வயதான தோற்றம் மாறி இளமையாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்சில் முகப்பருக்கள் மற்றும் வலியை கட்டுப்படுத்த கூடியது.

Updated On: 13 Feb 2023 11:04 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  2. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  5. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  6. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  7. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  8. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  9. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  10. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!