stevia usage in tamil-சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைத்த வரம், இனிப்பு துளசி..!
stevia usage in tamil-சர்க்கரை நோயாளிகள் இனிமேல் இனிப்பு சாப்பிடலாம். எப்படி என்று பாருங்கள்.
HIGHLIGHTS

stevia usage in tamil-இனிப்புத் துளசி (கோப்பு படம்)
stevia usage in tamil-இனிப்புத் துளசி அல்லது சீனித் துளசி என்று பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ஸ்டீவியா (Stevia) எனப்படும் இந்த இலை, சர்க்கரை இலை என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.
இது பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பொடி காபி, டீ மற்றும் சோடாக்கள் போன்ற பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது 'இரத்த சர்க்கரை', இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகளைக் குணப்படுத்தும்.
நமது தினசரி உணவில் சர்க்கரை முக்கியப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரும்புச் சர்க்கரையில் அதிகமான கலோரிகள் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் கரும்புச் சர்க்கரையை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு த்துளசி இலைகளை பயன்படுத்தலாம்.
stevia usage in tamil
ஏனெனில் இனிப்புத் துளசி இலைகளில் இயற்கையாகவே இனிப்புச் சுவை உள்ளது. இனிப்பு துளசியில் உள்ள இனிப்புச் சுவையில் கலோரிகள் இல்லை என்பது சிறப்புத்தன்மையாகும். அதனால், இதனை கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும்.
இனிப்புத்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு மற்றும் ரெபடையோசைடு எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்க்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்புச் சுவையை கொண்டுள்ளது.
அதனால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைத்த வரம் என்று கூட சொல்லலாம். இனிப்பு சாப்பிட முடியாமல், இனிப்பு சுவை விரும்பிகள் இனிமேல் சர்க்கரை நோய் இருந்தாலும் இனிப்புத் துளசி பயன்படுத்தி செய்த இனிப்புகளை தாராளமாக உண்ணலாம்.