spinach in tamil-கீரைகளில் இத்தனை வகைகளா..? மருத்துவ நன்மைகளை தெரிஞ்சுக்கங்க..!
spinach in tamil-ஆங்கிலத்தில் கீரையை spinach என்றும் green leaves என்றும் அழைப்பார்கள். கீரைகளில் பல அற்புதமான நோய்தீர்க்கும் மூலிகை குணங்களை பெற்றுள்ளன.
HIGHLIGHTS

spinach in tamil-கீரை வகைகள்.
spinach in tamil-கீரைகளில் பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளன தினமும் நம் உணவில் ஒரு கீரையை சேர்த்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய்கள் வராமலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். கீரைகள் நேரடியாக சத்துக்களை நமது உடல் ஆரோக்யத்துக்கு கொண்டுசேர்க்கும் ஒரு எளிய உணவாகும். கீரைகள் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உணவுப்பொருளாகும். கீரைகளில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், இரும்பு, புரதம் மற்றும் தாதுப்பொருட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. நமது உடலை சீராக வைத்துக்கொள்ள கீரை அத்தியாவசிய உணவாக திகழ்கிறது.
கீரையை தினமும் நமது உணவில் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல், கண் குறைபாடு, இரத்த சோகை போன்ற பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க முடியும். கீரைகளில் பல வகையான கீரைகள் உள்ளன. ஒவ்வொரு கீரைக்கும் ஒரு தனித்துவமும் தனி சுவையும் உண்டு.
இந்த கட்டுரையில் கீரைகளின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும். மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
இப்படி பலவிதமான கீரைகளின் பயன்களை கீழே உள்ள அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம். கீழே உள்ள இணைப்பை 'க்ளிக்' செய்து கீரைகளின் வகைகள் மற்றும் கீரைகளின் பயன்கள் குறித்த அட்டவணையை பாருங்கள்.