/* */

கசகசாவில் இவ்வளவு பயன்களா? வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கசகசாவில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

கசகசாவில் இவ்வளவு பயன்களா? வியக்க வைக்கும் மருத்துவ  குணங்கள்
X

கசகசா. (மாதிரி படம்).

கசகசாவில் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான கசகசா குறித்தும், அதில் உள்ள சத்துக்கள், மருத்துவக் குணங்கள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கசகசா என்பது ஓப்பியம் வகையைச் சார்ந்த ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. ஓப்பியம் என்பது என்னவென்றால், மார்ஃபின் என்று சொல்லக்கூடிய வலிநிவாரணி தயாரிக்கக்கூடிய ஒரு தாவரம். துரதிருஷ்டவசமாக, அது போதை வஸ்துவாகவும் பயன்படுத்தப்படுகின்றது. கி.மு. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே, கசகசா மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கசகசா ‘Papaver Somniferum' என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகின்றது. கசகசா என்ற உணவுப் பொருள், வெள்ளை, கருப்பு மற்றும் நீல நிறத்திலும் கிடைக்கிறது. கசகசா என்பது கசகசா வைக்கோல் அல்லது ஓப்பியத்தின் (அதாவது மார்பின்) அறுவடையின் துணை விளைபொருளாகும். (ஓப்பியம் பழுக்காத காய்களின் பாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.)

கசகசா மற்றும் அதன் எண்ணெய் ஆகிய இரண்டு வகைகளில் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது. கசகசாவில் எவ்விதமான அயற்சுவையோ, கெட்டுப்போன சுவையோ அல்லது விரும்பத்தகாத மணமோ இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. கசகசாவில் பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

கசகசாவிலும், அதன் எண்ணெயிலும் எந்த செயற்கை நிறமியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. கசகசாவில் ஈரப்பதம் 11 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. கசகசாவில் வெளிப்புறப் பொருட்கள் 2 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

நூறு கிராம் கசகசாவில் 525 Kcal எரிசக்தியும், கொழுப்பு 41.56 கி, இதில் சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 4.5 கி, மோனோ-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 6 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 28.5 கி, மொத்த கார்போஹைட்ரேட் 28.3 கி, அதில், நார்ச்சத்து 19.5 கி, புரதம் 21.2 கிராம் என்ற அளவிலும் உள்ளது.

நூறு கிராம் கசகசாவில் கால்சியம் 1438 மிகி (தினசரி தேவையில் 144%), இரும்புச்சத்து 9.7 மிகி (தினசரி தேவையில் 75%), மெக்னீசியம் 347 மிகி (தினசரி தேவையில் 98%), மாங்கனீஸ் 2.2 மிகி (தினசரி தேவையில் 109%), பாஸ்பரஸ் 870 மிகி (தினசரி தேவையில் 124%), பொட்டாசியம் 719 மிகி (தினசரி தேவையில் 15%), ஸிங்க் 7 மிகி (தினசரி தேவையில் 74%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் கசகசாவில் வைட்டமின் - பி1 0.8 மிகி (தினசரி தேவையில் 74%), வைட்டமின்-இ 1.7 மிகி (தினசரி தேவையில் 12%) மற்றும் வைட்டமின்-பி9 (ஃபோலேட்) 82 மைகி (தினசரி தேவையில் 21%) என்றளவில் உள்ளது. கசகசாவில் உணவு தர பிளாஸ்டிக் கொள்கலன் அல்லது கண்ணாடி கொள்கலனில் காற்றுப் போகாமல் இருக்க மூடி வைத்தால், ஓராண்டு வரை அதைப் பயன்படுத்தலாம். சூரிய வெளிச்சத்தில் வைத்திருந்தால், கசகசா சீக்கிரம் கெட்டுவிடும்.

கசகசாவில் ஓப்பியம் ஆல்கலாய்ட்ஸ் இருப்பதால், வலி நிவாரணியாக உதவும். கசகசாவில் அன்சேச்சுரேட ட் ஃபேட்டி ஆசிட் சற்று அதிகம் உள்ளதால், இதயநோய்த் தாக்கத்திற்கான வாய்ப்பினை சற்று குறைக்கின்றது. கசகசாவில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.

கசகசா கருவுறுதலில் உதவுவதாக ஆய்வுகள் தெரிக்கின்றது. பெருங்குடலுக்கும் சிறுநீர்பைக்கும் இடையே இணைப்புக் குழாய் ஏதேனும் உள்ளதா எனக் கண்டறியவும் கசகசா உதவுகின்றது. கசகசாவினை டீ-ஆக குடித்தால், அதில் உள்ள மார்ஃபின் உள்ளிட்ட ஓப்பியம் விடுபட்டு, அதிகமான தூக்கம், வயிற்று வலி மற்றும் மிகவும் அரிதாக இறப்பும் நேரிடலாம்.

அதிகமாக கசகசா சாப்பிட்டவர்களின் ரத்தத்தை பரிசோதித்தால், போதை மருந்து எடுத்துக்கொண்டது போல் காண்பிக்கும். (ஒரு கிலோ கசகசாவில் 4-200 மிகி வரை மார்ஃபின் இருக்கும்.) கசகசாவை அதிகமாக எடுத்துக்கொண்டால், இதயத்துடிப்பு அதிகமாகுதல், இரத்த அழுத்தம் அதிகமாகுதல் மற்றும் மிகவும் அரிதாக சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

சமைப்பதற்கு முன்பு, கசகசாவை மிதமான சூடு உள்ள வெந்நீரில் சில நிமிடங்கள் கழுவி, பின்னர் காயவைத்துப் பயன்படுத்தினால், கசகசாவில் உள்ள மார்ஃபின் நீங்கிவிடும். சமையலுக்கு முன்னர், கசகசாவை அரைத்துப் பயன்படுத்தும் போது, சுற்றுச்சூழலில் உள்ள ஆக்ஸிஜனால், கசகசாவில் உள்ள மார்ஃபினின் தன்மை மாறிவிடும்.

ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு ஒரு கிலோ உணவில் 10 மில்லி கிராம் வரை ஓப்பியம் ஆல்கலாய்ட்ஸ் இருக்கலாம் என்று வரையறுத்து உள்ளது. ஆனால், நமது நாட்டின் உணவு பாதுகாப்பு அமைப்பு அத்தகைய வரையறை எதுவும் வழங்கவில்லை. கசகசாவில் முளைக்கீரை விதைகள், சோள விதையின் துகள்கள், ரவை, செயற்கை நிறமி ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன. கசகசா எண்ணெயில் அர்ஜிமோன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன. கசகசாவில் உள்ள கலப்படத்தினை பகுப்பாய்வின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 2 April 2023 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது