மருத்துவ குணங்கள் நிறைந்த எள்ளு பற்றி தெரியுமா உங்களுக்கு?
Sesame in tamil- எள்ளுவில், உடல் ஆரோக்கியத்துக்கான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
HIGHLIGHTS

Sesame in tamil - எள்ளுவின் மருத்துவ குணங்களை அறியலாம், வாங்க...!
Sesame in tamil -நமது நாட்டில் பல வகையான தானியங்கள் பயிரிடப்படுகின்றன. எண்ணெய் தயாரிக்க பயன்படும் தானியமாக “எள்” இருக்கிறது. கருப்பு எள், வெள்ளை எள், என எள்ளில் பல வகைகள் உள்ளன. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். எள்ளு பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
புரதசத்து:
எள்ளு விதையில் புரதசத்துடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் குறைவாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் ஆற்றலையும் அதிகரிக்கும்.
செரிமானம்:
எள்ளு விதையில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. 30 கிராம் எள்ளு விதையில் 3.5 கிராம் நார்சத்து உள்ளது. இது தினசரி உட்கொள்ள வேண்டிய அளவில் 12% ஆகும். தினமும் எள்ளு விதையை சாப்பிட்டு வருவதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெறும், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
எலும்புகள்:
ஒரு கையளவு எள்ளு விதைகளில் ஒரு டம்ளர் பாலை விட அதிகமாக கால்சியம் சத்து அடங்கியுள்ளது. எள்ளு விதைகளில் ஜிங்க் சத்து, காப்பர் சத்து உள்ளது. இது எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் தொடர்ந்து எள்ளு சாப்பிடுவதன் மூலம் போக்க முடியும்.
சருமம்:
உங்கள் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால் எள்ளு விதைகளை சாப்பிடலாம். எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்தி, பாதிக்கப்பட்ட சரும திசுக்களை புதுப்பித்து தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை போக்க உதவும்.
மன அழுத்தம் மற்றும் படபடப்பு:
சிலர் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பதட்டமான மனநிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எள்ளு சாப்பிடலாம். எள்ளு விதையில் கனிமச்சத்துக்களான மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. தினமும் எள்ளு சாப்பிட்டு வந்தால் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும். நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
ஆஸ்துமா:
எள்ளு விதைகளில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம், ஒவ்வாமை, சுற்று சூழல் மாசுபாடு போன்ற காரணங்களால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்க உதவும். எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் எள்ளு விதைகளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
இதய ஆரோக்கியம்:
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள எள்ளு எண்ணையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பெருந்தமனி குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
புற்றுநோய்:
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் எள்ளு விதையில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எள்ளு விதையை தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.