/* */

மத்தி மீனிலுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க......

White Sardine Fish in Tamil-அசைவ உணவானது அதிகம் உண்டால் ஆரோக்யத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் மத்தி மீனில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களால் இதனை அசைவ பிரியர்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.

HIGHLIGHTS

White Sardine Fish in Tamil
X

White Sardine Fish in Tamil



மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மத்தி (சர்டைன்) மீன்.

White Sardine Fish in Tamil-நாகரிக உலகில் அவரவர்களுக்கான பரபரப்பில் யாருமே தங்களுடைய ஆரோக்ய விஷயத்தில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதனால் நோய் தாக்குதலின் ஆரம்பத்தில் விட்டுவிட்டு பின்னர் நிலைமை சீரியசான பின்னர் தான் ஆஸ்பத்திரியில் தவம் கிடைக்கின்றனர்.இதுபோன்ற பிரச்னைகளுக்கு மூல காரணம் என்ன? என ஆராயும் பட்சத்தில் உடலுழைப்பின்மை, போதிய உடற்பயிற்சியின்மை, மாறி வரும் உணவுப்பழக்கம், நடை பயிற்சியே இல்லாதது போன்ற பல காரணிகளை சொல்லலாம்.

நம் உடலினைப்பொறுத்தவரை நார்மலான நிலையில் இருந்து சற்றும் மாறுபாடு தெரியும் பட்சத்தில் யோசிக்கவே கூடாது உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. நமக்கு ஆஸ்பத்திரி போக நேரம் எங்கே இருக்குது,, எ ன பலர் தங்கள் வேலைகளில் ஆர்வம் காட்டிவிட்டு பின்னர் சீரியஸ் ஆன பின் படையெடுத்து யாருக்கும் பிரயோஜனம் இல்லை.

பெரும்பாலான அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்ய பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டாலும் அளவாக உண்ணும்போது அது நமக்கு கேடு விளைவிப்பதில்லை. சொல்லப்போனால் மீனில் நிறைந்துள்ள புரதசத்துக்கள் மற்றும் இன்ன பிற சத்துக்கள் நமக்கு மறைமுகமாக மருத்துவ பயன்களை அளிக்கிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மத்தி மீனை சாப்பி்டுவோருக்கு என்னென்ன நன்மைகள் உண்டு என்பதைப்பற்றி பார்ப்போம்.

அசைவ உணவினை விரும்பி சாப்பிடுவரா நீங்கள்? அப்ப மத்தி மீன் சாப்பிட்டு நோய்களை கட்டுக்குள் வைக்க பாருங்க... மேலும் நோய்கள் வராமல் தடுக்கவும் மத்தி மீன் பெரிதும் பயனளிக்கிறதுஎன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான நடுத்தர மக்களின் வீட்டில் ஞாயிறுகளில் கமகமக்கும் குழம்பு, மத்தி மீன் குழம்பு. மற்ற மீன்களோடு ஒப்பிடுகையில் மத்தி மீனின் விலை மிகவும் குறைவு தான். விலையில் குறைவாக இருந்தாலும், நலனில் நிறைவானது மத்தி மீன். கண், இதயம், நீரிழிவு, எலும்பின் வலிமை என உடல் முழுக்க பல நலனை தருகிறது

இந்த மத்தி மீனின் சுவையானது அவ்வளவாக இல்லாவிட்டாலும் இதிலுள்ள சத்துகள் அனைத்தும் ஆரோக்யம் நிறைந்தவை. இந்த மீன்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகம் உள்ளதால் இதனை கேரள மாநில மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கேரளாவில் இதனை சாளி என்றும், தெலுங்கில் இதனை காவாலி என்றும், பெங்காலியில் கொய்ரா எனவும் அழைக்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் இந்த மீன் கிடைக்கும். விலையோ மலிவானது. மேலும் இந்த மீனில் சதைப்பற்றும் அதிகம் காணப்படுவதோடு சத்தும் நிறைந்தது. கடலில் கிடைக்கும் மற்ற மீன்களோடு மத்தி மீனை ஒப்பிடும்போது இதன் பலன்கள் மிகவும் அதிகம் என்று கூட சொல்லலாம்.

மத்தி மீனில் பாதரசத்தின் அளவானது குறைவாகவே உள்ளது. மேலும் மற்ற தாதுப்பொருட்களான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகம் காணப்படுகிறது.

100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து -20.9 கிராம், கொழுப்பு- 10. 5 கிராம், சாம்பல் சத்து 1.9 கிராம் நீர்ச்சத்து- 66.7 கிராம் உண்டு.வைட்டமின் பி12, வைட்டமின் டி, கால்சியம், செலினியம் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இரும் புச்சத்து, பொட்டாசியம், ஜிங்க், நியாசின் சத்துகள் நிறைந்திருக்கிறது. குறிப்பாக வைட்டமின் பி 12 அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி சத்தையும் மத்தி மீன் கொண்டிருக்கிறது. கால்சியம் நிறைந்திருக்கும் முக்கிய உணவு பொருளில் மத்தி மீன்களும் ஒன்று.

​மத்தி மீன் பற்றிய ஆய்வுகள் இதில் மருத்துவ குணம் அடங்கியது என நிருபணமாகியுள்ளது.அதாவது இதய நோய், மற்றும் கேன்சர் ஆகியநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது மத்தி மீன் ஆகும். மேலும் இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. கொழுப்பு அமிலமானது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு வெளியேறி ரத்தஓட்டம் சீராவதால் இதயத்துக்கு தேவையான ரத்தம் நிறைவாகவே கிடைக்கிறது. இதனால் இதய நோய் அபாயமானது குறைகிறது.

அதிக கால்சிய சத்து

நம்முடைய உடல் ஆரோக்யத்துக்கு மிகவும் முக்கியமான தாதுப்பொருள் கால்சியம் ஆகும். உடலிலுள்ள எலும்பினை வலுவூட்ட கால்சிய சத்து அவசியம் தேவை.மேலும் பற்களின் உறுதிக்கும் கால்சியம் தேவைப்படும் அளவிற்கு நம்உ டலில் இருந்தாக வேண்டும்.60 கிராம் மத்தி மீனில் 217 மி.கிராம் அளவிற்கான கால்சியம் அடங்கியுள்ளது. கர்ப்பமாகியுள்ள பெண்கள் இந்த மீனை சாப்பிடும்போதுஅவர்களுக்கு தேவையான கால்சியசத்தானது கிடைப்பதோடு கருவிலுள்ள குழந்தைக்கும் தேவையான கால்சிய சத்தினை அளிக்கிறது. பெண்கள் மெனோபாஸ் காலங்களில் ஆஸ்டி யோபெராசிஸ் என்னும் பிரச்னைக்கு ஆளாவதுண்டு. அவை வராமல் தடுக்க உணவில் அவ்வபோது மத்தி மீனை சேர்த்துவருவது நல்லது.

சர்க்கரை நோய்

ரத்தத்தில் சர்க்கரையி்ன் அளவுஅதிகமாக இருப்பதால் நீரிழிவு கட்டுக்குள் இருப்பதும் சிரமமாக இருக்கும். இவர்கள் மத்தி மீனை உட்கொள்ளும் போது இதிலிருக்கும் புரதமும் கொழுப்பும் இரண்டும் இணைந்து ரத்தமானது உணவில் சர்க்கரையை உறிஞ்சும் வேலையை மெதுவாக்குகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்ப தில்லை. நீரிழிவு இருப்பவர்களை கட்டுக்குள் வைக்கும் என்பது போலவே நீரிழிவு வராமல் தடுக்க இந்த மத்தி மீனைசாப்பிடலாம். இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கவும் மத்திமீன் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

எடையை குறைக்க

நாட்டில் இன்று பொதுமக்கள் பலரும் நாடுவது உடல் எடை குறைக்கும் மையங்களைத்தான். அந்தஅளவிற்கு உடல் பருமன் அடைபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. உடல் எடையை குறைக்க மத்தி மீனை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ள வேண்டும். மத்தியில் இருக்கும் புரதம் மற்றும் அதிக கொழுப்பு ஆனது சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை உங்களுக்கு பசி உணர்வை தூண்டாது என்பதால் எடை குறைப்பு பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் உணவு பொருளில் இனி மத்தி மீனையும் சேர்த்துகொள்ளுங் கள்.

கடல்வாழ் உயிரினங்களில் கடலில் இருக்கும் நச்சுகளை மீன்கள் உட்கொள்கிறது. இதை சாப்பிடும் போது நமது உடலினுள்ளும் அந்த நச்சு செல்கிறது என்ற செய்தியை நாம் படித்துள்ளோம்.இந்த நச்சுகள் பெரும்பாலும் பெரிய மீன்களில் தான் உண்டு. ஆனால் மத்தி மீனில் குறைவான அளவு நச்சுதன்மையே இருக்கும் .

​கேன்சரை தடுக்கிறது

உடலில் வளரும் புற்று செல்களை எதிர்க்க உடலுக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து அதிகம் தேவை என்கிறார்கள். சில வகையான புற்றுசெல்களை அழிக்க மத்தி மீனில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி உதவியாக இருக்கும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி கட்டுரையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

​நோய் எதிர்ப்பு சக்தி

பலரும் உடல் பாதிப்படைவது எதனால் தெரியுமா? போதிய நோய் எதிர்ப்பு திறன் இல்லாததே ஆகும். கொரோனாவால் பலர் உயிரிழந்ததுக்கு காரணம் நோய் எதிர்ப்பு திறன்குறைவே.. மத்தி மீன் உடலுக்கு அதிகப்படியான எதிர்ப்பாற்றலை அளிக்கிறது. உடல் உறுப்புகளுக்கு வேண்டிய ஊட்டசத்துகளை நிறைவாக அளிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராக செல்ல ஆக்ஸிஜனை நிறைவாக அளிக்கிறது.

புத்துணர்ச்சிக்கு

ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மனசோர்வு இல்லாமல் வைக்க உதவுவ தாக கண்டறிந்துள்ளது. மத்தி மீன் மன அழுத்தம், சோர்வை எதிர்த்து போராட பயனளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.மூளைக்கான உணவு என்பதால் மத்தி மீனை கண்டிப்பாக சேர்த்துகொள்ளுங்கள். நமது மூளை 60 சதவீத கொழுப்பால் ஆனது.மத்தி மீனில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

​பார்வை குறைபாட்டை தடுக்கும்

சமீப கால ஆய்வுகளின் படி மத்தி மீன் மாகுலர், கண் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பையும் தடுப்பதாக தெரிவிக்கிறது.வயதான பிறகு வரும் கண் கோளாறை தடுக்கிறது. மாகுலர் சிதைவு மங்கலான பார்வை உண்டாவதை தடுக்கிறது. இது இரண்டு கண்களையும் பாதித்து விழித்திரையில் சேதத்தை உண்டாக்ககூடிய நோய். சமயத்தில் பார்வை இழப்பை கூட ஏற்படுத்திவிடுகிறது.

மத்தி மீனில் இருக்கும் கொழுப்புகள் சருமத்துக்கு பொலிவை தருகிறது.உங்களுக்கு அழகு குறித்த ஆசையும் பராமரிக்கும் ஆர்வம் இருந்தால் உங்கள் உணவில் அடிக்கடி மத்தி மீனை சேர்த்து வாருங்கள். சரும அழற்சியை குறைப்பதோடு அழகு சாதனங்கள் பயன்படுத்தாமலே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு மீன் ஒராயிரம் நன்மை தரும் என்பதற்கு மத்தி மீனே உதாரணம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 April 2024 4:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...