sabudana in tamil-நம்பவே முடியலைங்க..! ஜவ்வரிசில இவ்ளோ நன்மைகளா? படிச்சித்தான் பாருங்களேன்..!

sabudana in tamil-ஜவ்வரிசி விசேஷ நாட்களில் பயன்படுத்தப்படும் ஒரு சைவ உணவின் ஒரு வகையாகும். குறிப்பாக படையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக இது இருக்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
sabudana in tamil-நம்பவே முடியலைங்க..! ஜவ்வரிசில இவ்ளோ நன்மைகளா? படிச்சித்தான் பாருங்களேன்..!
X

sabudana in tamil-ஜவ்வரிசியில் மருத்துவ பயன்கள்.(கோப்பு படம்)

sabudana in tamil-ஜவ்வரிசி என்பது அதில் உள்ள பசை தன்மைக்காகவே 'ஜவ்' (பிசுபிசுப்புத்தன்மை )என்று அழைக்கப்படுகிறது. ஜவ்வரிசி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாயாசம் தான். ஏனெனில் விஷேச நாட்களில், திருமணங்கள் போன்ற சுப காரியங்களில் பாயாசம் இல்லாமல் இருக்காது. அந்த பாயாசத்திற்கு முக்கிய மூலப்பொரு ஜவ்வரிசி மற்றும் சேமியாதான்.


ஆனால், ஜவ்வரிசி அதற்காக மட்டுமல்லாமல் அதில் பல மருத்துவ பயன்களும் உள்ளன.

இந்த ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுகிறது. இதனை இந்தியாவில் சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர். ஜவ்வரிசியால் செய்யப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.

ஜவ்வரிசி பயன்கள்

சீதபேதிக்கு

பலருக்கு தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் சீதபேதி ஏற்படுகிறது. இவ்வாறு சீதபேதி ஏற்பட்டவர்கள் உடலில் நீரிழப்பு அதிகளவில் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து விடுவார்கள். சீதபேதி நிற்பதற்கு ஒரு எளிய இயற்கை மருத்துவ பொருளாக ஜவ்வரிசி பயன்படுகிறது. சீதபேதி பாதிப்புக்குள்ளானவர்கள் பெரியவர்களாக இருக்கும்பட்சத்தில் 20 கிராம் ஜவ்வரிசியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து இளம் சூடான பதத்தில் அருந்தக் கொடுத்தால் சீதபேதிப் போவது விரைவில் நின்றுவிடும். குழந்தைகளுக்கு 5 கிராம் அளவு ஜவ்வரிசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட கொடுத்து வந்தால் சீதபேதி பாதிப்பு உடனடியாக நிற்கும்.

sabudana in tamil


அல்சருக்கு தீர்வு

ஜீரண உறுப்புகளான உணவுக் குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை அல்சர் என்கிறோம். தினந்தோறும் காலை உணவு சாப்பிடுவதை தவிர்ப்பவர்கள், அதிக சிகரெட் புகைப்பவர்கள் போன்றவர்களுக்கு அல்சர் சுலபத்தில் ஏற்படுகிறது. இத்தகைய அல்சர் புண் குணமாவதற்கு ஜவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது.

ஜவ்வரிசியால் செய்யப்பட்ட எந்த ஒரு உணவும் வகையையும் அடிக்கடி சாப்பிட்டு வருவதால், அவை குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அல்சர் புண்களை ஆற்றி உணவுக்குழாயில் செரிமானம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல குடற்சுவற்றில் வழுவழுப்புத் தன்மையை உண்டாக்குகிறது.


ஊட்டச்சத்து உணவு

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது. அரிசி உணவை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களின் உடலில் இழந்த சத்துகளை விரைவில் ஈடு செய்து, தசைகளுக்கு வலிமையைத் தருகிறது. உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

sabudana in tamil


இரத்த சோகைக்கு

இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி குறையும் போது அனிமீயா எனப்படும் இரத்த சோகை நோய் உருவாகிறது. இரத்தசோகை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. ஜவ்வரிசி உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் உணவாக விளங்குகிறது.எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு

பழங்களைப் போலவே ஜவ்வரிசியிலும் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' சத்துகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. அடிக்கடி அல்லது அவ்வப்போது ஜவ்வரி உணவுப் பதார்த்தங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் சத்துகள் உடலுக்கு கிடைக்கும். அவ்வாறு கிடைப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. அதனால் சுலபத்தில் காய்ச்சல், தொற்று நோய்கள் நம்மை அணுகாமல் காக்கிறது.

sabudana in tamil


பற்கள் உறுதிக்கு

உடல் ஆரோக்யத்தில் பற்களும் ஒரு முக்கியமானதாகும். உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமே உணவுப்பொருட்கள் வேகமாக செரிமானம் ஆகின்றன. அந்த உணவுகளை நன்றாக அரைத்து சாப்பிட பற்கள் வலுவாக இருப்பது அவசியம். ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் பற்களின் எனாமல் சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது.

உறுதியான எலும்புகளுக்கு மனிதர்களின் எலும்புகளுக்குள்ளாக காரைகள் அதிகம் இருக்கின்றன. இந்த காரைகள் வலுப்பெற்றிருக்கும் போது மனித எலும்புகள் சுலபத்தில் உடைவதில்லை. ஆனால் வயதாகும் காலத்தில் வலிமையாக இருக்கும் எலும்பு காரை தேய்ந்து விடுகிறது. ஜவ்வரிசியில் கால்சியம் அதிகமிருக்கிறது. அதனால் ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் கால்சியம் எலும்பு காரையை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.


இதய இயக்கம் சீராக

இதயம் சீராக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்யமாக இருக்கவும் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். ஜவ்வரிசியில் புரதம் அதிகமுள்ளது. ஜவ்வரிசி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

sabudana in tamil


நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உயராமலும் அதே நேரத்தில் அதிகம் குறையாமலும் சரியான அளவில் பராமரிக்கப்படவேண்டியது அவசியம். ஜவ்வரிசியில் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் இருக்கிறது. அதனால் இதை அடிக்கடி சாப்பிடும் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாமலும், குறையாமலும் இருப்பதற்கு வழிவகை செய்கிறது.


இரத்த அழுத்தம் குறைய

தற்காலத்தில் 35 வயதை அடைந்த ஆண், பெண் என்று பலருக்கும் இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இரத்த அழுத்தத்தில் கவனம் செலுத்தாவிட்டால் பக்கவாதம், மூளை வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

ஜவ்வரிசியில் சிறிதளவு பொட்டாசியம் சத்தும் உள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை தளர்த்தி, அதிக இரத்த அழுத்தத்தை வெகுவிரைவில் சமமான அளவிற்கு கொண்டு வருவதில் சிறப்பாக செயல்படுகிறது. இரத்த அழுத்தத்தால் இதயத் தசைகளில் ஏற்படும் மிகுதியான அழுத்தத்தையும் குறைக்கிறது.

Updated On: 7 Feb 2023 9:13 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  4. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  5. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  6. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  7. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  8. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  9. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
  10. சினிமா
    Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...