/* */

உடல் சூட்டைக்குறைக்கும் சப்ஜா விதைகளைப் பற்றி தெரியுமா?

Basil Seeds Tamil Name-மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படாதவாறு ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆரோக்யத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

HIGHLIGHTS

Basil Seeds Tamil Name
X

Basil Seeds Tamil Name

Basil Seeds Tamil Name

நம் உடலில் ஏற்படும் சூட்டினை குறைக்க நாம் பல வழிகளை மேற்கொள்வோம்.அந்த வகையில் இயற்கையின்கொடைகளான இளநீர், வெள்ளரி, உள்ளிட்டவைகளை நாடிச் செல்வார்கள் பொதுமக்கள்.

மேலும் இதுமட்டும்அல்லாமல் உடல்சூட்டை குறைக்கும் மற்ற பொருட்களையும் விரும்பி வாங்கி பயன்படுத்த துவங்குவர். திருநீற்று பச்சிலை எனப்படும் திருநீற்று பச்சிலை எனப்படும் ஒரு வகையான துளசி செடியின் விதையே சப்ஜா விதை என்று சொல்லப்படுகின்றது.

உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவு படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டு சக்கரை கலந்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது.மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன் உஷ்ணத்தால் உண்டாகும் கண் எரிச்சலையும் இது குணப்படுத்தும்.இந்த விதையில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் ஒரு ஸ்பூன் அளவு ஊறவைத்த விதையினை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மூல நோயினால் பாதிப்படைந்தவர்கள் பெரும்பாலும் உடல் சூட்டினால் அவதிப்படுவார்கள். இதுபோல் உள்ளவர்களுக்குஇது அருமருந்தாகிறது. இந்த விதையை ஊற வைத்து தினமும்சாப்பிட்டு வந்தால் மூலநோய் பிரச்னை விரைவில் குணமடையலாம்.நம் உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் வெளியேற்றத்துக்கும் இந்த சப்ஜா விதைகள் அதிகம் துணைபுரிகிறது.

sabja seeds in tamilமனிதர்களுக்கு தற்போதுள்ள பெரும் பிரச்னையே உடல் எடைதான். அந்த உடல் எடையைக்குறைக்க பல வழிகளை பலரும் நாடுகின்றனர். கடைசியில் எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கான ரிசல்ட் கிடைக்காமல் பலரும் தவித்து வருகின்றனர்.

மேலும் அதிக தொப்பையைக் குறைக்க இது பெருமளவு உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க பலர்இன்றளவில் பிரம்ம பிரயத்தனம் செய்கின்றனர். இருந்தாலும் அவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இல்லாமல் இருந்தால் எப்படிங்க உடம்பு குறையும். இந்தவிதையினை தண்ணீரில் ஊறிய சப்ஜா விதையை காலையில்வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடையானது கட்டுப்படுவதுடன் எடையும் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விதையினை சாப்பிட்டால் பசியே எடுக்காது.எ னவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம். தீர்வு உண்டு. நம் உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மையையும் சப்ஜா விதை செய்வதால் இதனை சாப்பிடலாம்.

ஏங்க... நாட்டில் இன்று பல பேர் எதனை சாப்பிட்டால் சுகர் குறையும் என தேடிக்கொண்டிருக்கின்றனர். சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்கள் அனைவருமே பயந்து பயந்து உணவு முதல் அனைத்தையும் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சுகர் நோயாளிகள் எதனை சாப்பிட்டால் நமக்கு சுகர் ஏறாது எனவும் எது சாப்பிட்டால் சுகர் குறையும் எனவும் தினம் தினம் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதுபோன்றவர்கள் சப்ஜாவிதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவானது குறையும்.

ஒரு சிலருக்கு எப்போதும் சோர்வான நிலையே காணப்படும். மேலும் சுறுசுறுப்பு என்றால் என்ன ? இவர்கள் கேட்பார்கள். இதுபோன்ற மனநிலையில் உள்ளவர்கள் சப்ஜா விதையினை சாப்பிட்டால் புத்துணர்ச்சியையும் பெறலாம்.ஒரு சிலருக்கு சிறிது மழையில் நனைந்தால் போதும் சளி பிடித்துவிடும்.இதுபோன்றவர்களுக்குநோய் எதிர்ப்புத்தன்மையானது குறைந்திருக்கும்.இவர்கள் சப்ஜா விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

இரும்பு சத்து குறைவால் பலருக்கு சோகை நோய் ஏற்படுவதுண்டு. மேலும் இரும்பு சத்து குறைவால் பெண்களில் பலர் எப்போதும் கால்வலி என சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதுபோல்உடலில் அயர்ன் சத்து குறைவாக உள்ளவர்கள் அனைவரும் சப்ஜா விதையினை சாப்பிட வேண்டும். .

ஒரு சிலருக்கு திடீரென நெஞ்செரிச்சல் ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் அஜீரணக்கோளாறு என்று சொன்னாலும் வயிற்றிலுள்ளஅசிடிட்டியால் பாதிப்படைந்திருப்பார்கள்.இவர்களுக்கு சப்ஜா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பாலுடன் சேர்த்து இந்த விதைகளை குடித்து வந்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

பெண்களின் தலையாய பிரச்னை மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய். இந்த காலத்தில் ஒரு சில பெண்களுக்கு அடிவயிற்றில் வலி தோன்றும். என்ன செய்தாலும் வலி போகாது. மேலும் அதிக உதிர போக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் பலருக்கு தோன்றலாம். இதுபோன்ற பிரச்னையுள்ள மகளிர் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். மேலும் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்படைந்தவர்களும் இந்த விதையினை இளநீரில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால் நோயின் பாதிப்பானது பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

எப்படி சாப்பிட வேண்டும்-?

சப்ஜா விதைகளை சுமார் 6 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் என்றால் சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இதை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையிலும் பயன்படுத்தலாம்.ஊற வைத்த சப்ஜா விதையினை பார்க்கும் போது ஜவ்வரிசி போன்று இருக்கும். இதனை பால், தண்ணீர், ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் சேக் போன்ற எதில் வேண்டுமானாலும் கலந்து குடிக்கலாம்.இந்த சப்ஜா விதையை தண்ணீரில் ஊற வைத்தே சாப்பிட வேண்டும். இதனை வெறுமனே சாப்பிடும் போது வயிற்று வலி, அலர்ஜி ஏற்படும்.

யார் சாப்பிடக்கூடாது?

கர்ப்பிணிப் பெண்கள் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், சிறுகுழந்தைகள், பாலுாட்டும் தாய்மார்கள் போன்றவர்கள் இந்த விதையினை தவிர்ப்பது அவர்களுடைய ஆரோக்யத்துக்கு நல்லது.

தீமைகள்

இந்த விதையினைப் பொறுத்தவரையில் ப ல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உள்ளது. இதனை தொடர்ச்சியாக அதிக அளவுக்கு எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தியை ஏற்படுத்தும். செரிமான பிரச்னைகள், ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பசியின்மையை ஏற்படுத்தும் என்பதால் நம்முடைய உணவின் அளவானது தானாக குறைய ஆரம்பிக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 April 2024 9:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...