/* */

தொடர்ந்து தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்...........

தொடர்ந்து தேநீர் குடிப்பவராக இருந்தால் உணவுக் குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

தொடர்ந்து தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்போ  இந்த செய்தி உங்களுக்குத்தான்...........
X

தேயிலை. (மாதிரி படம்).

நாம் அன்றாடம் அருந்தும் தேநீர் அளவுக்கு அதிகமானால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து தேநீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

தேயிலையில் கங்க்ரா தேயிலை, கருப்பு தேயிலை, பச்சை தேயிலை என மூன்று வகைகள் உள்ளன. கங்க்ரா தேயிலை என்பது ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா மற்றும் மண்டி பள்ளத்தாக்கில் விளையும் “Camellia Sinensis” என்ற தாவரத்தில் இருந்துப் பெறப்படும் தேயிலை ஆகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. கங்க்ரா தேயிலையைக் கொதிக்க வைத்த பின்னர் கிடைக்கக்கூடிய சாறு 23 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கங்க்ரா தேயிலையில் நார்ச்சத்து 18.5%-ற்கும் மேற்பட்டு இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்து உள்ளது. கங்க்ரா தேயிலையின் மற்ற தரங்கள், சாதாரணத் தேயிலையின் தரங்களை ஒட்டியே இருக்க வேண்டும். பச்சைத் தேயிலை என்பது, “Camellia Sinensis (L) O.Kuntze” என்ற தாவரத்திலிருந்து மட்டும் பெறப்பட்டு, பிரத்தியோக முறையில் செயலிழக்கப்பட்டு, பொடியாக்கி உலர்த்திய பின்னர் பெறப்படுவதாகும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கருப்புத் தேயிலைக்கும் பச்சைத் தேயிலைக்கும் உள்ள வித்தியாசம் ஆக்ஸிஜனேற்றம் தான். பச்சைத் தேயிலை ஆக்ஸிஜனேற்றமில்லாமல் தயாரிக்கப்படுவது ஆகும். பச்சைத் தேயிலையில் மொத்த ‘கேட்டச்சின்ஸ்’ (Total Catechins) 9-19% என்ற அளவிற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பச்சைத் தேயிலையின் மற்ற தரங்கள், சாதாரணத் தேயிலையின் தரங்களை ஒட்டியே இருக்க வேண்டும்.

பச்சைத் தேயிலையில் உள்ள ‘கேட்டச்சின்ஸ்’ என்பது, ஈரல் உறுப்பை பாதிக்கக்கூடிய ஒரு காரணி ஆகும். ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு ‘கேட்டச்சின்ஸை’ ஒரு நாளைக்கு 800 மிகி-க்கு மிகாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

‘டிப் டீ பேக்’-ல் ஸ்டாப்ளர் பின் (Stapler Pins) பயன்படுத்தக்கூடாது என்று FSSI வரையறுத்துள்ளது. தேயிலைப் பொட்டலத்தில் ஊட்டச்சத்து விபரங்கள் குறிப்பிடத் தேவையில்லை என்று FSSAI விலக்களித்துள்ளது. நூறு கிராம் தேயிலையில் 1 Kcal எரிசக்தி உள்ளது. வேறு எந்தவொரு ஊட்டச்சத்தும் குறிப்பிடும் வகையில் இல்லை. நூறு கிராம் தேயிலையில் 12 மிகி காஃபின் உள்ளது.

கருப்பு தேயிலையை உணவு தர டின் (அ) செராமிக் (அ) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொள்கலன்களில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, குளிர்வான சூழலில், ஈரப்பதமற்ற, உலர்ந்த மற்றும் வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வந்தால், 3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

பச்சைத் தேயிலையை உணவு தர அலுமினியம் ஃபாயில் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொள்கலன்களில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, குளிர்பதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்தால், 18 மாதங்கள் வரை அதைப் பயன்படுத்தலாம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

கருப்பு மற்றும் பச்சைத் தேயிலையில் ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்ஸ் உள்ளதால், இதயத்தைப் பாதுகாப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விலங்குகளிடத்தில் மேற்கொண்ட ஆய்வில், கருப்பு மற்றும் பச்சைத் தேயிலை இரத்தநாள அடைப்பை தடுப்பதாக அறியப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் பச்சைத் தேயிலை கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதிலும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பு மற்றும் பச்சைத் தேயிலை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் உள்ளன. கருப்பு மற்றும் பச்சைத் தேயிலையில் உள்ள காஃபின் விழிப்புணர்வை அதிகரிக்கின்றது, எதிர்வினை நேரத்தைக் குறைக்கின்றது மற்றும் குறுகிய கால நினைவுகூரலை அதிகரிக்கின்றது.

பச்சைத் தேயிலையில் உள்ள கேட்டச்சின்ஸ் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தினைத் தடுக்கின்றது. கருப்பு தேயிலையில் உள்ள ஃப்ளாவின்ஸ் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருப்பு மற்றும் பச்சைத் தேயிலை ஆகிய இரண்டிலும் ‘டானின்ஸ்’ உள்ளது. இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்களுடன் ‘டானின்ஸ்’ பிணைந்து, தாது உப்புக்கள் குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றது. கருப்பு மற்றும் பச்சைத் தேயிலை ஆகியவற்றில் எது சிறந்தது எனில், இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

கருப்பு மற்றும் பச்சைத் தேநீர் எதுவாகினும் ஒரு நாளைக்கு 2-3 கப்களுக்கு மிகாமல், உணவு நேரங்களுக்கு இடையே குடித்து வருதல் நலம். தேநீரை 60 டிகிரி செல்சியஸிற்குட்பட்ட இளஞ்சூட்டில் பருக வேண்டும். அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் தொடர்ந்து குடித்து வந்தால், உணவுக் குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 13 April 2023 8:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை