/* */

2024 லோக் சபா தேர்தலுக்கு அச்சாரம் நடிகர் ரஜினி மீண்டும் அரசியல் பிரவேசமா?

rajini latest news in tamil தமிழகமே இவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தன் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் பிரவேசம் இல்லை என அறிவித்தார் நடிகர் ரஜினி. தற்போது தமிழக கவர்னரை திடீரென சந்தித்து அவருடன் அரசியல் பேசினேன் என்பது அவர் மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

HIGHLIGHTS

2024 லோக் சபா தேர்தலுக்கு அச்சாரம்  நடிகர் ரஜினி மீண்டும் அரசியல் பிரவேசமா?
X

நடிகர் ரஜினிகாந்த்



நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான ''ஜெயிலர்'' படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார். (மாதிரி படம்)

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் , இவர் சினிமாவில் நடித்தாலே வசூலில் சாதனை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவரையும் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைலால் கவர்ந்தவர் ரஜினி என்றால் மிகையாகாது. அந்த வகையில் அவர் நடிக்கும் படங்களில்ஏதோ ஒன்று இரண்டு படங்கள் கதையசம்சம் சரியில்லாததால் அதிக நாட்கள் ஓடாவிட்டாலும் அவரை திரையில் பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். அந்த வகையில் அத்தனை பேரின் மனதையும் தன் தனிப்பட்ட ஸ்டைலால் கவர்ந்தவர் ரஜினி. மேலும் ஒரே படத்தினை பல தடவை பார்க்கும் ரசிகர்களும் உண்டு.

சினிமாவில் தனக்கென தனிஇடத்தினை தக்க வைத்துக்கொண்டாலும் இவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என தமிழகம் முழுவதும் உள்ள இவருடைய ரசிகர்கள் பல ஆண்டுகாலம் காத்திருந்தது உண்டு. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் அனைவருமே திரையுலகில்இருந்துகொண்டு அரசியலுக்கு சென்று ஆட்சியைப் பிடித்தவர்கள் என்ற வரிசையில் ரஜினியும் வந்துவிடமாட்டாரா? என ஏங்கிய ரசிகர்களும் உண்டு.

2020ல் பகிரங்க அறிவிப்பு

மறைநத் முன்னாள் முதல்வர் ஜெ இருக்கும் வீடான போயஸ்தோட்ட பகுதியில்தான் இவரது வீடும் உள்ளது. அவர் உயிரோடு இருந்தவரை முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தவரை அவர்களோடு நல்ல நட்புறவில்இருந்தார் ரஜினி. பின்னர் இவர்கள் இருவருடைய மறைவிற்கு பின்தான் தன் ரசிகர்களை சென்னையில்சந்தித்து போர் வரட்டும் வரும்போது களத்தில் இறங்குவோம் என்ற அறைகூவலை விட்டார். இதனால் பல ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு நம் தலைவர் எப்படியும் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற கணிப்பே இருந்தது. ஆனால் 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இவர் அரசியல் கட்சி துவங்குவார் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தன் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை. ரசிகர்கள் அவர்கள் விரும்பும் கட்சியினருக்கு ஓட்டளிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டதால் அதிர்ச்சியடைந்தது ரசிகர் மன்றம். அதன் பிறகு இவர் அரசியல் பற்றியே பேசவில்லை. தேர்தலும் நடந்தது. திமுக ஆட்சியை பிடித்தது வேறுகதை.

கவர்னருடன் சந்திப்பு

புதுடில்லி சென்று வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கவர்னர் ரவியை சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அண்மையில் புதுடில்லி சென்று வந்த நிலையில் திடீரென தமிழக கவர்னர் ரவியை நேரில் சென்று சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சந்திப்பிற்கு பின்னர் கவர்னருடன் அரசியல் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் கவர்னர் ஆன்மீக விஷயத்தில் அக்கறை கொண்டவராக இருப்பதால் தமிழக மக்களுக்கு நல்லதைத்தான் செய்வார் எனவும் அவர் தெரிவித்தார். மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா? என கேட்டதற்கு அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். கவர்னருடன் பேசியது குறித்து கேட்டதற்கு அதனை இப்போது கூறமுடியாது என தெரிவித்தார். ஜிஎஸ்டி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அரசியலுக்கே வராதவர் திடீரென கவர்னரை சந்தித்து பேச வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

இவர் திடீரென கவர்னரை சந்தித்து பேசியிருப்பது பாஜவிற்கு ஆதரவு அளிக்கிறாரா? அல்லது 2024 லோக்சபா தேர்தலில் ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு டில்லி அரசியலில் சேர்வாரா? அல்லது பாஜவுக்கு ஆதரவாக மீண்டும் வாய்ஸ் கொடுப்பாரா? ஏனெனில் வயதாகிவிட்டது இனி சினிமாவிலும் அதிக நாள் இருக்க முடியாது என்பதால் இந்த முடிவில் உள்ளாரா? என பல சந்தேக கேள்விகள் ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது .

வீட்டுமுன் தேசியக்கொடி

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நினைவுகூறும் வகையில் அனைவரும் கடந்த 13 ந்தேதி முதல் 15 ந்தேதி வரை வீடுகளின் முன் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும், சோஷியல் மீடியாக்கள் ஒரு வார காலத்திற்கு தன் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை வைக்கவேண்டும்என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்விடுத்தார். அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் தன்வீட்டு முன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல் அவரது சோஷியல் மீடியாவிலும் தேசியக்கொடியை வைத்தார். இது ஒருபுறம் நாட்டுப்பற்றைக் காட்டினாலும் பிரதமர் மோடி மீது இவர் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் பேசிக்கொள்கின்றனர். இவர் மறைமுகமாக பாஜவுக்கு ஆதரவு அளித்துவருவதால் வரும் 2024 லோக்சபா தேர்தலின்போது அரசியலில் தீவிரமாக திடீரென களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் பலரிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தினைப்பொறுத்தவரை 39 லோக்சபா தொகுதியும் புதுச்சேரி 1 தொகுதி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் தனி மெஜாரிட்டியை கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெற்று அதிக எம்பிக்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதனை முறியடிக்கும் விதமாக தமிழகத்தில் வரும் 2024 தேர்தலின் போது அதிக இடங்களைக் கைப்பற்ற பாஜ வியூகம் வகுத்திருப்பதாக தெரிகிறது. அதற்கு நடிகர் ரஜினிகாந்தும் ஒத்துழைக்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியவரும்.

சினிமா உலகம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அன்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இதனையடுத்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பாரென்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

நெல்சனே ரஜினி படத்தை இயக்குவார் என உறுதியாக கூறப்பட்ட சூழலில் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது.ஆனால் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.ஜெயிலருக்கு பிறகு இவர் சினிமா களத்தில்இருப்பாரா? அல்லது அரசியல் களத்திற்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On: 17 Aug 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  3. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  4. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  5. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  6. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  7. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  8. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  9. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  10. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்