quinoa in tamil-ஆண்மைக்குறைவா..? தினை சாப்பிடுங்க..! சிறந்த தீர்வு..!
quinoa in tamil-சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை உண்பது இப்போது அரிதாகிவிட்டது. ஆனால், அதைநோக்கித் திரும்பும் விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.
HIGHLIGHTS

quinoa in tamil-தினை சாலட் உண்ணும் பெண் (கோப்பு படம்)
quinoa in tamil-தினை ஒரு தானிய வகைகளில் ஒன்றாகும்.இது செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துகொள்ளும்.அதனால் அரிசி போன்று உடனடியாக ஜீரணித்து அதில் இருக்கும் குளுக்கோஸை ரத்தத்தில் உடனடியாக கலக்கச் செய்வதில்லை.அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல இதய நோய், உடல் பருமன், மூட்டு வலி இருப்பவர்களும் தினை அரிசியை உணவாக எடுத்துகொள்ளலாம். இது உடல் சோர்வையும் உண்டாக்காது. இழந்த ஆற்றலை உடல் மீண்டும் பெற முடியும்.உடற்பயிற்சி செய்பவர்கள் இதை பெரிதும் விரும்புவார்கள். தினை முழுக்க முழுக்க புரதம் நிரம்பியிருக்கும், குளூட்டன் அற்ற தானியம் ஆகும். இந்த உணவு உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதுடன் எடை குறைவதற்கும் வழி செய்கிறது.

ஆங்கிலத்தில் குயினோவா(Quinoa) என்பது தமிழில் தினை ஆகும். இதில் புரதம் அதிகம் இருப்பதால் தென்அமெரிக்காவில் இது முக்கியமான உணவுப் பொருளாக இருந்து வந்தது. இப்போது உலகம் முழுவதும் அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றான உணவுபொருளாக இது மாறியிருக்கிறது.

திணையில் உள்ள சத்துகள்
100 கிராம் அளவுள்ள தினையில் 120 கிலோ கலோரிகளைத் தரக்கூடிய 4.4 கிராம் புரதம், 1.9 கிராம் கொழுப்பு, 19.4 கிராம் மாவுச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, 17 மில்லிகிராம் கால்சியம், 64 மில்லிகிராம் மக்னீசியம் போன்ற தாதுக்கள் அடங்கியிருக்கின்றன.
தினையின் பயன்கள்
வீக்கத்தை குறைப்பதில் திறமையாக செயல்படும் ஆற்றல் உள்ளதால் நீண்ட கால நோய்களுக்கு எதிராக உடலைப் பலப்படுத்தும் பண்பு இதற்கு உண்டு. மற்ற உணவுகளை ஒப்பிடும்போது இதயத்திற்கு வலு கொடுக்கும் ஒமேகா 3 சத்துகள் தினையில் அதிகம் உள்ளன.

quinoa in tamil
இதில் இருக்கும் அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் உடல் எடை குறைய உதவுகிறது. குறைவான கிளைசிமிக் உள்ளடக்கம் உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொண்டு சேர்ப்பதுடன் தேவையற்ற உணவுகளை உண்ணவேண்டும் என்ற ஆவலைக் குறைக்கும். இதனால் உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப்படுகிறது.
குளூட்டனை ஏற்றுக்கொள்ள முடியாத, செலியாக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது அருமையான மாற்று உணவாகும்.செலியாக் நோய், சில நேரங்களில் செலியாக் ஸ்ப்ரூ அல்லது க்ளூட்டன்-சென்சிட்டிவ் என்டோரோபதி என்றும் அழைக்கப்படுகிறது. இது கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகியவற்றில் காணப்படும் பசையம் என்ற புரதத்தை சாப்பிடுவதற்கான நோயெதிர்ப்பு எதிர்வினையாகும். உங்களுக்கு செலியாக் நோய் இருந்தால், பசையம் சாப்பிடுவதன் மூலம் சிறுகுடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. ஜீரணப் பிரச்னை உள்ளவர்களுக்கு பொதுவாகவே இது நல்ல உணவாகும்.
பெரும்பாலும், தினை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுவது அரிது. ஆயினும், குறிப்பிட்ட மருத்துவக் காரணங்களால் சிரமங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவருடன் ஆலோசனை பெற்ற பின்னர், தினையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆண்மைக் குறைபாடு
திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றனர். தினையை நன்கு இடித்து மாவாக்கி, அந்த மாவில் பசு நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டுத் தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.
புரதம்
உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். தினை புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினையால் செய்யப்பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுப் பெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமைத் தன்மையை காக்கும்.
quinoa in tamil
மன அழுத்தம்
அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனநிலையில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து இருக்கும்பட்சத்தில் இவை மன அழுத்தம் பிரச்னையாக மாறுகிறது. தினையில் மன அழுத்ததை குறைக்கக்கூடிய வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே, தினையால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்னைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.
ஞாபக மறதி
அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான தீவிரமான ஞாபக மறதி நோயாகும். இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்று விடுவர். தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிடுபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதயம்
தினை வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நமது உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின் சத்துகள் தேவையென்றாலும், வைட்டமின் பி 1 சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

காய்ச்சல்
உடலின் உஷ்ணம் தட்ப வெப்ப மாறுபாடுகளால் அதிகரிக்கிறது. அதனால், நோய் தொற்றுகள் ஏற்பட்டு காய்ச்சல் போன்ற நோய்கள் உடலை மிகவும் பலவீனப்படுத்துகிறது. காலரா போன்ற நோய்களும் உண்டாகின்றன. காய்ச்சல், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவவற்றை கொடுப்பது சிறந்த உணவாக இருக்கும்.
quinoa in tamil
எலும்புகள்
ஒவ்வொருக்கும் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நன்கு வலுவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தினை கால்சியம் சத்தினை அதிகம் கொண்ட ஒரு தானியமாகும். தினையால் செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும். அடிபட்டு எலும்பு உடைந்தவர்கள் தினை உணவுகளை சாப்பிட்டு வர உடைந்த எலும்புகள் விரைவில் கூடும்.
நீரிழிவு நோய்
நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைச் சத்து மிகுந்த அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு அவர்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிட்டாலும் அவர்களின் உடல், அவ்வுணவின் முழுமையான சக்தியை பெறாமல் இருக்கும். இவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்.

கொலஸ்ட்ரால்
தினை புரதச் சத்துகள் அதிகம் கொண்டது. அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாத சில வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு சமநிலையில் இருக்க உதவும். தேவையற்றக் கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.
உணவுப்பயன்பாடு
தினையை நெல் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். தினை சோறு, தினை இட்லி, தினை தோசை, தினைப் பொங்கல், தினை குழிப்பணியாரம், தினை லட்டு என பல்வேறு பயன்பாட்டு உணவாக சமைத்துக்கொள்ளலாம்.