சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூசணி விதை பற்றி தெரியுமா?.......

நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயின் விதைகளில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போமா?

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்   பூசணி விதை பற்றி தெரியுமா?.......
X

விதைகள் அகற்றப்படாத நிலையில் பூசணிக்காய். 

pumpkin seeds in tamil


pumpkin seeds in tamil நாம் சாப்பிட்டாலும் அதில் உள்ள சத்துகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் தெரியாதவர்களுக்குதான் மெஜாரிட்டி கிடைக்கும்.பலர் எல்லோரும் சாப்பிடுகிறார்கள் நானும்சாப்பிடுகிறேன் என்ற பதிலையே நீங்கள் கேட்டீர்கள் என்றால் சொல்ல ரெடியாக இருப்பார்கள். அந்த வகையில் நாம் சாப்பிடும் எந்த ஒரு பொருளிலும் என்ன சத்து உள்ளது என்பதை நீங்கள் அறிந்து வைத்துக்கொள்வதோடு அதனை நாலு பேருக்கு சொல்லுங்கள். ஆரோக்யமான சமுதாயம் வளர வாய்ப்புள்ளது.

அந்த வகையில் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கப்படும் கருவேப்பிலையை பலர் இன்றும் துாக்கி ஒதுக்கி வைக்கின்றனர். 'அதிலுள்ள மருத்துவ குணம் பற்றி தெரிந்தீர்களானால் ஒதுக்க மாட்டீர்கள். வாசனைக்காக சேர்ப்பது அல்ல. மருத்துவகுணம் என்பதால்தான் அது உணவில் சேர்க்கப்படுகிறதுஎன்ற உண்மை இன்றும் பலருக்கு தெரியவில்லை.

அதேபோல் பூசணிக்காய். இதில் இரண்டு விதமான பூசணி உள்ளது.சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டு ரகங்கள்.இரண்டு பூசணியிலுமே மருத்துவ குணங்கள் உண்டு. ஏன்? பூசணி அல்வா செய்கிறார்களா? சாப்பிட்டுள்ளீர்களா? சூப்பர் சுவையாக இருக்குமுங்க.

pumpkin seeds in tamilஅதேபோல் வெள்ளை பூசணியை பலரும் திருஷ்டி சுற்ற மட்டுந்தான் அது பயனளிக்கிறது என நினைத்துள்ளார்கள். ஆனால்அதன் மருத்துவகுணம் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. பெரும்பாலும் சமையலுக்காக வீட்டில் பூசணியை பயன்படுத்தினால் நாம் சதையினை மட்டும்எடுத்துவிட்டு விதைகளை குப்பையில் போடுவோம். ஆனால் அந்த விதையிலும் சத்து இருக்கிறது என சொல்கிறார்கள். அ து என்னவென்று பார்ப்போம்.

pumpkin seeds in tamilஅண்டார்டிகாவைத் தவிர உலகமெங்கும் பயிரிடப்படும் காய் வகையாக உள்ளது இந்த பூசணி. இதில் உலகம் முழுக்க 40 வகைகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதனை சமையலுக்காக பயன்படுத்துகின்றனர். மேலும் பூசணி விதைகள் மருந்து தயாரிப்புகளில் பெரும்பங்கினை வகிக்கிறது. வெளிநாடுகளிலும் இதனை உணவுப் பொருளாக அதாவது அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.

pumpkin seeds in tamilபூசணிக்காய் விதையில் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின் இ ஆகிய சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளன. தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், உள்ளிட்ட தாதுச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. 100 கிராம் பூசணி விதைகளை நாம் சாப்பிட்டால் அதிலிருந்து 600 கலோரிகளைப் பெறலாம் என்கிறது கணக்கு.

இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பளிக்க கூடிய சத்துகளை பெற்றது பூசணிவிதைகள். இவற்றில் உள்ள மெக்னீசிய சத்துகளானது ரத்த அழுத்த நோய் மற்றும் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு நாம் ஒரு கப் பூசணி விதைகள் சாப்பிட்டால் அன்று நாள்முழுக்க கிடைக்க வேண்டிய மெக்னீசிய சத்து கிடைத்துவிடும். மெக்னீசியமானது ரத்த அழுத்தம் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைத்தடுக்க கூடிய குணம் கொண்டதால் பூசணி விதையின் மருத்துவ பயன் முக்கியமானது.

இம்யூனிட்டி பவர்

pumpkin seeds in tamilமனிதர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலில் இருக்க வேண்டிய அளவு இருக்க வேண்டும்.அந்த அளவு குறையும்போதுதான் கிருமிகள் தொற்று நம்மை உடனே தாக்கஆயத்தமாகிறது. குறைவாகும்போது இதனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை நாம் உணவின் மூலமாகவோ மாத்திரை மருந்து மூலமாகவோ மேற்கொள்ளவேண்டும்.

அந்த வகையில் பூசணி விதையில் உள்ள துத்தநாக சத்தானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்க வல்லது. ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மி்லி என்ற அளவில் துத்தநாகம் உள்ளதால் இது செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

pumpkin seeds in tamilமேலும் நம் உடலில் உள்ள தேவையான துத்தநாக சத்துகள் குறையும் பட்சத்தில் நமக்கு சளி, மற்றும் காய்ச்சல், நாள்பட்டசோர்வு, மன அழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் ,இதுபோன்று பாதிப்படைந்தவர்களுக்கு பூசணி விதைகள் மட்டுமே நிவாரணியாகும்.

நம் நாட்டில் இன்று பலரும் பாதிப்படைந்திருப்பது சர்க்கரை நோயால்தான். அந்த சர்க்கரை நோயானது அக்காலத்தில் வயதானோருக்கு மட்டும் வந்தது. ஆனால் இக்காலத்திலோ பிறந்த குழந்தை முதல் அனைவரையும் தாக்கும் ஒரு நோயாக சர்க்கரை நோயானது உருவெடுத்துள்ளது. அதிலிருந்து மீள என்ன வழி என பாதிப்படைந்தவர்கள் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலமானது பூசணி விதைகளில் அதிகம் உள்ளது. இந்த அமிலமானது இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும்குணம் கொண்டது. இது சர்க்கரை நோய் வராமல் தடுக்ககூடியது.

pumpkin seeds in tamil

lநாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் நல்ல கொழுப்பு மற்றும்கெட்ட கொழுப்பும் அடங்கியிருக்கும். ஆனால் பூசணி விதைகளில் நல்ல ஆரோக்யமான கொழுப்பு மட்டுமே உள்ளதால் இதிலுள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்டுகள், கல்லீரல் இயக்கத்தினை சீராக்குகிறது. மேலும் பூசணி விதையுடன் ஆளி விதையும் சேர்த்து சாப்பிட்டால் பலன்கள் நமக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நம்மில் பெரும்பாலானோருக்கு இரவு நேரங்களில் ஆழ்ந்த துாக்கம் வராமல் தவித்து வருகின்றனர். இவர்கள் என்ன சிகிக்சை எடுத்தாலும் துாக்கம் வந்த பாடில்லை என தவிக்கின்றனர்.இதுபோன்றோருக்கு சிறந்த மருந்து பூசணி விதைகளே. அதாவது இந்த விதையில்உ ள்ள டிரிப்டோபான் எனும் அமினோ அமிலங்கள் துாக்கத்தை துாண்டும் செரட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்க உதவும். எனவே துாங்கபோவதற்கு முன்னர் இந்த விதையினை சாப்பிட்டால் ஆழ்ந்து துாங்கலாம். இதிலுள்ள ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பொருள்கள் உள்காயங்களை ஆற்றும் தன்மைகொண்டவை.

pumpkin seeds in tamilஒரு சிலருக்கு எப்போதும் சோர்வாகவே இருக்கும்.இதுபோன்றோர் ஏதோ சத்தில்லாமல்இருப்பது போன்ற உணர்வே இவர்களிடம் மிதமிஞ்சி காணப்படும்.இதுபோன்றோர் பூசணி விதைகளை காய வைத்து அதனை பொடி செய்து அப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் வலிமையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கே உண்டான ரெகுலர் மாத விடாய் காலத்தில் இவர்கள் பல பிரச்னைகளை சந்திப்பது உண்டு.ஆனால் இதுபோன்ற விதைகளை நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலிகள், மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற முக்கியமான பிரச்னைகளில்இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம்.

pumpkin seeds in tamilஇன்றைய நாகரிக உலகில் குழந்தையின்மை பிரச்னையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. திருமணத்திற்கு பிறகு இதற்கு யார் காரணம் என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக குடும்பத்தில் பிரச்னைகள் தலைதுாக்கி வருகிறது. இதுபோன்ற பாதிப்பில் உள்ள ஆண்கள் இவ்விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால் உடல் உஷ்ணம் குறைந்து விந்தணுக்களின் திறனானது அதிகரிக்கும். மேலும் இவ்விதை பாலியல் ஹார்மோன்களை துாண்டும் குணம்கொண்டது.

Updated On: 31 Aug 2022 10:42 AM GMT

Related News