/* */

ப்ராஸ்டேட் நோயினை ஹோமியோபதி சிகிச்சையில் குணப்படுத்த முடியுமா?

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் ஒன்று ப்ராஸ்டேட். இது ஒரு சுரப்பி. இதில் ஏற்படக்கூடிய நோய்க்கு ஹோமியோபதி சிகிச்சை மூலம் தீர்வு காண முடியுமா? என பார்ப்போம்.

HIGHLIGHTS

ப்ராஸ்டேட்  நோயினை ஹோமியோபதி   சிகிச்சையில் குணப்படுத்த முடியுமா?
X

PROSTATE DISEASE TREATMENT டாக்டர் எனக்கு ஆறேழு முறை சிறுநீர் போகிறது.சிறுநீர் கழிக்க உட்கார்ந்தால் உடனே வருவதில்லை. மிகவும் மெதுவாக வருகிறது. கடைசியில் சொட்டு சொட்டாக வருகிறது. மிகுந்த எரிச்சல் சில சமயம் ஏற்படுகிறது.யூரின் போன திருப்தியே இல்லை. இதனால் இரவு துாக்கம் மிகவும் பாதிக்கிறது என்ற சுமார் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் பலர் கூறுகின்றனர். ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தினால் வரும் பிரச்னைதான் இந்த தொல்லை. மிகவும் தொல்லை தரக்கூடியதாகவும் வயதானவர்களிடையே காணப்படுகின்ற இந்த பிரச்னை பற்றி குறைவான அறிவே மக்களிடம் காணப்படுகிறது.

ஆண்இனப்பெருக்க உறுப்பின் ஒரு பகுதிதான் ப்ராஸ்டேட்சுரப்பி. இது சிறுநீர்பையும், சிறுநீர்போகும் பாதையும் இணையும் இடத்திலுள்ளது. அதவாது சிறுநீர் பையின் கழுத்து பாகத்தில் சிறுநீர் பிரியும் பாதையை ஒட்டி அமைந்திருக்கிறது.ஆண், பெண் சேர்க்கையின்போது இந்த சுரப்பி ஒரு மெல்லிய சற்று வெண்மையான பசை தன்மையுடைய ஒரு திரவத்தை சுரக்கிறது. இதில் ப்ரக்டோஸ் உள்ளதால் விந்தணுவானது உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.இது ஒரு லுாப்ரிகண்ட் போன்று செயல்பட்டு விந்தணுக்கள் பெண் உறுப்பு பாதையில் எளிதாக செல்வதற்கு வழி செய்கிறது. இந்த காரத்தன்மையுள்ள திரவத்திலுள்ள என்சைம்கள் கரு முட்டையும், விந்தணுவும் இணைவதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வல்லது. இதனுடைய செயல்பாடு ஆண் ஹார்மோன்களால் செயல்படுத்தப்படுகிறது.

ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் என்பது 40 வயதிற்கு முன்பு அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் சுமார் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சுமார் 80 வயதானவர்களுக்கு 75% இது ஏற்படுகிறது. சிறுநீர் போகும் பாதையில் வயதானவர்களுக்கு பலவிதமான தொந்தரவுகளுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம்தான் முக்கிய காரணமாக அமைகிறது. இது வீக்கம் அடையும்போது சிறுநீர் பிரியும் பாதையை இறுக்குவதால் சிறுநீர் செல்வது தடைபடுகிறது.

வீக்கம் ஏன் ஏற்படுகிறது?

பொதுவாக மனிதனுக்கு ஆண் மற்றும் பெண் ஹார்மோன்கள் இயல்பாக உற்பத்தியாகின்றன. இதில் ஆண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. பெண் ஹார்மோன்கள் மிக குறைவாக சுரக்கின்றன. 40 வயதிற்கு மேல் இந்த ஆண் ஹார்மோன்களின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. ஆனால் மிக குறைவாக சுரக்கின்ற பெண் ஹார்மோனின் சுரப்பு அதே அளவில் இருக்கிறது. இந்த மாற்றம்தான் ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 4 நபர்களில் மூவருக்கு ப்ராஸ்டேட் வீக்கம் ஏற்படுகிறது. இதில்சுமார் 11 ஆண்களில் ஒரு ஆணுக்கு ப்ராஸ்டேட் கேன்சர் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

வீக்கத்தின் அறிகுறிகள்

*முக்கிய அறிகுறி அடிக்கடி சிறுநீர் போகும் தன்மைதான். குறிப்பாக இரவில் நோயாளிகள் 4 அல்லது 5 முறை சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி வரும்.

*இந்த உணர்வு பகலிலும் தொடர ஆரம்பிக்கும்.

*சிறுநீர்கழிக்கும் உணர்வானது மிக அவசரமாக ஏற்படும்.இவர்கள் உடனே டாய்லெட்டிற்கு செல்லாவிட்டால் எங்கே தானாகவே சிறுநீர் வெளியே வந்துவிடுமோ? அல்லது கட்டுப்படுத்த முடியாதோ? என்ற அளவிற்கு ஒரு வேகம் தோன்றும்.

*சிறுநீர் கழிக்கும்போது உடனே வராது சிறிது நேரம் கழித்தே வரும்.

*இந்த நோயாளிகளுக்குசிறுநீர் கழித்த பின்னரும் திருப்தி இருக்காது. சிறுநீர் பையில் மீதம் கொஞ்சம் தங்கிவிட்டது போன்ற உணர்வு இருக்கும்.

*சிலருக்கு தொப்புளின் கீழ் அடிவயிற்றில் தொடர்ச்சியாக வலி தோன்றலாம். இதற்கு காரணம் சிறுநீரிலோ அல்லது சிறுநீர் பையிலோ ஏற்படும் கிருமி தொற்றுதான்.

ப்ராஸ்டைட்டிஸ்

ப்ராஸ்டேட் சுரப்பியில் அழற்சி ஏற்படுவதை ப்ராஸ்டைட்டிஸ் என்கிறோம். சுமார் 50%ஆண்களுக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் இந்தநிலை ஏற்படுகிறது. இது பொதுவாக ப்ராஸ்டேட் சுரப்பியின் வெளிப்புறம் உள்ள திசுக்களை பாக்டீரியா தொற்று கிருமிகள் தாக்கும்போது அதிகம் ஏற்படுகிறது. இது மிகவும் தீவிரமாகும் போது உள்ளுக்கும் பரவுகிறது. இந்த நோயாளிகள் வலியோடு அடிக்கடி சிறுநீர் கழிப்பது , குறிப்பாக துாக்கத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு , முதுகெலும்பின் அடிப்பாகத்தில் வலி, காய்ச்சல், குளிர், முதலியன ஏற்படும். நாள்பட்ட ப்ராஸ்டேட் அழற்சிக்கு காரணம் சிறுநீர் பாதையில் ஏற்படுகின்ற கிருமி தொற்றுதான். இதில் ஆண், பெண், சேர்க்கையின்போது விந்து வெளியேறும்போது மிகுந்த வலியும், அல்லது ரத்தம் கலந்த விந்து வெளியேறும் நிலை ஏற்படலாம்.

ப்ராஸ்டேட் புற்றுநோய்

ஆண்களில் வயதானவர்களுக்கு மிக அதிகம் ஏற்படுகிற புற்றுநோய். இந்த ப்ராஸ்டேட் கேன்சர்தான். குதத்தின் வழியாக விரலைவிட்டு பரிசோதனை செய்யும்போது ப்ராஸ்டேட் சுரப்பி கட்டியாக அல்லது வீக்கமாக தட்டுப்படும். சுமார் 2 செ.மீ. விட்டத்திற்கு சற்றே தடிமனாக ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டி இருக்கும்.இந்த நோயாளிகளுக்கு இடுப்பு கூட்டின் உட்புறத்தில் ஓர் இனம் புரியாத வலியும் முதுகெலும்பின் அடியில் வலியும், அல்லது சொட்டு சொட்டாக ஒழுகுவது போன்ற பல தொந்தரவுகள் ஏற்படும். இதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த புற்றுநோய் அருகாமையில் உள்ள உறுப்புகளையும் தாக்கி உயிருக்கே கேடு விளைவிக்கும்.

ஹோமியோபதி சிகிச்சை

ப்ராஸ்டேட்சுரப்பியின் வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயம் தேவை இல்லை. இதனை எளிமையாகவும் முழுமையாகவும் ஹோமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்த இயலும். இருப்பினும் ஹோமியோபதி மருத்துவத்தில் நோயாளியின் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்தே மருந்துகள் தேர்வு செய்யப்படவேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் கான்ஸ்டிடியூஷனல் ட்ரீட்மென்ட் டினால் ப்ராஸ்டேட் சுரப்பி இயல்பான நிலைக்கு வருவதோடல்லாமல் ஒரு முழுமையான ஆரோக்யமான நிலையையும் கொடுக்கிறது.

வயதானவர்களே தொல்லைதான் என நினைக்கும் இந்த காலத்தில் ப்ராஸ்டேட் பிரச்னையினால் அவர்கள் தொல்லையுறும்போது, நோயாளியின் துாக்கம் கெடுவதோடு மற்றவர்களுக்கும் அவர்கள் பிரச்னையாகிறார்கள். ஆகவே 50 வயதிற்கு மேற்படும்போது இந்தப்ராஸ்டேட் வீக்கத்தினால் ஏற்படும் அறிகுறிகள் ஏதாவது தென்படுமானால் ஆரம்ப நிலையிலேயே உங்கள் அருகாமையில் உள்ள ஹோமியோபதி டாக்டரை அணுகினால் தக்க சிகிச்சை மூலம் அவர் முழுமையாக குணப்படுத்துவதோடு மீதமுள்ள வருடங்களை இனிமையாக கழிக்க வழிவகுப்பார் என்பதே என் நம்பிக்கை.

நன்றி ;டாக்டர்.பி.முகுந்தன், சேலம்.

Updated On: 24 July 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்