/* */

மழைக்கால நோய்களிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?

Safety Precautions -மழைக்காலம் என்றாலே ஒரு சிலருக்கு உடல் ஆரோக்ய பாதிப்பு ஏற்டுகிறது.ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மழைக்கால நோய்களிலிருந்து தப்பித்துவிடலாம்.

HIGHLIGHTS

மழைக்கால நோய்களிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?
X

Safety Precautions - வெயிலோ மழையோ குளிரோ, தட்ப வெப்பநிலைக்கேற்ப நமது உடலானது தகவமைத்துக்கொள்ளும் இயல்புடையது.அதேபோல அந்த தட்ப வெப்பத்திற்கேற்ப வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது பருவமழை துவக்கமான நேரம். ஆனால் சீசனுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையானது கனமழையாகவோ, சாதாரண நிலையிலோ, அல்லது சாரல் மழையாகவோ பெய்ய துவங்கியுள்ளது.

டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே ஒரு சிலஇடங்களில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதற்கான சிகிச்சை விழிப்புணர்வுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதுபோல் மழைக்காலம் என்றாலே நோய்கள் வரிசை கட்டிநிற்கும். மாநிலத்தின் எந்த ஊரில் எடுத்துக்கொண்டாலும் ஆஸ்பத்திரிகளில்கூட்டம் நிரம்பி வழிவது வாடிக்கையான ஒன்று. ஒன்றுதெரியுமா உங்களுக்கு? வெயில் காலங்களில் எறும்பை போல சுறுசுறுப்பாக திரியும் நாம் திடீரென மழை பெய்யும்போது சோர்ந்து விடுகிறோம்? எதனால்? நம் உடலுக்கு குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாததால் சளி,காய்ச்சல், தொந்தரவால் பாதிப்படைகிறோம்.

ஒரு சிலருக்கு மழை துாறல் சிறிது பட்டாலே அரை மணிநேரத்திற்கும் மேலாக தும்ம ஆரம்பித்துவிடுவார்கள். இதுபோல் உள்ளவர்கள் இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம் பயக்கும். மழைக்காலங்களில் ஏற்படும் நோயகளிலிருந்து நம்மைபாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி செயல்படுவதென நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். மழைக்காலம், பனிக்காலம், என்றாலே அதிக சளி, மூச்சுத்திணறல், இருமல், தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்வது அவசியம். ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும்போது, மழையில் நனையக்கூடாது. மழையில் நனைந்தால் இருமல்,சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும்.

இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்த தமனிகளை சுருங்க வைப்பதால், ஆபத்தில் முடியலாம்.. மாரடைப்பு மற்றும் வால்வு கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் வாய்ப்புஉள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால் , நோயை கூடுதலாக்கிவிடும். சர்க்கரை நோயாளிகள் மழைக்காலத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, செய்ய முடியாது. எனவே ரத்த சர்க்கரை கூட வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.அதிக குளிர், அதிகாலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, செய்யும்போது மாரடைப்புஏற்பட வாய்ப்புள்ளது.

தேங்கிய மழைநீர் மூலம் சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், வரலாம். பன்றிக்காய்ச்சல் கிருமிகள் (எச்1என்1)அதிக குளிர், மழை, சீதோஷ்ணத்தில் அதிகமாக உற்பத்தியாகும். எனவே ,சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும்.பெண்கள் ஈரத்தலையுடன், இருந்தால் சைனஸ் தொந்தரவு ஏற்படும். வைரசால் கண் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

டீ, காபி அதிகம் சாப்பிடலாமா?

*பாதுகாப்பில்லாத குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

*கொதிக்க வைத்த வெது வெதுப்பான நீரை குடிப்பதால்,காலரா, வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.

*மழை பெய்யும்போது சாக்கடைகழிவு நீரும் சேர்ந்துவிடும்.தவிர்க்க முடியாமல் நடந்து வந்தாலும் உடனடியாக ஆடைகளை மாற்றி கால்களை நன்கு கழுவேண்டியது அவசியம் ஆகும்.

*மழையில் நனைந்த ஆடைகள் மூலம், தோல் நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு

*உடல் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர்குடிக்க வேண்டும்

*குளிர், மழைக்காலத்தில் உடலை வெது வெதுப்பாக வைத்திருக்க சிலர் அதிகமாக சிகரெட் புகைப்பர். மது அருந்துவர். இவர்களுக்கு மாரடைப்பு நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரலாம்.

*காபி, டீ, அதிகமாக குடித்தால் வயிற்றுப்புண் ஏற்படும்.சர்க்கரை நோயாளிகளின் கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகிவிடும்.

எனவே மழைக்காலங்களில் முடிந்த வரை மழைநீரில் நனையாதீர்கள். குடையில்லாமல் செல்லாதீர்கள். அப்படியே எதிர்பாராமல் நனைந்தாலும் உடனடியாக கை, கால்களை,கழுவி ஆடைகளை மாற்றிக்கொள்ளுங்கள். முடிந்தவரை நாம் பாதுகாப்பாக இருப்போம்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 23 July 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  3. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  6. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  7. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  10. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...