/* */

டெங்கு காய்ச்சல் தடுப்புமுறைகள் என்ன செய்யணும்? ....படிச்சு பாருங்க....

Dengue Fever Awareness in Tamil - உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பரவலானது கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HIGHLIGHTS

டெங்கு காய்ச்சல் தடுப்புமுறைகள்  என்ன செய்யணும்? ....படிச்சு பாருங்க....
X

டெங்கு  கொசு

precautionary steps for dengu fever

Dengue Fever Awareness in Tamil -உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் நம்மை விட்டு முழுவதுமாக அகலவில்லை. ஆங்காங்கே ஒன்றிரண்டு பேருக்கு தொற்றுஇருக்கத்தான்செய்கிறது. அவரவர்களின் பாதுகாப்பு அவரவர்கள் கையில் என வாழ்க்கைச்சக்கரமானது தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இருந்த போதிலும் சீசன் நோய்களான டெங்கு, ப்ளு காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையானது சற்று கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சுற்றுச்சூழலும் சற்று குளிர்ச்சியாக உள்ளதால் இதனாலும் பொதுமக்கள் சற்று உடல் நல பாதிப்புகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். எதுவாயினும் கூட்டம் கூடும் இடங்களில் தக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நமக்கு நல்லது.

டெங்குகாய்ச்சலுக்கு போன்பிரேக் காய்ச்சல் என்ற பெயரும் உண்டு. பல நுாற்றாண்டுகளாக உள்ள நோய் தான். ஆர்என்ஏ வைரஸ் என்ற நுண்ணுயிர்களால் வருகிறது. மியூடேஷன், அடாப்டேஷன் காரணங்களால் கிருமிகள் பலம் அடைந்துள்ளன. ஏ.இ.டி.இ.எஸ் குரூப் கொசுக்களால் பரவுகிறது. இலை தெளிவான நல்ல நீ்ரில் வளர்பவை. காலை,மாலை, பகற்பொழுதில் கடிக்கும் தன்மை உள்ளவை. இவற்றை அழிப்பதும் பல காரணங்களால் கடினமாக உள்ளது.

precautionary steps for dengu fever


precautionary steps for dengu fever

காய்ச்சல் எல்லாம் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சல் வந்தவர் எல்லாம் இறப்பதும் இல்லை. கொசுக்கள் நோயாளியைக் கடித்து மற்றவரைக் கடித்து மற்றவரைக் கடிக்கும்போது டெங்கு பரவுகிறது. உடலில் ரத்த அணுக்கள் (வெள்ளை அணுக்கள் குழுமம், தட்டணுக்கள்) எலும்பு மஞ்ஜை, ஈரல், நுரையீரல் போன்ற உறுப்புகள் இதனால் பாதிக்கப்படும். பிறகு மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். 95 சதவீத பேருக்கு காய்ச்சல், உடல் சோர்வு உடல்வலி, மூட்டுவலி, ஜலதோஷம், பசியின்மை,என்று இருந்து தானாகவோமருத்துவம் பார்த்தோ சரியாகிவிடும்.

3 முதல் 5 சதவீத பேருக்கு மேற்கூறியவை அதிக சிரமத்துடன் வாந்தி, உணவு எடுக்காமை, ஸ்கின்.ரஸ், ஈரல் வீக்கம், குறைந்த அளவு உதிரக்கசிவு, வயிற்றில் நெஞ்சில் நீர் சேர்க்கை, ரத்த சோகை என்று வரலாம். நோயின் தன்மைக்கேற்ப புற நோயாளியாகவோ உள்நோயாளியாகவோ மருத்துவம் பெறலாம். வெகுசிலருக்கே ஹேமோராஜிக் ஸ்டோக், ஸ்டோக் சென் ரோமி போன்ற தீவிரமான நோய் வருகிறது. (1000 ல் -100000ல் ஒருவருக்கு) . இதற்கு ஐசியு மருத்துவம், தொடர் மருத்துவம் உண்டு. இதிலும் 90 முதல் 95 சதவீத வெற்றி முறையான மருத்துவத்தால் உண்டு. மேற்கூறியவை நோயாளிக்கு உள்ள மற்ற நோய்கள் குறைபாடுகள் கொண்டு தீவிர தன்மை மாறும். எ.கா. சர்க்கரை , ஆஸ்த்துமா, தவறான பழக்கங்கள், எதிர்ப்பு சக்தி குறைநிலை, குழந்தைகள் பெண்கள், முதியவர் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இக்கிருமிகள் குறிப்பிட்ட காலத்தில் தாமே அழியும் தன்மை தீவிரம் குறையும் தன்மை உள்ளதால் இக்காலத்தில் உடம்பின் இயற்கை செயல்பாடுகளைக் காப்பாற்றினாலே நோய் குணமாகிவிடும். மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி உபயோகிக்கும் போது டாக்டர் நோயின் தீவிர தன்மையை உணரமுடியாததால் மருத்துவம் சிக்கலாகிறது.

காலதாமதமாக வருவதால் பிரச்னையாகவும் உள்ளது. கிருமிகள் டென்1, டென்2, டென்3, டென்4, என்று 4 வகையாக உலகளவில் உள்ளது. இந்த 4 வகையும் இந்தியாவில் உள்ளது. 120 கோடி மக்களில் டெங்கு நோய் இறப்பு மிக மிகக்குறைவே . (விபத்து, புற்றுநோய், மாரடைப்பு, என பல நோய்களில் இறப்பு லட்சக்கணக்கில் உள்ளது.) சுகாதார நடவடிக்கைகள் , விழிப்புணர்வு மூலம் டெங்குவால் வரும் இழப்பைக் குறைத்துவிடலாம். நீர் தேங்காமை, கொசுஒழிப்பு சுகாதார (பீடியாடிக்கல்) உணவு, கொசுவலை, கொசு ரிபல்லண்ட்ஸ், நல்பழக்கங்கள். ஆரம்பகால மருத்துவம் , தொடர் மருத்துவம், பிறநோய் மருத்துவம், யாவும் இதில் முக்கியம். அலோபதி, ஹோமியோபதி, முறைகளில் சரியான மருத்துவம் உண்டு.

precautionary steps for dengu fever


precautionary steps for dengu fever

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

கொசு ஒழிப்பு சரியான கால இடைவெளிகளில் தேவை. அடிப்படை சுகாதார பழக்கங்கள் ஆடைக்குறைப்பு (புல் ஸ்லீவ்ஸ்)ஆரோக்ய உணவு பழக்க வழக்கங்கள் ஆரம்பத்திலேயே டாக்டரிடம் நேரடி மருத்துவம், தொடர் மருத்துவம், நோயாளிக்கு ஓய்வு, மற்றவர்க்கு பரவாமல்இருக்க தனி அறை, கொசுவலை, ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். பயமின்றி நோய் எதிர்கொள்ளல் முக்கியம். எனவே நோய் முற்றியவுடன் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் , நோயின் ஆ ரம்பக்கட்டத்திலேயே உரிய சிகிச்சையினை மேற்கொண்டால் எந்த நோயிலிருந்தும் விடுபடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 9:51 AM GMT

Related News