'மூலம் வந்தால் கோபம் வரும்ங்க..' என்ன செய்யலாம்..? வாங்க பார்க்கலாம்..!

Piles Treatment in Tamil-மூலம் என்கிற பைல்ஸ் உஷ்ணத்தால் ஏற்படுகிறது. பெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு இது அதிகம் பாதிக்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மூலம் வந்தால் கோபம் வரும்ங்க.. என்ன செய்யலாம்..? வாங்க பார்க்கலாம்..!
X

piles treatment in tamil-மூல நோய் (மாதிரி கோப்பு படம்)

Piles Treatment in Tamil-பைல்ஸ் இப்போது பரவலாக எல்லோருக்கும் வரும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த நோய் மிகவும் வேதனைமிகுந்தது. இது மனதையும் பாதிக்கும். அதிகமாக கோபம் வரும். அதனாலேயே 'மூலம் பிடிச்சவன் மாதிரி கோவப்படுற' என்பார்கள்.

இது ஆசனவாய் அல்லது கீழ் மலக்குடலின் உள்ளே அல்லது வெளியே உள்ள நரம்புகள் வீக்கமடையும்போது நோயாக மாறுகிறது. இது முதல் ஒரு நிலை ஆகும். மலம் கழிக்கும் போது வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் தொடர்ந்து ஏற்படுவது இந்த பைல்ஸ் பிரச்சனையின் அறிகுறிகளாகும்.

அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் எழுந்து உட்கார்ந்தாலும் கூட வலி ஏற்படுகிறது. அதனால் உடனே சிகிச்சை பெறுவது நல்லது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மேலும் ஆபத்தை அதிகரிக்கும்.

அதற்கு சில வீட்டு வைத்திய முறைகள் இருக்கு. அதை பார்ப்போம் வாங்க.

  • கற்றாழை ஜெல்லை ஆசன வாய் மீது பகுதி மீது தடவினால் வலி மற்றும் அரிப்பு இரண்டிலும் நிவாரணம் கிடைக்கும்.

piles treatment in tamil

  • ஆலிவ் எண்ணெயை வீக்கமுள்ள இடத்தில் தடவினால் வீக்கம் குறையும்.
  • சீரகத்தை தண்ணீரில் கலந்து அரைக்கவும். இந்த பேஸ்ட்டை ஆசன வாய் மீது பகுதியில் தடவவும். வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • லஃப்பாவின் சாற்றை எடுத்து அதில் சிறிது மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
  • எலுமிச்சை சாற்றில் இஞ்சி மற்றும் தேன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை குடிப்பது நன்மை பயக்கும்.
  • தேங்காய் எண்ணெய் தடவினால் எரிச்சல் மற்றும் வீக்கம் குறையும்.
  • ஒரு கிளாஸ் மோரில் கால் பங்கு ஓம பொடியைச் சேர்த்து மதிய உணவுக்குப் பிறகு குடிக்கவும்.

பைல்ஸ் அறிகுறிகள்

  • பைல்ஸ் இருந்தால் மலம் கழிக்கும் போது இரத்தம் சேர்த்து வெளிவரும். இப்படி ஒரு அறிகுறியைக் கண்டால், சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

piles treatment in tamil

  • ஆசன வாய் பகுதியை தொடும் போது, அவ்விடத்தில் ஏதேனும் வீக்கம் இருப்பதைக் கண்டால், பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம். மலம் கழித்த பின்னரும், நீங்கள் நிம்மதியாக உணரவில்லை என்றால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
  • மலம் கழிக்கும் போது, சளியும் வெளியேறுவதைக் கண்டால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறியாகும்.

மூல நோய், பல நாட்களாக நீடித்தால் அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். அதனால் ஆசன வாய் பகுதியில் காயங்கள் ஏற்படுவதுடன் பாரு போல சிவந்து,வளர்ந்து நிற்கும். உட்காரவே முடியாது. ஆகவே உடனே, மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

மேற்கூறப்பட்டவைகள் மூல நோயை முழுமையாக குணமாக்கும் என்று கூறிவிட முடியாது. பிரச்னைகளுக்கு தீர்வு தரும்.மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், நிரந்தர தீர்வுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Aug 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...