permethrin lotion uses in tami சொறி சிரங்கு நோயைக் கட்டுப்படுத்தும் பெர்மெத்ரின் லோஷன் பற்றி தெரியுமா?
permethrin lotion uses in tamiமனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் ஒன்றுதான் சொறிசிரங்கு. இதுபோன்ற நோய்கள் உடனடியாக குணமாகாது. தொடர் சிகிச்சைகள் மூலமாகதான் குணமாகும்என்பதை அனைவரும் அறிய வேண்டும்.
HIGHLIGHTS

உடலில் ஏற்பட்டுள்ள சொறி , சிரங்குக்கான மாதிரி படம்.
permethrin lotion uses in tami
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரவும் ஒரு வகை தொற்றுநோய்தான் ஸ்கேபீஸ் என அழைக்கப்படுகிறது.இதனால் சொறி ,சிரங்குகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவையனைத்தும் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான தோல்நோய் ஆகும். பெண் நுண்ணுயிர்கள் தோலைத் தோண்டி முட்டைகளிடும். மேலும்இதுபோன்ற நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு க டுமையான அரிப்பு, நமைச்சல் தோன்றும்.ஒரு வருக்கு எவ்வளவு நுண்ணுயிர்களினால் பாதிப்போ அதேஅளவு மற்றவர்களுக்கு பரவும் தீவிர தொற்று நோய் வகை இது.
நோயின்அறிகுறிகள்
நுண்ணுயிர்கள் நம் தோலில் புகுந்தவுடன் உடனடியாக விளைவுகளை ஏற்படுத்தாது. கிட்டத்தட்ட 3 முதல் 6 வாரங்கள் செல்லலாம். இதற்கான அறிகுறிகள் என்னென்ன?இரவில் மோசமாகும் கடுமையான அரிப்புகள், தோலில் மெல்லிய சாம்பல் நிற மேடான வரிகள் விரல்கள், அக்குள் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காணப்படும். குழந்தைகளுக்கு புண்கள் உள்ளங்கை, உள்ளங்கால்கள், கழுத்து, முகம், மற்றும் உச்சந்தலை போன்ற இடங்களில் காணப்படலாம். சொறியினால் புண்கள், கொப்புளங்கள், அல்லது பொருக்குகள் ,உடலில் வீக்க கட்டிகள் போன்றவை அறிகுறிகளாகும்.
நோய்க்கான காரணம்
பெண் நுண்ணுயிர்கள்தான் தோலைத் துளைத்து முட்டையிடுகிறது. சொறி சிரங்கு நோய் பெரும்பாலும் கைகளை குலுக்குதல், அல்லது கட்டிப்பிடித்தல் போன்ற தோலுடன் நேரடியான தொடர்பின் மூலமாகவே பரவுகிறது. படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதன் மூலமும் இதுபோன்ற தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. சொறி சிரங்கு நோயானது ஒருவரிடமிருந்துதான் மற்றவருக்கு பரவும். நுண்ணுயிர்கள் மனிதரில் மட்டும் தான்இனப்பெருக்கம் செய்ய முடியும். செல்ல பிராணிகளால் சொறி சிரங்கு நோயினைப் பரப்ப முடியாது.
பெரிமெத்ரின் லோஷன் மருந்தானது ஆன்டிபாரசைட் மருந்தாகும். சிறிய வகை பூச்சி கடியினால் நம் உடலில் ஏற்படக்கூடிய நமைச்சல், அரிப்புகளை குணப்படுத்துகிறது. மேலும் இந்த மருந்தானது பூச்சிகள் மற்றும் அதன் முட்டைகளை கொல்லும் .
உங்களுடைய டாக்டர் இந்த மருந்தினை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்க வேண்டும் என பரிந்துரைப்பார். மேலும் இ ம்மருந்தை உபயோகிக்கும் வழிமுறைகளை உபயோகிக்கும் முன்னர் நன்கு படித்துவிட்டுஉபயோகிக்கவும். இந்த மருந்தை உபயோகிக்கும் முன்னதாக உங்களுடைய தோலானது சுத்தமானதாகவும், உலர்ந்ததாகவும், மற்றும் குளிர்ச்சியானதாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த மருந்தை உபயோகித்த பின்னர் 8 முதல் 14 மணி நேரத்திற்குள்ளாக இதனைக் கழுவி விடவேண்டும்.பெரும்பாலானோர் இதனை உபயோகித்து குணமாகிவிட வேண்டும் என நினைக்கின்றனர்.ஆனால் இம்மருந்தினை இரண்டாவது முறை உபயோகிக்க குறைந்த பட்சம் 7 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். ஒருசில அரிப்புகள், சொறி சிரங்கு ஆகியவற்றைக்குணப்படுத்த ஒரு சில வாரங்களும் ஆகலாம்.
பக்கவிளைவுகள்
இம்மருந்தினை உபயோகிப்பவர்களுக்கு ஒரு சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதாவது சிறிதான எரிச்சல், கொட்டியது போன்ற உணர்வு, கூச்ச உணர்வு போன்றவை இந்த மருந்தினை உபயோகிப்பதனால் ஏற்படலாம். மேலும் ஒரு சில ருக்கு இது சிறிய விளைவுகளை மட்டும் ஏற்படுத்தலாம்.
இந்த மருந்தினை உபயோகிக்கும் முன்னர் நீங்கள் உங்களுடைய தோல் நிலை, மற்றும் அலர்ஜியினால் ஏதாவது பாதிப்பு உள்ளதா? உணவு அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளா? அல்லது ஆஸ்துமாவால் பாதிப்பு உண்டா என்பதை டாக்டர் அறிந்துகொள்வார். மேலும் கர்ப்பிணியாக இருந்தாலோ அல்லது பாலுாட்டும் தாய்மார்களாக இருந்தாலும் அதனை உரியமுறையில் டாக்டரிடம் தெரிவித்துவிட வேண்டும். தோல் எரிச்சல்,குத்தும் உணர்வு போன்றவை பக்கவிளைவுகளாக ஏற்பட வாய்ப்புண்டு.
மருந்தை உபயோகிப்பது?
இந்த பெர்மெத்ரின் லோஷன் மருந்தினை வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். மேலும் உங்கள் டாக்டர் உங்களுக்கு பரிந்துரைத்த கால அளவில் மட்டும் இதனை உபயோகிக்கவும். மருந்தினை உபயோகிக்கும் முன்னர் பாட்டிலை நன்கு குலுக்கு பின்னர் சீரான பகுதியில் தடவவும்.
மருந்தின் செயல்பாடு?
பெரிமெத்ரின் என்பது ஒரு பைரிதைராய்டு கலவையாகும். இது எக்டோபராசிட்டிசைடுகள் என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்தது.பல்வேறு பூச்சிகளின் நரம்பு மண்டலத்தில் செயல்படுகிறது. அது பக்கவாதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் . அரிப்பு பரப்பிகள் மற்றும் தலை மற்றும் அகட்டு முடி பேன் ஆகியவற்றை உள்ளடக்கும்.
எச்சரிக்கைகள்
பெரும்பாலும் கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.விலங்கு ஆய்வுகள் இதில் கருவிற்கு குறைந்த அல்லது எந்த ஆபத்தும் இல்லை என்று காண்பித்துள்ளது எனினும் மனித ஆய்வுக்கு சில தடைகள் உள்ளன. உங்கள் டாக்டரை கலந்து ஆலோசிக்கவும்
பால் புகட்டுதல்
தாய்ப்பாலூட்டும் போது அநேகமாக பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். குழந்தைக்கு குறிப்பிடத்தக்க இடரை மருந்து குறிக்கவில்லை என்று வரம்புமிக்க மருத்துவ குறிப்புகள் பரிந்துரைக்கின்றன.