மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அறிகுறிகள்..! எளிதாக எதிர்கொள்ள என்ன செய்யலாம்..?

period symptoms in tamil-மாதவிடாய் பெண்களுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அது எப்படியென்று பார்ப்போம் வாங்க.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அறிகுறிகள்..! எளிதாக எதிர்கொள்ள என்ன செய்யலாம்..?
X

period symptoms in tamil-மாதவிடாய் பிரச்னை.(கோப்பு படம்)

மாதவிடாய் பொதுவிளக்கம்

period symptoms in tamil-பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிடாயானது ஒவ்வொரு மாதமும் 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் என்பது கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகும் முதிர்ந்த கருமுட்டைகளின் வெளியேற்றம். பொதுவாக மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். மருத்துவ அறிவியல் இதற்கு "மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறி" என்று வரையறுக்கிறது. இது மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு பெண்ணின் உடலில் நிகழும் மாற்றங்கள் ஆகும்.

சில பெண்களுக்கு லேசான அறிகுறிகளைக்காட்டும். ஆனால், சிலருக்கு கடுமையான அறிகுறிகள் ஏற்படும்.அதனால் வழக்கமான பணிகள் அல்லது வீட்டு வேலைகளைச் செய்வதற்கு சிரமப்படுவார்கள்.

மாதவிடாய் பெண்களுக்கு உடல் சார்ந்து மட்டுமல்ல மனம் சாந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தும். அதற்கான அறிகுறிகள் என்பது வீக்கம், வயிற்று வலி போன்றவைகள் ஏற்படலாம். இந்த வலி ஏற்படுவதால் உளவியல் சார்ந்ததாகவும் இருக்கலாம். இது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளின் காரணமாக இருக்கலாம். மாதவிடாய் அறிகுறிகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வோம் வாங்க.

முகப்பரு

அண்டவிடுப்பின் போது கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைந்து டெஸ்டோஸ்டிரோன் அளவு சற்று அதிகரிக்கிறது. இது சீபம் எனப்படும் ஒரு வகையான எண்ணெய் (தோலில் உள்ள சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ஒரு எண்ணெய்) உற்பத்தியை சருமத்தில் தூண்டுகிறது.

இவ்வாறு அதிகப்படியான சீபம் உற்பத்தி செய்யப்படுவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் முகப்பருக்கள் பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் அதிகரிக்கத் தொடங்கும் போது, அதாவது மாதவிடாய் நிற்கும் நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

period symptoms in tamil

மார்பக வலி

புரோஜெஸ்ட்டிரோன் அளவு மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில்,அதாவது அண்டவிடுப்பின் போது அதிகரிக்கத் தொடங்குகிறது. இன்னும் விரிவாக சொன்னால், முதிர்ந்த கருமுட்டைகள் வெளியேறும்போது பால் சுரப்பிகள் பெரிதாகின்றன. இதன் விளைவாக, பெண்கள் மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாயின் போதோ மார்பகங்களில் லேசான வலி மற்றும் வீக்கத்தை உணர்கிறார்கள்.

மனநிலை மாற்றம்

மாதவிடாய் சுழற்சி காலங்களில் பெண்களின் மனநிலை வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். ஹார்மோன்களின் மாற்றத்தால் அதிகளவில் அழுகை மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.சில பெண்கள் மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பே, எந்த காரணமும் இல்லாமல் மனச்சோர்வு, பதற்றம் கொள்கின்றனர்.

சோர்வு

மாதவிடாய் நெருங்கும்போது, கருப்பையில் இருந்து முதிர்ந்த கருமுட்டைகள் வெளியேறும். இந்த நிலையே மாதவிடாய்க்கு தயாராகும் நிலை. இந்த நேரங்களில் உடலில் வெப்பநிலை அதிகரித்து, தூக்கப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலகட்டங்களில் தூங்கச்செல்வதற்கு முன் தேநீர், காபி மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதனால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.

தலைவலி

மாதவிடாய் வருவதற்கு முன், பெண்களின் உடலில் செரோடோனின் அளவு குறைவதன் காரணமாக, இரத்தத்தின் அளவு கட்டுப்படுத்துகிறது. இது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம். அக்குபஞ்சர், போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் மற்றும் ஐஸ் ஒத்தடம் ஆகியவை மாதவிடாய்க்கு முந்தைய தலைவலியை சரிசெய்ய உதவும்.

சாப்பிடும் எண்ணம் அதிகரித்தல்

செரோடோனின் அளவு குறைவதால், நம் மூளையில் உள்ள "ஃபீல் குட்" என்ற வேதிப்பொருளின் அளவு மிகவும் குறைவாகிறது. இந்த சமயங்களில் தான் சாக்லேட் மற்றும் பிற சர்க்கரைப் பொருட்களை அதிகளவில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

period symptoms in tamil

குறைந்த அளவிலான மெக்னீசியம் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சாக்லேட்டுகளின் மீது நாட்டம் ஏற்படுகிறது. சாக்லேட்டுகள் மிகவும் கொழுப்பு நிறைந்தவை. எனவே, அவற்றை ஆரோக்கியமான ஸ்மூத்திகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

குடல் பிரச்சினை

மாதவிடாய்க்கு முன் உடலில் அதிகளவில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாயு போன்ற குடல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். ஒரு சிலருக்கு மலச்சிக்கல், மற்றவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற தீவிர பிரச்னைகளும் ஏற்படலாம். இதை குணப்படுத்த, நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக அவகேடோ, முழு தானியங்கள், ஆப்பிள், பெர்ரி மற்றும் நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். சீரான குடல் இயக்கத்தை பராமரிக்க ஜங்க் ஃபுட் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்கவும்.

மாதவிடாய்க்கு முன் இந்த அறிகுறிகள் (PMS) இயல்பானவை. உங்கள் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிது.

Updated On: 29 Aug 2022 8:33 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
 2. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 3. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 4. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 6. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 7. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 8. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 9. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 10. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்