paracetamol tablet uses in tamil-பாராசிட்டமால் மாத்திரையை அளவோடு பயன்படுத்தனும்..! ஒடம்பு முக்கியமுங்க..!
paracetamol tablet uses in tamil-பாராசிட்டமால் மாத்திரை எப்படி பயன்படுத்தனும்? எதுக்கு பயன்படுத்தனும் என்பதை பார்ப்போம் வாங்க.
HIGHLIGHTS

paracetamol tablet uses in tamil-பாராசிட்டமால் (கார்ட்டூன் படம்)
paracetamol tablet uses in tamil-பாராசிட்டமால் மாத்திரை பரவலாக எல்லோருக்கும் தெரிந்த மாத்திரையாகும். இது பொதுவாக லேசான மற்றும் மிதமின உடல் மற்றும் காய்ச்சல் குணமாகப் பயன்படுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான சிக்கல் தீர மற்ற மருந்துகளுடன் பெரும்பாலும் இது பயன்படுத்தப்படுகிறது.
பாராசிட்டமாலில் அனல்ஜெசிக் (வழி நிவாரணி) மற்றும் ஆண்டிபிரைடிக் (காய்ச்சலைக் குறைக்கும் மருந்து) பண்புகள் உள்ளன. வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் சில வேதியல் கூறுகளின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் இது நிவாரணியாக செயல்படுகிறது. உடலில் புரோஸ்டாக்லாண்டின்ஸ் எனப்படும் சில ரசாயனங்கள் உள்ளன, இவை காய்ச்சல் அல்லது உடல் வலிக்களை ஏற்படுத்துகிறது. பராசிட்டமால் இந்த புரோஸ்டாக்லாண்டின்களின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் உடல் வலியைக் குறைக்கிறது. மேலும், இது வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் செயல்படுகிறது. இதனால், இது உடலில் உண்டாகும் அதிக வெப்பத்தை குறைத்து, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. நாம் இப்போது பாராசிட்டமாலின் நன்மைகள் மற்றும் சில எச்சரிக்கைகளை பார்ப்போம்.
பாராசிட்டமால் உள்ளடங்கி இருக்கும் மருந்துகள் பெயர் :
- கால்பால்
- டோலோ
- சுமோ எல்
- கபிமோல்
- ஃபெபனில்
- பைரிஜெசிக்
- மாலிடென்ஸ் (அபோட்)
- ஃபெப்ரினில்
- பாசிமால்
- டி -98
paracetamol tablet uses in tamil
பாராசிட்டமாலின் பயன்கள் மற்றும் நன்மைகள்
- காய்ச்சல்
- வலி
- முதுகின் கீழ்பகுதியில் வலி
- தலைவலி
- பல் வலி
- ஒற்றைத் தலைவலி
- நாள்பட்ட சளி
- அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலில் ஏற்படும் வலி போன்ற சிக்கல்களுக்கு பாராசிட்டமால் தீர்வாக அமைகிறது.
paracetamol tablet uses in tamil
பாராசிட்டமால் அளவு உட்கொள்ளும் விதம்
மருத்துவரின் ஆலோசனையின் படி பாராசிட்டமாலை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், இந்த மாத்திரையை உடைத்து மெல்லாமல், மாத்திரையை முழுவதுமாக விழுங்கவும்.
பாராசிட்டமால் கலவை
- பாராசிட்டமால் (அசிடமினோபன்)
பாராசிட்டமாலின் பக்க விளைவுகள்
- கல்லீரல் பாதிப்பு
- தோலில் எதிர்வினைகள்
- ஆஸ்துமா உண்டாகும் ஆபத்து அதிகமாகிறது.
- லுகோபீனியா (குறைந்த வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை)
- குறைந்த பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை
- வயிற்றில் இருந்து இரத்தப்போக்கு
பாராசிட்டமால் தொடர்பான முன்னெச்சரிக்கைகள்
- பாராசிட்டமால் எடுத்துக் கொண்ட 2 மணி நேரத்திற்குள் ஆன்டாசிட் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
paracetamol tablet uses in tamil
- பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும்போது மது அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வயிற்று பிரச்னைகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
- கர்ப்பகாலத்தில் பெண்கள் பாராசிட்டமாலை எடுத்துக் கொள்ளலாம். எனினும், இந்த மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில், பாராசிட்டமாலின் அளவு மற்றும் அதன் கால அளவை மருத்துவரே தீர்மானிக்க வேண்டும்.
- தாய்ப்பால் கொடுக்கும் போது பாராசிட்டமாலைப் பயன்படுத்தலாம். ஏனெனில், சிறிய அளவிலான பாராசிட்டமால் மட்டுமே தாய்ப்பாலுக்குள் செல்கிறது.
paracetamol tablet uses in tamil
- நீங்கள் நீண்டகால சிகிச்சைக்காக அசிடமினோபன் மருந்துகளை (பாராசிட்டமால்) எடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் சிறுநீரக செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு மற்றும் இரத்தக் கூறுகளின் அளவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். ஏனெனில், அதிக அளவில் பாராசிட்டமாலை எடுத்துக் கொள்வதினால், இது கல்லீரலை சேதப்படுத்துகிறது.