/* */

'உங்கள் தலையில முடி இல்லையா? நிறைய தண்ணீர் குடிங்க, முடி வளரும்'

தலையில் முடி இல்லைன்னா, முகத்தோட அழகுல பாதி குறைஞ்சு போயிடும். தலைமுடியை பாதுகாக்கற அக்கறை இருக்கறவங்க, தண்ணீர் நிறைய குடிங்க...

HIGHLIGHTS

உங்கள் தலையில முடி இல்லையா? நிறைய தண்ணீர் குடிங்க, முடி வளரும்
X

நிறைய தண்ணீர் குடிங்க... தலைமுடி ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லதுங்க...

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால், தலைமுடி நன்றாக வளரும் என்று சொன்னால், தினமும் தண்ணீர் ஊற்றினால் மரம் வளரும், தலைமுடி எப்படி வளரும்? அட என்னப்பா உண்மையாவா சொல்றீங்க... என்றுதான் கேட்க தோன்றும்.

தொடர்ந்து படிங்க... அட உண்மைதான் என நீங்களே ஒத்துக்குவீங்க...


தண்ணீர் குடிப்பது நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. தினமும் 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். போதுமான தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழப்பால் கூந்தல் வறண்டு போய் முடி வளர்ச்சி பாதிப்படைகிறது. நீரிழப்பு சருமத்தை உலர்த்துவது போல் முடியையும் உலர செய்கிறது.

நீரிழப்பால் முடிக்கு போதுமான போஷாக்கு செல்வதில்லை. முடியில் இரத்த ஓட்டம் குறைகிறது. முடியின் வேர்கள் பாதிப்படைகிறது. ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியமும் பாதிப்படைகிறது.

​தாமிரம் குறைபாடு முடியின் நிறத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கால்சியம் தலைமுடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு முடி உதிர்தல் பிரச்சினையை உண்டாக்குகிறது. துத்தநாக குறைபாடு முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. முடி வளர்ச்சிக்கு முக்கியமான செபாசியஸ் சுரப்பிகளின் அளவை பாதிக்கிறது.

​போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முடியின் வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் தண்ணீரில் நிறைய உள்ளது.

​தினமும் குடிக்கும் தண்ணீரின் தரமும் முடி வளர்ச்சியை பாதிக்கிறது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் முடியின் தண்டு வீங்கி சேதமடையச் செய்யும்.


ஒரு முடியின் எடையில் 25 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது முடியின் வலிமையையும் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தலையில் உள்ள பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்குகிறது. உச்சந்தலை பிரச்சினைகளை போக்குகிறது.

தண்ணீர் உச்சந்தலையில் உள்ள நரம்பு முனைகளை தூண்டுகிறது. இது வேர்களை சுறுசுறுப்பாக வைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. முடியின் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிகளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஏனெனில் நச்சுக்களின் இருப்பு முடி வளர்ச்சியை பாதிக்கிறது.


​பெண்கள் ஒரு நாளைக்கு 9 கப் தண்ணீரையும், ஆண்கள் ஒரு நாளைக்கு 13 கப் தண்ணீரையும் குடித்து வர வேண்டும். வயது மற்றும் உடல் செயல்பாடு அடிப்படையில் இந்த தண்ணீர் அளவு மாறிக் கொண்டே இருக்கும். குளிர்ந்த நீரை குடிப்பதால் முடி வளர்ச்சி பாதிப்படையாது. இருப்பினும் தாதுக்கள் அடங்கிய நீரை குடிப்பது நல்லது.​ஒவ்வொரு 10 கிலோ உடல் எடைக்கும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அதாவது 60 கிலோ எடையுள்ளவராக இருந்தால், தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், தயிர், பாலாடைக்கட்டி, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முலாம் பழங்களை அடிக்கடி சாப்பிடலாம். முலாம் பழங்களில் 90% நீர்ச்சத்து உள்ளது.

உடல் செயல்பாடுகளுக்கு தண்ணீர் எப்படி அவசியமோ அதே மாதிரி முடி வளர்ச்சியை தூண்டவும் தண்ணீர் மிகவும் அவசியம்.

எனவே, தண்ணீர் நிறைய குடிங்க... தலைமுடியை ஆரோக்கியமா பார்த்துக்குங்க...

Updated On: 11 Aug 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு