நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உடனடி தீர்வளிக்கும் ''நியூரோபியான்'' முதல்ல இதைப் படியுங்க.....

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் முக்கியமானது நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஆகும். இதனை குணப்படுத்த டாக்டர்கள் முக்கியமாக பரிந்துரைப்பது இம்மருந்து ஆகும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உடனடி தீர்வளிக்கும் நியூரோபியான் முதல்ல இதைப் படியுங்க.....
X

neurobion tablet uses in tamil

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் நரம்புசம்பந்தமான நோய்களும் ஒன்று. இதுபோல் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையாக நியூரோபியான் திகழ்கிறது. இதனைப் பற்றி பார்ப்போம்.

நியூரோபியான் மாத்திரை என்பது ஒரு சில துணைப்பொருள்கள் அடங்கிய கூட்டுப்பொருளான வைட்டமின் பியைக் கொண்டது. இந்த மாத்திரையானது நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உடனடி தீர்வளிக்கும் வல்லமை கொண்டது.

இந்த நோய்களுக்காக சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் ஏற்கனவே ஏதாவது மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் அதனை முன்னதாகவே டாக்டரிடம் சொல்லிவிடுதல் நலம்.நியூரோபியான் தயாரிப்புகள் அனைத்துமே மூன்று விதமான பி விட்டமின்களைக் கொண்டது. நம் உடலிலுள்ள செல்களில் , நரம்புகள், தோல்,மற்றும் மூளை செல்கள் அனைத்தும் சரியான அளவில் இயங்க வைக்கிறது.

நியூரோபியான் என்பது 3 பி வைட்டமின்களைக் கொண்டது. அவையாவன. வைட்டமின் பி-1 தயமின், வைட்டமின்பி-6 பிரிடாக்சின், வைட்டமின்- பி12 .ஒவ்வொரு நியூரோபியான் மாத்திரையும், 100 மி.கி. வைட்டமின்பி-1,200 மி.கி. வைட்டமின் பி-6,200 மைக்ரோகிராம் வைட்டமின் பி-12.நியூரோபியன் போர்டே மாத்திரையில் 100 மி.கி. வைட்டமின் பி-1,100 மி.கி. வைட்டமின்பி-6, 5 மி.கி. வைட்டமின் பி-12. இவ்விரண்டு மாத்திரைகளுமே 100 சதவீதம் பாதுகாப்பானது என தேசிய சுகாதார இன்ஸ்டியூட்டினால் பரிந்துரைக்கப்பட்டது ஆகும்.

மாத்திரை உட்கொள்வது எப்படி?-

ஒருநாளைக்கு வாய் வழியாக ஒரு மாத்திரையினை உட்கொள்ளலாம். இந்த மாத்திரையினை தண்ணீர் கொண்டு விழுங்க வேண்டும்.வைட்டமின் பி பற்றாக்குறையால் ஓரளவு பாதிப்படைந்தவர்களுக்குஇம்மாத்திரை பயனளிக்கிறது. வைட்டமின் பியானது உடலிலுள்ள நரம்புகளுக்கு சத்துகளை அளிக்கவும், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்கவும், வளர்சிதை மாற்றத்தின் மூலம்ஒ ரு சில சத்துகளை அளிக்கவும் பயன்படுகிறது.

நாம் உண்ணக்கூடிய உணவில் போதுமான அளவு வைட்டமின் கிடைக்காததே விட்டமின் பி-12 பற்றாக்குறைக்கு காரணம். பி விட்டமின் பற்றாக்குறையால் சோர்வு, அனிமீயா, எடைகுறைவு,நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், கை, பாதங்களில் உணர்ச்சியற்ற வலி, மனஅழுத்தம், குறைந்த ஊட்டச்சத்து குறைபாடு, கல்லீரல், கிட்னி, தோல் உள்ளிட்ட பிரச்னைகள், இதுபோன்றவற்றால் பாதிப்படைவோர்க்கு நியூரோபியான் மாத்திரை பலனளிக்கிறது.

உங்களுக்கு விட்டமின் பற்றாக்குறை என தெரிந்தவுடன் உடனடியாக டாக்டரை கலந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.ரத்தப் பரிசோதனையின் மூலம் உங்களுடைய விட்டமின் குறைபாட்டினை அறிந்து டாக்டர் உங்களுக்கு தேவையான மருந்துகளை பரிசீலிப்பர்.

பக்க விளைவுகள்

நியூரோபியான் மாத்திரையினை உட்கொள்வோருக்கு ஒரு சிலருக்கு அதிகப்படியான சிறுநீர் வெளியேறும். நியூரோபியோன் மாத்திரையினை டாக்டர்கள் பரிந்துரைத்தவாறு உட்கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்களில் விட்டமின் பி மாத்திரைகளை உட்கொள்வோருக்கு மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியாக வாய்ப்புண்டு.இது ஒரு தற்காலிகமானதே தீமை விளைவிக்காது.அதிகப்படியான சிறுநீர், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, நரம்பு பிரச்னை, அலர்ஜி உள்ளிட்டவை.

யாராவது அலர்ஜியால் பாதிப்படைந்திருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வது நலம்.ஒரு சில நேரத்தில் தடிப்பு, சுவாசித்தலி்ல் பிரச்னைகள், முகம் மற்றும் வாய்ப் பகுதிகளில் வலி உள்ளிட்டவை.

இந்த மருந்தினை உட்கொள்வோருக்கு பாதுகாப்பினை வழங்கும். வைட்டமின்கள் தண்ணீரில் கலந்து விட்டால் திசுக்களை வளர்க்காது. இதனால் அதிகப்படியான வைட்டமின்கள் நம் உடலில் இருந்தால் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடும். இயல்பாகவே பி வைட்டமின்கள் தீங்களிக்காதவை. ஆனால் ஒரு சில நேரத்தில் சிறு விளைவுகள் உண்டாக்கலாம். அதிகப்படியான மாத்திரைகளை உட்கொள்ளும்போது ஆபத்துகள் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் ஏதாவது வேறு சில பிரச்னைகள் இருப்பின் அதனை முறைப்படி டாக்டரிடம் தெரிவித்துவிடவும். கிட்னி சம்பந்தமான நோய்களால் ஏதேனும் பாதிப்படைந்திருந்தாலும் டாக்டர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் பி வைட்டமின்களால் குறைந்த அளவிலான விளைவுகள் மற்றும் சந்திக்க நேரிடும்.

யார் யார் உட்கொள்ளலாம்?

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வைட்டமின் பி குறைபாட்டினால் பாதிப்படையலாம். ஆனால் நியூரோபியான் மாத்திரை விட்டமின் பி குறைவால் பாதிப்படைவோருக்கு ஏற்ற மாத்திரை ஆகும். பெரும்பாலானோருக்கு அவர்கள் சாப்பிடும் உணவிலிருந்தே இந்த விட்டமின் பி கிடைத்துவிடுகிறது.

அதிகமாக பாதிப்படைவோர்

கர்ப்பிணிகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், சைவ உணவு சாப்பிடுவோர், வேறு சில மருந்துகள் சாப்பிடுவதால் வைட்டமின் பி குறைவு ஏற்பட நேரிடலாம், வாயு கோளாறு, பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், இவர்கள் அ னைவரும் பி வைட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு இழப்பீட்டை ஈடு செய்யவேண்டும்.

யாருக்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளது தெரிகிறதோ உடனடியாக அவர்கள் டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நரம்பு சம்பந்தமான கோளாறுகளினால் பாதிப்படைந்தவர்கள் வைட்டமின் பி நியூரோபியான் மாத்திரையினை உட்கொள்ள டாக்டர் பரிந்துரைப்பார்.

நம் உடலில் முக்கியமான செயல்பாடுகளு்ககு விட்டமின் பி முக்கிய பங்குவகிக்கிறது. மேலும் நாம் உண்ணும் உணவில் ஒரு சிலருக்கு தேவையான வைட்டமின் பி கிடைத்துவிடும்.இயற்கையாகவே அதிக வைட்டமின் பி சத்து உள்ளவர்களுக்கு இம்மருந்து தேவையில்லை

Updated On: 19 Aug 2022 10:07 AM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...