/* */

முடக்காத்தான் கீரையின் பயன்கள் தமிழில் : வாதம் போக்கும் வல்லமை

Mudakathan Benefits-முடக்காத்தான் கீரை மூலமாக என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது தமிழில் கூறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Mudakathan Benefits
X

Mudakathan Benefits

Mudakathan Benefits

ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் 'முடக்கத்தான்' எனப்படும் இந்த கீரை வகை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக இந்த கீரைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஒரு காரணப்பெயர்.

ஆமாம், "முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கறதால, 'முடக்கத்தை அறுப்பதுன்னு' அர்த்தம் வர்ற வகையில முடக்கு காத்தான் என்பது மருவி முடக்காத்தான் என்று ஆகியுள்ளது. நம்ம முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லைங்க. ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் காரணங்களை கண்டறிந்து அதன்படி வாழ்ந்ததாலதான் அன்னிக்கு அவ்வளவு ஆரோக்கியமா இருந்திருக்காங்க. ஓகே நம்ம மேட்டருக்கு வருவோம்.

முடக்கத்தான் கீரை பயன்கள் என்னென்ன?(Mudakathan Keerai Benefits in Tamil)

வாத நோய்கள்:

பொதுவாக வாத நோய்கள் அதிகமா வரும் குளிர் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள்தான் இருக்குன்னு சித்த மருத்துவத்துல சொல்ளியிருக்கங்க. இந்த முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல ஒரு தீர்வா இருக்குது.

மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி:

முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைய இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக பெரிதும் உதவும்.

தோல் நோய்கள்:

முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கு. முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சொறி, சிரங்கு மாதிரி தோல் நோய் இருக்கும் இடத்துல பத்து மாதிரி வச்சுக்கிட்டா நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூல நோய்:

மலச்சிக்கல் இருக்கறவங்களுக்கு சொல்லாமலேயே மூல வியாதி வந்திடும். மூலநோய் உள்ளவங்க தினமும் பச்சையா கொஞ்சம் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தா, மூல நோய் விரைவில் குணமாகும்.

காது வலி:

காது வலி பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சாறெடுத்து, அதுல சில துளிகளை காதுகளுக்குள் விட காது வலி நீங்கும்.

மாதவிடாய் பிரச்சனைகள்:

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வா முடக்கத்தான் செயல்படுது.

குழந்தை பெற்ற பெண்கள் :

இந்த முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயித்துல பூசி வந்தா கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

மூட்டு வலி:

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, உடல்ல வாதத் தன்மை கட்டுப்படுத்தப்பட்டு, மூட்டு வலியை இல்லாமல் போகும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நனைச்சு எல்லா மூட்டு பகுதிகளிலும் தேச்சு வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.

தலைவலி:

ஜலதோஷத்தால வர்ற தலைவலிகளுக்கு முடக்கத்தான் இலைகளை நல்லா கசக்கி, வெந்நீர்ல போட்டு ஆவி பிடிச்சா தலைவலி சரியாகும்.

பொடுகு தொல்லை:

பொடுகுத் தொல்லை இருக்கறவங்க முடக்கத்தான் இலைகளை சேர்த்து செஞ்ச எண்ணெயை தலைக்கு தடவி வந்தா பொடுகு தொல்லை நீங்கும்.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கலந்து தோசையாகவும், துவையலாகவும் சாப்பிடலாம்.

இவ்வளவு பயனுள்ள மூலிகைகளை நாம் மறந்து போய்ட்டோம். தொட்டதுக்கெல்லாம் டாக்டர்கிட்ட போய் காசு செலவுபண்ணி ஒரு ஊசி குத்துனாத்தான் நமக்கு நல்லா ஆன மாதிரி ஒரு நெனப்பு. சும்மாவா சொன்னாங்க நினைப்புதான் பொழைப்பை கெடுக்குதுன்னு.

கைக்கு எட்டின தூரத்துல ஏகப்பட்ட மூலிகைகள் நம் கண் முன்னாடி கெடக்குது நாம் சீந்தாமலேயே.எதிர்விளைவுகள் இல்லாத நம்ம நாட்டு மூலிகைகளை பயன்படுத்தி நாம் ஆரோக்கியமா இருப்போமுங்க. பொதுவாகவே மூலிகைகளாக இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது பாதுகாப்பு மிக்கதாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 March 2024 10:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
  2. நாமக்கல்
    மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர்...
  3. ஆன்மீகம்
    வராக அவதாரத்தின் அற்புதத்தை பார்க்கலாம்..!
  4. சினிமா
    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சில பிரபல நடிகைகள்
  5. அரசியல்
    கோவையில் நடந்த பிரஸ்மீட்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!
  6. அரசியல்
    எம்ஜிஆர் கனவை நிறைவேற்ற அம்பையில் மோடி உறுதி..!
  7. லைஃப்ஸ்டைல்
    மறக்க முடியாத மை: மாற்ற முடியாத பச்சை குத்தல்களுக்கான உங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : பெரம்பலூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...
  9. வீடியோ
    🔴LIVE : தென்காசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...
  10. சூலூர்
    பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை