/* */

வாயில் புண்ணா? அசால்ட்டா இருக்காதீங்க, உஷாரா இருங்க

Mouth Cancer Symptoms in Tamil- வாய்வழி புற்று நோயின் முக்கிய காரணம் புகையிலை மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகும். இருப்பினும் மற்ற சில காரணங்களாலும் வாய் புற்று நோய் ஏற்படுகிறது.

HIGHLIGHTS

Mouth Cancer Symptoms in Tamil
X

Mouth Cancer Symptoms in Tamil

Mouth Cancer Symptoms in Tamil

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரமான நோய்களில் ஒன்று புற்றுநோய். வீரியம் மிக்க புற்று நோய்யாக அனைத்து பாலினம் மற்றும் வயது உடையவர்களுக்கு அறியப்படும் நோயாக தொண்டை புற்று நோய் அல்லது வாய்வழி புற்று நோய் உள்ளது. இதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்பு நடுத்தர வயதினரிடையே (29-50 வயது) மிக அதிகமாக இந்த நோயின் தாக்கங்களால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.

அதிகமான புகையிலை பயன்படுத்துதல் காரணமாக முக்கிய மூன்று புற்றுநோய்களில் ஒன்றாக வாய்வழி புற்றுநோய் அறியப்படுகிறது. நோயின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளும் முன்னரே உயிரைக் கொல்லும் அளவுக்கு உடல் முழுவதும் கேன்ஸர் செல்கள் வளர்ந்து விடுகிறது. எனவே புற்றுநோய் பற்றி அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இருப்பினும், ஆரம்ப கால நோய் அறிகுறிகளுக்கு தகுந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ அறிவியல் வழிமுறைகள் மூலம் முழுவதுமாக நோயை குணமடைய செய்ய இயலும். இந்த வாய்வழி புற்று நோய்க்கான சிகிச்சையானது, போதை பழக்கம் மாற்று சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி எனப்படும் மருந்துகள் கொண்டு செய்யும் சிகிச்சை மற்றும் வாய் புற்று நோய் அறுவை சிகிச்சைகளாகும்.

வாய் புற்றுநோய் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாய்ப்பகுதிகளில் ஏற்படும் புண், காயங்கள் ஆற நீண்ட நேரம் எடுக்கும்

வைட்டமின் சி குறைபாடு, காரமான உணவுகளை சாப்பிடுவது, நாக்கை கடித்துக் கொள்வது, விபத்து, போன்ற பல்வேறு காரணங்களால் வாயில் புண்கள், அழற்சி, மவுத் அல்சர் என்று காணப்படும். பெரும்பாலும் இவை ஒரு சில நாட்கள் முதல் ஒரு சில வாரங்களில் குணமாகிவிடும். ஆனால் நீண்ட நேரம் வாயில் ஏற்படும் புண்கள் ஆறவில்லை என்றால் அது ஓரல் கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

வாய்வழி புற்றுநோயானது தொண்டைக்குள் (வாய்க்குள்) உள்ளே இருக்கும் செல் அணுக்களிலில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும். இவை சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும். வாய்வழி புற்று நோயின் முக்கிய காரணம் புகையிலை மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகும். இருப்பினும் மற்ற சில காரணங்களாலும் வாய் புற்று நோய் ஏற்படுகிறது.

வாய்வழி புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. முதிர்ச்சியற்ற நோயின் அறிகுறிகள் மிகக்குறைவாகவும் குறைந்த அடையாளங்களுடனும் பார்க்க சாதாரண தொண்டை அழற்சி அல்லது வாய் புண்கள் போல இருப்பதனால் ஆகும். நீங்கள் உங்களை பின்வரும் சில அறிகுறிகள் இருப்பின் பல் மருத்துவர் / பொது மருத்துவரை அணுகவும்.

புற்றுநோயின் முதல் அறிகுறியே, வலியில்லாத கட்டி அல்லது வீக்கம் தான். உங்களின் வாய்க்குள் அல்லது தொண்டையின் முன் பகுதியில் அவ்வாறு காணப்பட்டால், ஆனால் அதனால் உங்களுக்கு எந்த விதமான அசௌகரியமும் இல்லை என்றால், அது கேன்சரின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

  • வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் மூன்று வாரங்களுக்கு மேலாக தொண்டையில் (வாயில்) இருப்பின்,

வாய்ப்பகுதியில் வெள்ளை நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுகளாக காணப்பட்டால் அது கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். நீண்ட கால அல்சர், நெஞ்செரிச்சல் அல்லது, செரிமான கோளாறு ஆகியவற்றால் கூட இவ்வாறு காணப்படலாம். இந்த அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

  • வறட்சியான தொண்டை நிலை ஒரு மாதங்களுக்கு மேல் இருப்பின்,
  • வாய் / தொண்டை புண்கள் 3 லிருந்து - 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருப்பின்
  • தொண்டை குழியில் அல்லது வாயினுள் கட்டி அல்லது ஒரு அசாதரண கட்டி போன்ற அமைப்பு இருப்பின்
  • காரணம் இன்றி பற்கள் வலுவிழப்பு அல்லது விழுங்குவதில் பிரச்னை

தொற்று அல்லது சைனஸ், சளி இல்லாத பட்சத்தில், உணவு விழுங்கும் போது வலித்தால், அது கேன்சர் அறிகுறியாக இருக்கலாம். குளிர் மற்றும் சளியால் தாடை வலிக்கலாம், நோய்த்தொற்றால் தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் வலிக்கலாம். ஆனால், காரணமே இல்லாமல் வலித்தல் அல்லது காரணமே இல்லாமல், பற்கள் இறுக்கம் தளர்ந்து போனால் அல்லது விழுந்தால், அது கேன்சரின் அறிகுறியாகும்.

தொடர் தொண்டை வலியினால் விழுங்குவதில் பிரச்சனை.

தொண்டை வலி என்றால் சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது, காது வலிக்கும். காதுகளில் தொற்று என்றால், அது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இவை எதுவும் இல்லாமல், காதுகள் வலித்தால், அது வாய்ப்பகுதி புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

அசாதாரண கடின குரல் அல்லது பேசுவதில் சிரமம்

2 லிருந்து 3 வாரங்களுக்கு மேலாக வாயை திறப்பதில், உதடு, தாடை, நாக்கு காது,கழுத்து தொண்டை பகுதியில் வலி இருப்பின் கவனிக்காமல் இருக்க கூடாது. அதற்கான காரணங்களை உடனடியாக அறிவது வாய் தொற்று நோயை ஆரம்ப நிலையில் அறிய உதவும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 4:32 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?