மெஹந்தி அலர்ஜியை எவ்வாறு சரி செய்யலாம்?

ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மெஹந்தி அலர்ஜியை எவ்வாறு சரி செய்யலாம்?
X

பைல் படம்.

மெஹந்தி டிசைன்கள், ரெடிமேட் மெஹந்தி கோன் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், மெஹந்தி அலர்ஜி வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் குறித்து பார்க்கலாம்.

விதவிதமான மெஹந்தி டிசைன்கள்:

குஜராத்தி மெஹந்தி டிசைன்: நெருக்கமான கோடுகள், பூக்கள், மயில், மணப்பெண், முரசு போன்ற டிசைன்களை வரைவது.

அரபிக் மெஹந்தி டிசைன்: பெரிய பூக்கள், இலை, கொடிகளை வரைவது.

பாகிஸ்தானி மெஹந்தி டிசைன்: இது இந்தியன், அரபிக் டிசைன்கள் இரண்டையும் கலந்து வரைவது.

இந்தோ அரபிக் மெஹந்தி டிசைன்: பட்டையான கோடுகளால் அவுட் லைன் வரைந்து, இந்தியன் டிசைன்களில் உள்ளே உள்ள இடங்களை நிரப்புவது.

கிளிட்டர் மெஹந்தி: ஆஸ்துமா, வீஸிங் இருப்பவர்களுக்கு மெஹந்தி குளிர்ச்சி என்பதால், அவர்களுக்கு கிளிட்டர் மெஹந்தி பரிந்துரைக்கப்படும். உடைக்கு மேட்ச்சாக ஜிகினா கலந்து பூக்கள், டாட்டூ போல பெரிய டிசைன்களாக வரைவதுதான் இதன் சிறப்பு. பார்ட்டி பிரியர்கள் அதிகம் விரும்பி போட்டுக் கொள்வதும் இந்த ஒரு நாள் மெஹந்திதான்.

பிளாக் மெஹந்தி: இது இஸ்லாமிய நாடுகளில் பிரபலம். பூக்கள் நிறைய கொண்ட டிசைனில் வெளிக்கோடுகள் கருப்பு நிறத்திலும், உள் பக்கம் சிவப்பு நிறத்திலுமாக வரைவார்கள். கருப்பு-சிவப்பு காம்பினேஷனில் அந்த டிசைன் கண்களைக் கவரும். எப்போதுமே தரமான மருதாணி இலையைப் பறித்து, பதமாக அரைத்து வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரித்து உபயோகிப்பதுதான் பாதுகாப்பானது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் யாருக்கும் அதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. எனவே, ரெடிமேட் மெஹந்தி கோன்களையே உபயோகிக்கிறார்கள்.

ரெடிமேட் கோன் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. லெமன் மெஹந்தி கோன், இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன் என்று பல வகை மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன.

2. மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும். நல்ல தரமான மெஹந்தி கோன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அந்த மெஹந்தி கோன் பெட்டியின் மேல் தயாரிக்கும் நிறுவனம், அதன் விலாசம் உள்ள பிராண்டுதான் சிறந்தது.

3. இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன், டிசைன் வரைந்த பத்து நிமிடங்களுக்குள், டார்க் மெரூன் கலர் வந்துவிடும். இந்த மாதிரி மெஹந்தி கோன்களில் கண்டிப்பாக PPD என்று சொல்லக் கூடிய Para Phenyl Diamin கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

மெஹந்தி அலர்ஜி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

1. சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், பொதுவாகவே ரெடிமேட் மெஹந்தி கோன்ஸ் உபயோகப்படுத்த வேண்டாம். முதல் முறை ரெடிமேட் கோன் வைத்து மெஹந்தி போட்டுக் கொள்கிறவர்கள் அதில் சிறிதளவை எடுத்து பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்துவிட்டு உபயோகிப்பது பாதுகாப்பானது. தரமான மெஹந்தி கோனால் அலர்ஜி வர வாய்ப்பில்லை. அப்படியே மெஹந்தியால் அலர்ஜி வந்தால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

2. சில தரமற்ற மெஹந்தி கோன்களில் நல்ல நிறம் வர வேண்டும் என்பதற்காக குங்குமம், சுண்ணாம்பு போன்றவற்றைக்கூட சேர்க்கிறார்கள். இவையும் நிறைய பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். மெஹந்தியால் அலர்ஜி ஏற்பட்டது தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். சரும மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்?

1. மெஹந்தி டிசைன் போட்ட இடத்தில், எலுமிச்சையும் சர்க்கரையும் கலந்த கரைசலை பஞ்சினால் தொட்டு டிசைன் மேல் ஒற்றி வரவும்.

2. டிசைன் காய்ந்து எடுத்த பின், தண்ணீர் படாமல் 4 மணி நேரம் பார்த்துக் கொள்ளவும்.

3. சுடுநீரில் 15 - 20 கிராம்பு போட்டு அதில் இருந்து வரும் ஆவியில் கையை காட்டினால், அதிக நிறம் வர வாய்ப்பு இருக்கிறது.

4. கையில் லோஷன், எண்ணெய், பிளீச் படாமல் பார்த்துக் கொண்டால், மெஹந்தி கலர் மாறாமல் இருக்கும்.

Updated On: 2 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

 1. மாதவரம்
  செங்குன்றம் அருகே தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
 2. நாமக்கல்
  பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள்
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. லைஃப்ஸ்டைல்
  Murungai Keerai Soup Benefits in Tamil முருங்கை கீரை சூப் பயன்கள்...
 5. லைஃப்ஸ்டைல்
  Vetrilai Benefits in Tamil வெற்றிலையின் நன்மைகள் தமிழில்
 6. தேனி
  விவசாயிகள் பெயரில் புரோக்கர்கள் கலெக்டரை குழப்புவதாக அதிகாரிகள்...
 7. தேனி
  தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று
 8. தேனி
  முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாளில் தீர்க்காவிட்டால் போராட்டம்
 9. தேனி
  கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
 10. தேனி
  சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை