/* */

medicinal benefits of agathikkeerai அகத்திக்கீரையிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?...உங்களுக்கு?......

medicinal benefits of agathikkeerai அகத்திக்கீரையினுடைய தன்மை என்னவெனில், சிறு கசப்பு ருசியுடையது. இந்த கசப்பு சுவை குடலில் உண்டாகும் விஷ நீர்களை முறித்து அப்புறப்படுத்தும் தன்மை பெற்றது. மேலும் குடலில் காணப்படும் மலம், நீர், ஆகிய நாற்றங்களைச் சுத்தம்செய்து ஒழுங்குபடுத்துகிறது

HIGHLIGHTS

medicinal benefits of agathikkeerai  அகத்திக்கீரையிலுள்ள மருத்துவ குணங்கள்   பற்றி தெரியுமா?...உங்களுக்கு?......
X

மருத்துவ குணங்கள் கொண்ட அகத்திக்கீரை உடல் ஆரோக்யத்துக்கு நல்லது (கோப்பு படம்)

medicinal benefits of agathikkeerai

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது அவசிய்ம. ஆனால் ஒரு சிலரோ சாதமும் சாம்பாரும் இருந்தால்போதும் என காய்கறிகளைப் புறந்தள்ளிவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு. நல்லதல்ல. வாரந்தோறும் இரண்டு கீரைவகைகளையும் சேர்த்துக்கொள்வது, நம் உடல் ஆரோக்யத்துக்கு அவசியமாகிறது. அதுவும் இக்கால குழந்தைகள் காய்கறி, தயிர், மோர், என்றால் ஓட்டமெடுக்கின்றனர். அவர்களுக்கு ஜங்க் புட், இருந்தால் போதும் பாக்கெட்டில் வரும் பொறித்த உணவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் அகத்திக்கீரையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக காண்போம்.

medicinal benefits of agathikkeerai


கீரைகளை நாம்வாரந்தோறும் சாப்பிடும் பட்சத்தில் நமக்கு வரக்கூடிய நோய்களானது விலகி சென்றுவிடும். அந்த அ ளவிற்கு தாது சத்துகள் கீரைகளில் உள்ளது. அனைத்து கீரைகளும் தங்களுடைய வகைகளுக்கு ஏற்ப மருத்துவகுணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அகத்திக்கீரை இது பெயரிலேயே இதனுடைய குணம் என்னவென்று அறிந்துகொள்ளலாம். அகம்-தீ அதாவது மனித உடலில்ஏற்படக்கூடிய உஷ்ண சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்த வல்ல கீரை இது.

குணங்கள்

*பழங்காலத்தில் இருந்து இன்று வரை சித்த மருத்துவத்துறையில் பிரதான இடம் வகிப்பது இந்த அகத்திக்கீரை. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துணவாக பயன்படுவதோடு நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.*அகத்தியில் காணப்படும் இலை, காய், பூ, பட்டை வேர், ஆகிய அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுகின்றன.

தீரும் நோய்கள்

* பித்த, உஷ்ணம், தோல்நோய், சொறிசிரங்கு, அரிப்பு, குடல்ரணம், தொண்டையில் ரணம், ரத்தப்பித்தம், ரத்தக்கொதிப்பு, ஜலதோஷம், மலச்சிக்கல், மூளைக்கோளாறு, கண் கோளாறு, ஐம்பொறிநோய், அடிபட்ட வீக்கம், தலைவலி, சிறுநீர் நோய் ஆகிய நோய்கள் தீரும்.

medicinal benefits of agathikkeerai


*அகத்திக்கீரையினை வேகவைத்து, கடைந்து, தேங்காய்த்துருவல், சேர்த்து பருப்பு டன் சேர்த்தம் சாப்பிடுவார்கள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இக்கீரையைத் தாய்மார்கள் சாப்பிட நன்கு பால் சுரக்கும். மூளை சம்பந்தமான நோய்களுக்கும் அகத்திக்கீரையைச் சாப்பிட்டு பயன் பெறலாம்.

*அகத்திக்கீரை சூரணம்

*அகத்திக்கீரையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்து முறுவலாக இருக்கும்போது எடுத்து அம்மியில் வைத்து லேசாக அரைத்து மெல்லிய துணியால் வடிகட்டி எடுத்தால் இக் கீரையினுடைய சூரணம் ஆகும்.இதனைக் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு பின் இளஞ்சூடான தண்ணீர் அருந்த வேண்டும்.தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மார்பு வலி நலமடையும். வாயில் போட்டு சுடுதண்ணீர் அருந்த (இருவேளை) வாந்தி,வயிற்றுவலி, குணமடையும்.

*கீரையை எடுத்து சுத்தம் செய்து சமையலில் தேங்காய்த்துருவல், மிளகு இவைகளைச் சேர்த்து பொரியல் செய்து தொடர்ந்து 3 நாள் சாப்பிட வாய் ரணம் குணமாகும்.

*அடிபட்ட வீக்கங்களுக்கு அகத்திக்கீரையை அரைத்து சூடு பண்ணி பற்றாக போட்டால் குணம் காணலாம். இலையினுடைய சாற்றை நெற்றியில் தடவி ஆவி பிடிக்கும் பட்சம்தலைவலி நீங்கும்.

*அகத்திக்கீரையை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பொரியல் செய்து சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி உண்ணும் பட்சத்தில் வாயு உண்டாகும். இதனால் வாயுக்கோளாறு உள்ள வர்கள் கண்டிப்பாக இக்கீரையைச் சாப்பிடாமல் இருப்பது நலம்.

medicinal benefits of agathikkeerai


*மூளைக் கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி இந்த கீரையை உண்டு வந்தால் கோளாறு குணமாகும். மேலும் இது பத்தியத்தை முறைக்க வல்லது . எனவே , மருந்துண்ணும் காலங்களிலோ பத்திய இருக்கும்போதோ அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது.

*இந்த கீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து, உயிர்ச்சத்து, வைட்டமின் ஏ, ஆகியவை இருக்கின்றன. உடலின் எலும்புகளும் பற்களும், உறுதிப்படவும், வளர்ச்சி அடையவும். இது ஏதுவாகிறது. மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்கள் இந்த கீரையை உபயோகிப்பதன் மூலம் நன்மை பெறலாம்.

medicinal benefits of agathikkeerai



கண் பார்வை

அகத்திப்பூவினுடைய சாற்றை உபயோகிப்பவர்களுக்கு அகத்தியின் இளம்பூவும், மொட்டுகளும், உணவாக சமைக்க உதவுகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த முறை கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. வட மாநிலத்தவர் இல்லங்களில் பூவைத் தனியாக சமைத்து சாப்பிடுகின்றனர்.

வைசூரி நோய் எனும் பெரியம்மமை நோயின் வேகத்தை தணிப்பதற்கு அகத்திக்கீரைப் பட்டையை பயன்படுத்தி மருத்துவம் செய்வதுண்டு. அகத்தி வேர் ஒரு சிறப்பு மிக்க மருந்தாக பயன்படுகிறது. அகத்தி வேரையும் இதன் பட்டையையும் கிரமப்பிரகாரம் குடிநீர் செய்து அருந்த ஐம்பொறிகளிலுள்ள எரிவு நீங்கும். ஐம்பொறி எரிவு யாவை? மெய்எரிவு, தாகம், மேகம், கை எரிவு, ஆண்குறியின் உள்எரிவு, என்பவை.

medicinal benefits of agathikkeerai


ஆலங்களில் பெரும்பாலானோர் பசுக்களைக் கொண்டு வருவர். அப்போது சிலர் பசுக்களுக்கு இந்த அகத்திக்கீரையைக் கொடுப்பதுண்டு. காரணம் பூர்வ கர்ம வினைகள் யாவும் நீங்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இக்கீரையைச் சாப்பிடும் மாட்டின் பால் நம் உடலுக்கு நன்மை தரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இப்பாலை அருந்துவதால் அகத்திக் கீரையைச் சாப்பிடுவதால் உண்டாகும். பலன் யாவும் கிடைக்கும்.

அகத்திக்கீரையினுடைய தன்மை என்னவெனில், சிறு கசப்பு ருசியுடையது. இந்த கசப்பு சுவை குடலில் உண்டாகும் விஷ நீர்களை முறித்து அப்புறப்படுத்தும் தன்மை பெற்றது. மேலும் குடலில் காணப்படும் மலம், நீர், ஆகிய நாற்றங்களைச் சுத்தம்செய்து ஒழுங்குபடுத்துகிறது. நல்ல ஜீரண சக்தியைத் தரவல்லது. பித்த சம்பந்தமான அனைத் துபிணிகளும் நலமாகும். நீண்ட நாட்கள் அகத்திக்கீரை சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டால் அவர்களுக்கு பேதியாகும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

Updated On: 21 Aug 2023 7:43 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  5. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  10. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...