/* */

பெண்களுக்கு ஏற்படும் இடுப்புவலி, முதுகுவலிக்குஹோமியோபதி சிகிச்சை முறை

ladies back pain homeo treatment மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் ஒன்றுதான் இடுப்பு வலி மற்றும் முதுகுவலி. இவற்றை ஹோமியோ சிகிச்சை முறையில் எப்படி குணப்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

பெண்களுக்கு ஏற்படும் இடுப்புவலி, முதுகுவலிக்குஹோமியோபதி சிகிச்சை முறை
X

இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டவரின் தோற்றம்  (பைல் படம்)

ladies back pain homeo treatment

நம் அன்றாட வாழ்க்கையில் செய்யப்படும் செயல்களினால் நம் உடலுக்கு ஏற்படும் வலிகளில் ஒன்றுதான் முதுகுவலி இடுப்பு வலி. இவை பெண்களுக்கு மட்டும்அல்லநின்று கொண்டே வேலை செய்பவர்களான ஆண்களுக்கும் வர வாய்ப்புகள் உண்டு. இதற்கு பல மருத்துவ முறைகளின் மூலம் குணப்படுத்த பாதிக்கப்பட்டவர்கள் முயற்சி செய்கின்றனர். ேஹாமியோபதி சிகிச்சை முறையில் இதனைக் குணப்படுத்தலாம் .நோயாளியின் தன்மையை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுவதால் குணமடைய வாய்ப்பு உண்டு. தொடர்ந்து டாக்டர் கூறும் அறிவுரைகளை முறையாக பின்பற்றி மருந்துகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்கள் என்றாலே முதுகுவலியால் அவதிப்பட்டவர்கள், அவதிப்படப்போகிறவர்கள்என்று விளையாட்டாக கூறுவதை கேள்விப்பட்டுள்ளோம். என் இடுப்பு முறிஞ்சி போச்சு என்று தன்வீட்டுவேலைகளை முடிந்த பிறகுபெண்கள் கூறுவதும் இயல்பான ஒன்றாகி விட்டது. இன்றைய நிலையில் பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான தொல்லைகளில் முதுகுவலி முதன்மை வகிக்கிறது. முதுகுவலி ஏன் ஏற்படுகிறது? அதனை எவ்வாறு தடுக்கலாம்? அதற்கு சிகிச்சை முறை என்ன? இதுகுறித்து சேலம் 4 ரோட்டிலுள்ள ஹோமியோ டாக்டர்.முகுந்தன் கூறும்போது,

ladies back pain homeo treatment


முதுகு தண்டுவட பகுதியின் தோற்றம் . முதல் படம் , நார்மலான தண்டுவடம்... இரண்டாவது படம் .பிரச்னைஏற்பட்டது

பொதுவாகவே பெண்கள் எல்லா வேலைகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு ஒரேயடியாக உடலை வருத்திக்கொள்வார்கள் அல்லது வேகம் வேகமாக வேலைகளை முடித்துக்கொண்டு பகலில்படுத்துதுாங்குவதும் அல்லது டிவி முன்னால் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு மெகா சீரியல்களைப் பார்த்து சலிப்பதுமாக உள்ளனர். இப்படிப்பட்ட வாழ்க்கை சூழ்நிலைகளால் உடல்பாதிப்பும் , மன பாதிப்பும், அதிகமாகுமே ஒழிய வாழ்வில் ஆரோக்யமும் , மன அமைதியும் கிட்டாது.

அடுப்படியில் நீண்ட நேரம் நின்று கொண்டே சமையல் கூடத்திலும் சிஃங்கில் நின்றுகொண்டு குனிந்தவாறே பாத்திரங்களை தேய்ப்பதும் முதுகுவலியை துாண்டக்காரணங்களாக அமைகின்றன. இன்றைய நவீன உலகில் நடுத்தர வர்க்க வீட்டில் கூட கிரைண்டர், வாஷிங் மெஷின் வாக்குவம் கிளீனர், என்று எல்லாவிதமான சாதனங்களு்ம உள்ளன. இதனால் பெண்கள் குனிந்து நிமிரும் வேலைகளே இன்றி சிறுவயது முதற்கொண்டே வளருகின்றனர்.

உடற்பயிற்சியின்மை

நவீன காலத்தில் முறையான உடற்பயிற்சியின்றி இக்காலத்துபெண்கள் பலவிதமான தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர். பொதுவாக பெற்றோர்கள் தங்கள் பெண்குழந்தைகளை செல்லமாக வளர்ப்பதாக நினைத்துகொண்டு அவர்களுக்கு வீட்டு வேலை வைப்பதை அறவே தவிர்த்து, உடற்பயிற்சி இன்றி வளர்த்து விடுகின்றனர். பள்ளிக்குழந்தைகள் புத்தகங்களைப் பொதிசுமப்பது போல் முதுகில் சுமந்து செல்வதால், முதுகெலும்பின் வளைவுகளில்மாற்றங்கள் அடைந்து முதுகுவலிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிடுகின்றனர். காலேஜ் படிக்கும் பெண்களோ ''ஹைஹீல்ஸ் செருப்பு'' என்று முதுகுவலி பிரச்னையை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

முத்தான முன்னோர்கள்

நமது முன்னோர்களுக்கு இந்த முதுகு பிரச்னைகளின் தாக்கம் மிகவும் குறைவு. இப்பொழுதும் சுமார் 70 அல்லது 80 வயது ஆண்களும், பெண்களும், வயல்களில் மணிக்கணக்கில் குனிந்து நிமிர்ந்தும் வேலைகளை செய்வதை பார்க்கிறோம்? இது எவ்வாறு? அவர்கள் சிறுவயதிலிருந்தே தங்கள் உடலை வருத்தி வேலைசெய்வதால் முதுகெலும்புகள் நன்கு வளையும் தன்மைபெற்று இருப்பதோடல்லாமல் முதுகிலுள்ள தசை நார்களும் நல்ல வலுவுடன் இருக்கும். இன்றும் இவர்கள் வீட்டில் ஆட்டுக்கல்லில் ஆட்டுவதும், அம்மியில் அரைப்பதும், கைகளால் துவைப்பதும் வீடு பெருக்குவது, தண்ணீர் இறைப்பது போன்ற உடற்பயிற்சிகளுக்கு வேறு வகையான கடின உழைப்பு எதனையும் திடீரென்று மேற்கொண்டாலும் முதுகெலும்பு பாதிப்படைவதில்லை,

ladies back pain homeo treatment


ladies back pain homeo treatment

முதுகுவலி (LOW BACK PAIN)

முதுகுவலியில் அதிகம் காணப்படுவது கீழ் முதுகெலும்புகளின் (லும்பார்) ஏற்படுகின்ற டிஸ்க் புரோலெப்ஸினால் ஏற்படுவதும் கழுத்தெலும்புகளில் ஏற்படுகின்ற செர்விகல் பான்டிலைசிடிஸ் என்ற கழுத்துவலியும் தான். இரண்டு முதுகெலும்புகளுக்கிடையே இன்டர்வெர்டிபிரல்டிஸ்க் உள்ளே ஸ்பாஞ்ச் போன்ற மென்மையாகவும், வெளியே பைப்ரோ கார்டிலேஜ் நிமிர்வதற்கு இந்தடிஸ்க் துணைபுரிகின்றன. நாம் குதிக்கும்போதும், ஓடும்போது அல்லது பளுவான பொருட்களை தாக்கும்போதும் இந்த டிஸ்க் அதிர்வு தாங்கி போன்று வேலை செய்து நமது முதுகெலும்புகளைஅடிபடாமல் பாதுகாக்கிறது.

நல்ல ஆரோக்யமான முதுகெலும்புகள் மற்றும் டிஸ்க்குகள் எல்லாவிதமான இயல்பு வாழ்க்கைக்கும் ஏற்றவாறு தாங்கி வளைந்து கொடுக்கும். சில சமயம் அளவிற்கு அதிகமாக வேலை செய்யும்போதும், மிகவும் பளுவான பொருட்களை துாக்கும்போதும், சில விபத்துக்களினாலும், இந்த டிஸ்க் பிதுங்குவதற்கு வாய்ப்புண்டு. இதனைத்தான் டிஸ்க்புரலாப்ஸ் என்கிறோம்.

பெண்கள் அதிக எடை போடும்போதும் வயிறு பெருக்கும்போதும் வேலை செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பதாலும், முதுகெலும்பின் வளைவுகளில் மாற்றங்கள் ஏற்படும். இப்படியிருக்கும் பட்சத்தில் இவர்கள் ஒரு பொருளை எடுக்க குனியும்போதோ, உயர இருக்கும்பொருட்களை எடுக்க கைகளை துாக்கும்போதோ,ஸ்பீட் பிரேக்கரில் பஸ்துாக்கிப்போடும்போதோ இந்த டிஸ்க் எளிதாக பிதுங்கி தண்டு வடத்திலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்தும் போது வலி உண்டாகிறது. இதன் தாக்கம் குறைவாக இருக்கும் பட்சத்தில் முதுகின் கீழ்பகுதியில் வலிஉண்டாகும். இதுவே அதிகமாகும்போது சையாட்டிக் நரம்பின் வழியாக முதுகின் அடிப்பகுதியில் இருந்து தொடைப்பகுதி, கால்மற்றும் முதுகின் அடிப்பகுதியிலிருந்து தொடைப்பகுதிகால்மற்றும் பாதங்களுக்கு வலி பரவும்.இதனை சயாடிக்கா என்கிறோம்.

ஹோமியோ சிகிச்சை

டிஸ்க்புரலாப்ஸ்,சயாட்டிகா, சர்விகல் ஸ்பான்டிலைடிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு ஹோமியோபதியில்மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. இந்த பிரச்னை எதனால் ஏற்பட்டது, வலியின் தன்மை என்ன, நோயாளியின் உடல் மற்றும் மன நலக்குறிகள் யாவற்றையும், ஆராய்ந்து கொடுக்கப்படும் கான்ஸ்டிடியூஷனல் மருந்துகளால் மட்டுமே நோயாளியை முழுக்க குணப்படுத்த இயலும். ஹோமியோ மருந்துகளால் இந்த நரம்புகளின் அழுத்தம் விடுவிக்கப்பட்டதோடு முதுகிலுள்ள தசைநார்கள் வலுவடைவதற்கும், நோயாளியின் அதிக எடை குறைவதற்கும் துணைபுரிகின்றன. குழந்தைகளை சிறுவயதிலிருந்தே சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்வதில் ஆர்வம் காட்டசெய்யுங்கள். உடற்பயிற்சி மற்றும் யோகாவிற்கு நேரம் ஒதுக்குங்கள். விளையாடுவதற்கும் ஊக்கம் அளியுங்கள். ஆரோக்யமான ஒருமுன்னுதாரணமாக இருங்க எனடாக்டர் .முகுந்தன் கருத்து தெரிவித்துள்ளார்..

நன்றி:டாக்டர். முகுந்தன்.சேலம்.

Updated On: 4 Oct 2022 7:22 AM GMT

Related News