kidney stone symptoms in tamil-சிறுநீரகத்தில் கல் இருந்தால் என்ன அறிகுறி..? தெரிஞ்சுக்கங்க..!

kidney stone symptoms in tamil-மனித உடலில் சிறுநீரகங்கள் இரண்டு உள்ளன. ஒரு ஆரோக்யமான சிறுநீரகம் இருந்தாலே மனிதன் உயிர்வாழ முடியும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
kidney stone symptoms in tamil-சிறுநீரகத்தில் கல் இருந்தால் என்ன அறிகுறி..? தெரிஞ்சுக்கங்க..!
X

kidney stone symptoms in tamil-சிறுநீரக கற்கள் அறிகுறி (வாந்தி)-(கோப்பு படம்)

kidney stone symptoms in tamil-கிட்னியின் முக்கியமான வேலை என்ன தெரியுமா? சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் இரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு. இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான செயல்பாடுகளை முறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


சிறுநீரகங்கள் உடலில் எங்கு உள்ளன?

சிறுநீரகங்கள் (kidneys) என்பவை விலா எலும்புக்கூட்டுக்குள் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்துள்ளன. இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன. வளர்ந்த உடலில் இது 11 செமீ நீள அளவில் இருக்கும். இவை இரத்தத்தை ஓரிணைச் சிறுநீரகத் தமனிகள் வழியாகப் பெறுகின்றன. இவைகளில் இருந்து இரத்தம் ஓரிணைச் சிறுநீரகச் சிரைகள் வழியாக வெளியேறுகிறது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு சிறுநீர்க்குழல் இணைந்துள்ளது. இந்தக் குழல் சிறுநீரைச் சிறுநீர்ப் பைக்குக் கொண்டுசெல்கிறது.

kidney stone symptoms in tamil

மனிதர்களின் உடலில் சிறுநீரகங்கள் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. இதனால், உடலில் நச்சுக்கள் சேராமல் தவிர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான பணியைச் செய்யும் சிறுநீரங்களின் உட்பகுதியில் கரைந்த தாதுக்கள் சேர்வதால் ஏற்படுவது தான் சிறுநீரக கற்கள். இந்த சிறுநீரக கற்கள் உருவானால் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். ஒரு நாளில் 2 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் குடிப்பவருக்குத்தான் பொதுவாக சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

4 லிட்டர் தண்ணீர்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகங்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் போதுமான அளவு உடலில் இல்லாத போது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை நீர்த்துப் போகச் செய்து கடினமாக்கி, சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. அதனால் ஒரு நாளில் குறைந்தபட்ஷமாக 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்புகள் இல்லை.


சிறுநீரக கற்கள் உருவாகி இருப்பதை எப்படி அறிவது? அதன் அறிகுறிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

kidney stone symptoms in tamil

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீரக கல் அறிகுறிகளில் மிகவும் பொதுவான அறிகுறி சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுவது. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் இருந்தால் உடனே, மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்வது நல்லது. சில நேரங்களில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றும் சிறுநீரக கற்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் , சிறுநீர்ப்பையில் கற்கள் உள்ளது என்று அர்த்தம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீரில் இரத்தம் வருவது

சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால் சிறுநீரக கற்கள் உள்ளது என்பது உறுதியாகிறது. இந்த அறிகுறியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடி சிகிச்சைப் பெற மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால், சிறுநீரக கற்களின் அறிகுறியும் இதுவே. இம்மாதிரியான அறிகுறி சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதைக்கு கீழே நகர்ந்துள்ளதைக் குறிப்பதாகும். இதை உடனடியாக சரிசெய்ய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

kidney stone symptoms in tamil

சிறுநீரில் துர்நாற்றம்

சிறுநீர் பிங்க் நிறமாக அல்லது சிவப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருந்தால், அது சிறுநீரக கற்கள் உருவாகி இருப்பதற்கான அறிகுறியாகும். சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது. ஆனால், துர்நாற்றம் வீசுவதுடன் சிறுநீர் தெளிவில்லாமல் இருக்கும். இது சிறுநீரக கற்களின் தெளிவான அறிகுறியாகும்.


சிறுநீர் பாதையில் அடைப்பு

சிறுநீரக கற்களின் அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. இது சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதையின் கீழ் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாகும்.இதனால் கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து அழுத்தத்தைக் குறைக்கும். அதனால், சிறுநீர் வெளியேறமுடியாமல் வலி ஏற்படும்.

காய்ச்சல்

சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகப் பாதையிலோ தொற்று இருந்தால் காய்ச்சல் மற்றும் குளிர் இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

வாந்தி

சிறுநீரகங்கள் இரைப்பைக் குழாயுடன் நரம்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே இது வயிற்று உப்புசம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் கடுமையான வலி ஏற்படுவதால் வாந்தி வரும். வலியின் எதிர்வினையே வாந்தி. அதனால் மருத்துவரை தாமதிக்காமல் பார்த்து சிகிச்சை எடுக்கவேண்டும்.

kidney stone symptoms in tamil

முதுகு வலி

முதுகு வலிப்பது அல்லது வயிறு வலிப்பது சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். அதாவது சிறுநீரகத்தில் கற்கள் பெரிதாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ இருந்தால், இம்மாதிரியான வலி வரும். ஆரம்பத்தில் வலி தாங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அது சில நாட்கள் கழித்து தாங்க முடியாத பெரிய வலியாக இருக்கும். வலியில் இருந்து விடுபட உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

Updated On: 11 Jan 2023 7:59 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  2. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  5. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  8. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்