இந்திய முறை கழிப்பறை ஆரோக்கியத்தின் அடையாளம் : அக்குபஞ்சர் மருத்துவர்

இந்திய முறை கழிவறை ஆரோக்கியத்தின் அடையாளம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இந்திய முறை கழிப்பறை ஆரோக்கியத்தின் அடையாளம் : அக்குபஞ்சர் மருத்துவர்
X

இந்திய மற்றும் மேற்கத்திய கழிப்பறைகள்.

உலகில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்:
  • இந்திய முறை கழிப்பறை (Squat Position),
  • மேற்கத்திய முறை (Sitting Position).

ஆதிகாலம் முதல் கழிவை வெளியேற்றக் குத்தவைத்து (Squat Position) உட்காரும் முறையையே மனித இனம் பின்பற்றிவந்தது. இதற்கு மலாசனம் என்று பெயர். நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் ஆசனம் இது. இதை எத்தனை முறை செய்கிறோமோ, அந்த அளவுக்கு உடல் உறுதி கூடும்.

இதனால், மூலநோய் தொந்தரவு சீரடையும், மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கால்களும் முதுகும் உறுதியாகும். வயிற்று உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

இன்று எழுப்பப்படும் கட்டிடங்களில் இந்திய முறை கழிவறை இருக்கிறதோ இல்லையோ மேற்கத்திய முறையான அமர்ந்து கழிக்கும் கழிவறை (வெஸ்டர்ன் டாய்லெட்) இல்லாமல் வீடு கட்டுவதில்லை.

அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது, மனிதன் அமர்ந்த முறையில் மேற்கத்திய கழிவறையை உபயோகித்து தனது கழிவுகளை வெளியேற்றம் செய்யும் முறை தவறானது, ஏனெனில் உடல்கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் மலச்சிக்கல் ஏற்படுத்தும் மற்றும் பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்திய முறை கழிப்பறையில் அமரும்போது, இயற்கை அழுத்தத்தால் கழிவு முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

நோய்களின் மூலக்காரணி

முழுமையாக வெளியேற்றப்படாத கழிவு பெருங்குடல் பகுதியில் தேங்குவதால், அங்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அப்பெண்டிசிட்டிஸ், இன்ஃபிளமேட்டரி பவல் டிசீஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த நோய்கள் அதிக அளவில் உள்ளன.

அதிகநேரம் உட்கார்ந்து கழிப்பதால் குதம் கீழிறங்கி, மூலநோய் (Piles) எளிதாக வர வாய்ப்புகள் உண்டு. உட்கார்ந்து செல்லும் முறையால் செல்போன் பயன்பாடுகளும் அதிகாமாகிப் போனதால் அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்து நேரம் கடத்துவது தொற்று பரவவும் உடல்நலமும் சீர்கெடும்.

இந்தியக் கழிப்பறை சிறப்பு

மேற்கத்திய நாடுகளில் சுத்தம் மேலோங்கி இருக்கும். ஆனால் உடல் சார்ந்த தனிமனிதச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே, அடிவயிறு தொடர்பான நோய்களுக்குக் காரணம். ஆராய்ச்சியாளர்கள் பலரும், தங்கள் ஆய்வு முடிவாக இந்திய முறை கழிப்பறையே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்துவரும் நிலையில், மேற்கத்திய முறை கழிப்பறை நம்மிடையே பரவலாகி வருகிறது.

சுகப்பிரசவத்துக்கு

கருவுற்ற பெண்கள் இந்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தினால் கருப்பையின் அழுத்தம் குறைந்து, சுகப் பிரசவத்துக்கு வழிவகுக்கும். நோய்த்தொற்றுகளும் குறைவாக இருக்கும். பொது இடங்களில்கூட இந்திய முறை கழிப்பறைகளே சிறந்தவை. இன்றைக்கு, எல்லாப் பக்கமுமே மேற்கத்திய முறை கழிப்பறை பரவலாகி வருவது வருத்தம் தருகிறது.

ஆரோக்கிய அடையாளம்

இந்திய முறை கழிப்பறைகள் அரிதாகிவருகின்றன. அவைகளை அநாகரிகமாகவும் கருதப்படுகின்றன. உண்மையில் இந்திய முறை கழிப்பறைகள் ஆரோக்கியத்தின் அடையாளம். உண்பது, செரிப்பது, கழிவை முழுமையாக வெளியேற்றுவதில் தான், மனித உடல் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது. அதனால் சொகுசு, நாகரிகம் என்று தவறாக நம்பி நம் குழந்தைகளையும் சோம்பேறிகளாக்க வேண்டாம். இந்திய முறை கழிப்பறைக்கு மாறுவோம். ஆரோக்கியத்தை பேணுவோம்.

- கட்டுரையாளர் அக்குபஞ்சர் மருத்துவர் கி.கோபிநாத், திண்டுக்கல்.

Updated On: 10 Aug 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
  3. உடுமலைப்பேட்டை
    உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
  4. தூத்துக்குடி
    தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  6. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  7. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  8. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  10. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்