/* */

how to stop periods immediately home remedies மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்

அதீத உதிரப்போக்கு இருந்தாலும் பிரச்சினை, உதிரப்போக்கே ஏற்படாவிட்டாலும் பிரச்சினை. அதற்கு என்ன வீட்டு வைத்தியம் என்று பாக்கலாம்

HIGHLIGHTS

how to stop periods immediately home remedies மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்
X

பைல் படம்.

மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கு என்பது மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும். சிலருக்கு 7 நாட்கள் வரை இருக்கும். ஆனால் முதல் மூன்று நாட்களில் அதிகமாக இருக்கும் உதிரபோக்கு அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் தொடர்ந்து ஐந்து நாட்கள் அல்லது ஏழு நாட்களுக்கு அதிகமான இருந்தால் அதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் உடல் பலவீனமடையக்கூடும்.

மாதவிலக்கில் இருவகையான பிரச்சினைகள் உள்ளன.

முதல் வகை சில பெண்களுக்கு 3 அல்லது 4 மாதமானாலும் மாதவிடாய் ஏற்படாமலேயே இருக்கும். அதன் பிறகு மாதவிலக்கு ஒரு மாதம் , 40 நாள், 2 மாதம் என சிறிது சிறிதாக உதிரப்போக்கு இருந்து வரும்.

இரண்டாவது வகை என்னவெனில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது அதிக ரத்தபோக்கு இருந்து கொண்டே இருக்கும். மெனோபாஸ் எனப்படும் வயது வரும் போது பெண்கள் பாதிப்புக்குள்ளாவர். இந்த இரு பிரச்சினைகளுமே நாம் அன்றாடம் பார்க்கும் பிரச்சினைகளாகவே உள்ளன.


அதீத உதிரப்போக்கு இருந்தாலும் பிரச்சினை, உதிரப்போக்கே ஏற்படாவிட்டாலும் பிரச்சினை. அதீத உதிரப்போக்கு இருந்தால் உடலில் பலவீனம் ஏற்படும். ரத்தசோகை சம்பந்தப்பட்ட காரணிகள் அதிகமாகும். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மாறும். எல்லாவற்றுக்கும் மேல் உடல் எடை அதிகரிக்கும். உதிரப்போக்கு குறையும் போதும் மேற்கண்ட பிரச்சினைகள் ஏற்படும். உடல் எடையும் கூடும்.

அதற்கு என்ன வீட்டு வைத்தியம் உண்டு என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • மாதுளை பழத்தோல்
  • அதிமதுரம்
  • மருதம்பட்டை
  • 300 மில்லி தண்ணீர்

ஒவ்வொன்றையும் 3 கிராம் எடுத்து 300 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து அதை 100 மில்லியாக காய்ச்சவும். பின்னர் அதை வடிகட்டி குடித்து வந்தால் பெரும்பாடு என சொல்லக் கூடிய அதீத உதிரப்போக்கை தடுத்து நிறுத்தும். மாதவிலக்கானது முழுமை பெற்றால்தான் அவர்களுடைய உடல்நலம் நன்றாக இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் அதிகமான உதிரபோக்கு இருந்தால் நீங்கள் உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அறிகுறிகளை எளிதாக்கலாம். அல்லது சாதாரண உதிரபோக்கை எதிர்கொள்ளலாம். இந்த நேரத்தில் ஓய்வு பெறுவதும் அவசியமாகும். மருத்துவரின் ஆலோசனையோடு வலி நிவாரணி மருந்துகள் எடுக்கலாம்.

தொடர்ந்து இரண்டு சுழற்சிகளுக்கு பிறகும் உதிரபோக்கு குறையாமல் அதிகரித்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது. அதிகமான உதிரபோக்கை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

மாதவிடாய் காலத்தில் அதிக உதிரபோக்கு இருந்தால் உடலில் இரத்த அளவு அதிகமாக குறையலாம். இந்த காலத்தில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக 4 முதல் 6 கப் தண்ணீர் குடிப்பது இரத்த அளவை பராமரிக்க உதவும்.

உடலில் திரவத்தை சமப்படுத்த எலக்ட்ரோலைட் கரைசலை குடிக்கலாம். நீர்ச்சத்தை அதிகரிப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகர்க்க செய்யலாம்.


இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

இயல்பாகவே மாதவிடாய் சுழற்சி காலத்தில் இரும்புச்சத்து உணவுகள் அவசியம். ஏனெனில் உதிரபோக்கை இழக்கும் போது நீங்கள் இரும்பையும் உடன் இழக்கிறீர்கள். இரத்த சிவப்பு அணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவும். ஹீமோகுளோபினுக்கு இரும்பு அவசியம் தேவை.

ஆனால் மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரபோக்கு இருந்தால் அது உடலின் இரும்புச்சத்தை குறைத்து குறைபாட்டை உண்டாக்கும். அது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். மாதவிடாய் உதிரபோக்கு தொடர்ந்து இருக்கும் போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், வெளிறிய தோல் போன்றவை இரும்புச்சத்து குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும். ஆரம்பத்திலேயே உணர்ந்தால் சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும்.

மூலிகை வைத்தியம்

பாரம்பரியமாக அதிகமான உதிரபோக்குக்கு மூலிகை வைத்தியம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப கால சான்றுகள் இதற்கு உதவக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இஞ்சி சப்ளிமெண்ட்கள், மிர்டல் பழ சிரப், மாதுளை பூ சப்ளிமெண்ட் போன்றவை. அதே நேரம் இதை உறுதிபடுத்த மேலும் ஆய்வுகள் தேவை.

உணவை வார்ப்பிரும்பில் சமையுங்கள்

  • இரும்பு உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி வார்ப்பிரும்பு வாணலில் சமைப்பது. அதிக ஈரப்பதம் கொண்ட உணவுகள் இரும்பை உறிஞ்சும். நீங்கள் உணவை கிளறி கிளறி சமைப்பது உணவில் இரும்புச்சத்தை உணவில் இழுக்கும்.

இரும்பு பாத்திரத்தில் சமைப்பது உங்களுக்கு இரும்புச்சத்தை அளிக்க கூடும். அதே நேரம் இந்த வகை உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்புடையதல்ல. அதே நேரம் இவை மிகைப்படுத்தாமல் கவனமாக இருப்பதும் அவசியம்.


  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால், வாழைப் பழத்துடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து சாப்பிடவும் அல்லது செம்பருத்திப் பூவை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ரத்தப் போக்கு கட்டுப்படும்.
  • புதினா இலையின் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து குடிக்க மாதவிலக்கு ஒழுங்குபடும். மலைவேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாத விடாய் காலத்தில் 3 நாள் சாப்பிட மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.
  • அசோகப் பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அசோக மர பட்டையுடன் பசும்பாலும் தண்ணீரும் சேர்த்து சாறெடுத்து தினமும் குடித்து வந்தால், உதிரப் போக்கு நின்னு மாதவிடாய் சுழற்சி சீராகும்

பட்டை-105கிராம், பசுவின் பால்-2ஆழாக்கு (336மிலி), நீர்;-8 ஆழாக்கு (1344 மிலி) கலந்து 1/5ல் பாகமாக சுருக்கி, நாள் ஒன்றுக்கு 2-3 முறை குடித்துவர அதீத உதிரப்போக்கு தீரும்.


சில இயற்கை உணவுகள் மற்றும் விட்டமின் சப்ப்ளிமெண்ட் நீண்டகாலம் எடுத்துக்கொண்டால் மாதவிடாய் நாட்களை குறைக்கலாம். உதிரப்போக்கை குறைத்து உங்களது மாதவிடாயை விரைவில் முடிக்க உதவும் உணவு சப்ளிமெண்ட் மற்றும் மூலிகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் நாட்கள் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு வைட்டமின் ஏ அதிகப்படியான டோஸ் 3000 எம்சிஜி. மாதவிடாயை விரைவில் முடிக்க அதிக டோஸ் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மருத்துவரை ஆலோசித்து அளவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து குறைப்பட்டினால் அதிக மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படும் என்பது உங்களில் பலருக்கு தெரியாது. அதனோடு சிலசமயம் உங்கள் மாதவிடாய் நாட்களையும் கூட்டி விடுகிறது. ஆகவே, உங்களது உணவில் திராட்சை, கீரைகள், முட்டைகள், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதால் உங்களது மாதவிடாய் நாட்களை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு குறைக்கலாம்.


வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்

உடலில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு ஏற்படும் போது, கல்லீரலின் செயலப்பாடு குறைகிறது. அதனால், மாதவிடாய்க்கு காரணமான எஸ்ட்ரோஜென் ஹார்மோனை கல்லீரலால் செயல் இழக்க முடிவதில்லை. அதனால், ஒவ்வொரு நாளும் வைட்டமின் பி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் நாட்களை குறைக்க உதவும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி அதிக உதிரப்போக்கை குறைப்பது மட்டுமில்லாமல் உணவில் இருந்து இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. இவை காப்பில்லரி வால்ஸ் உடைவதை குறைக்க உதவுகிறது. ஆகவே, உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், மற்றும் பல) மற்றும் காய்கறிகள் (ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கீரைகள், மற்றும் மற்ற பச்சை காய்கறிகள்) சேர்த்துக்கொள்வதால் உங்களது மாதவிடாய் நாட்களை விரைவில் முடிக்க உதவும். நீங்கள் வைட்டமின் சி சப்ளிமெண்ட்டை தினமும் எடுத்துக்கொள்ளலாம். வயது வந்த பெண்களுக்கு தினசரி வைட்டமின் சி மருந்தளவு 75 எம்ஜி மற்றும் பருவபெண்களுக்கு 65 எம்ஜி அளவு எடுத்துக் கொள்ளலாம்

வைட்டமின் கே

இரத்த உறைதலில் வைட்டமின் கே முக்கிய ஊட்டச்சத்து ஆகும். பெரும்பாலான பெண்களுக்கு சாதாரண உதிரப்போக்கு மற்றும் உறையும் நேரம் இருந்தாலும், லேசான உறையும் பிரச்சனை இருக்கும் பெண்கள் வைட்டமின் கே பயன்படுத்துவது உதவிகரமாக இருக்கும். பருவபெண்களுக்கு தினசரி மருந்தளவு 75 எம்சிஜி மற்றும் வயது வந்த பெண்களுக்கு 90 எம்சிஜி. ஆனால் மாதவிடாயை முடிக்க, உங்களது ஆரோக்கியம், எடை, உயரம் மற்றும் மற்ற மருத்துவ நிலைகளை பொறுத்து உங்களது மருத்துவர் இந்த மருந்தளவுகளை அதிகரிக்கக்கூடும் .

உதிரபோக்கு வீட்டு வைத்திய முறையில் சரியாகாத போது மருத்துவரை அணுகலாம். சிகிச்சை முறை பயனளிக்காத நிலையில் தீவிரமான உதிரபோக்கு இருக்கும் போது உங்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யலாம்.

குறிப்பு: இவையனைத்தும் தகவலுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனில் தக்க நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Updated On: 15 April 2023 6:37 AM GMT

Related News