hiccups meaning in tamil-விக்கல் எதனால் ஏற்படுகிறது? எப்படி நிறுத்தலாம்? தெரிஞ்சுக்கங்க..!
hiccups meaning in tamil-விக்கல் அடிக்கடி வருவது நல்லதா? அது வேறு ஏதாவது பிரச்னைகளுக்கு வழிவகுக்குமா? பார்க்கலாம் வாங்க.
HIGHLIGHTS

hiccups meaning in tamil-விக்கல் (கோப்பு படம்)
hiccups meaning in tamil-சாதாரணமாக நம் சுவாசத்தின்போது காற்றை உள்ளே இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. அப்போது தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரத்தில் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது.
இதனால், நாம் சுவாசிக்கும் பொது காற்றானது , திறந்த குரல் நாண்கள் வழியாக தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் செல்கிறது. இதுதான் இயல்பாக நடக்கக்கூடிய சுவாச நிகழ்வு ஆகும். சில நேரங்களில், மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக திடீர் திடீரென சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல் நாண்கள் சரியாக திறப்பதில்லை.
அவ்வாறான நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல் நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரலுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்த காற்று, புல்லாங்குழலுக்குள் காற்று தடைபட்டு இசையொலி எழுவதைப்போல தொண்டையில் 'விக்... விக்...' என்று ஒரு 'விக்' ஒலி எழுகிறது. இதுக்குப் பேர்தான் 'விக்கல்'.
hiccups meaning in tamil
இந்த விக்கலு, தும்மலு இதையெல்லாம் உடனே நிறுத்திட முடியாது. விக்கல் நிற்பதற்கு சிலர் அதிர்ச்சியான செய்தியை சொல்லும்போது அவர்கள் அதிர்ச்சியில் மூச்சடக்கி நிற்கும்போது விக்கல் நின்றுபோகிறது.
விக்கலுக்கான காரணங்கள்
வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது
மிகச் சூடாக சாப்பிடுவது
தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது போன்றவை விக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள். சில வேளைகளில் வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும் வாய்ப்புகள் உள்ளன.
hiccups meaning in tamil
தொடர் விக்கல்
விக்கல் தொடர்ந்து வருகிறது என்றால் அது வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கல்லீரல் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இரைப்பை புண், மூளைக் காய்ச்சல், நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, கணைய அழற்சி போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கும் இவ்வாறு அடிக்கடி விக்கல் வரும் வாய்ப்புகள் உள்ளன. விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்றுவிட்டால் அது வேறு கோளாறு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தொடர்ச்சியான விக்கல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.
விக்கலை நிறுத்த என்ன செய்யலாம்?
மூச்சு விடாமல் நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
மூச்சை நன்றாக உள்ளிழுத்து சில வினாடிகள் அடக்கி வைத்து மூச்சை மெதுவாக விடலாம்.
hiccups meaning in tamil
சர்க்கரை கொஞ்சம் வாயில் போடலாம்
எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சையை சுவைத்து விழுங்கலாம். இவ்வாறு செய்தால் விக்கல் நின்றுவிடும்.