/* */

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தமிழில்

Heart Attack Symptoms in Tamil மாரடைப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் மற்றும் அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள்

HIGHLIGHTS

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தமிழில்
X

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தமிழில்

முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், இப்போதோ, 30 அல்லது 40 வயது உள்ளவர்கள்கூட மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். மாரடைப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் மற்றும் அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை இந்த பதவில் பார்க்கலாம்.

இதயம் ஒரு வினாடி கூட நிற்காமல் தொடர்ந்து சுருங்கி விரிந்தபடி இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்கிறது. ரத்தம் தான் உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனையும் சத்தையும் எடுத்துச் செல்கிறது. அப்போதுதான் அப்பகுதிகள் நல்ல இயக்கத்துடன் இருக்கும்.


இதயம், தசைப் பையைப் போன்றது. தனக்குள் வரும் ரத்தம் மூலம்தான் இதயமும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களைப் பெறுகிறது. பொதுவாக, இதயத்தின் ரத்தக் குழாய்கள் பல்வேறு கடினமான சூழ்நிலைகளிலும் கூட திறம்படச் செயல்படும் என்றாலும், சில காரணங்களால் அவை சரிவரச் செயல்பட முடியாதபோது, உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

Heart Attack Symptoms in Tamil மாரடைப்பு அறிகுறிகள் :

இந்த வலி பொதுவாக நெஞ்சில் ஆரம்பித்து, தாடை, கை, கழுத்து என்று பரவும். சில சமயம் முதுகுக்கும் பரவும். வலி தொடர்ந்து இருக்கும்.

எப்போது ஏற்படும்?:

அதிக தூரம் நடக்கும்போதோ, படியேறும்போதோ, உடலளவில் கடுமையான செயல்களில் ஈடுபடும்போதோ, மனஅழுத்தத்தின்போதோ, நெஞ்சு வலி ஏற்படும். ஓய்வு எடுத்தால், வலி குறைந்து நின்றுவிடும்.

சிலருக்கு வேலை செய்யாமல் ஓய்வாக இருக்கும்போதே நெஞ்சு வலி ஏற்படலாம். இந்த நிலை ஆபத்தானது. ஏற்கெனவே ஒரு முறை நெஞ்சு வலி வந்திருந்து, இப்போது குறைந்த வேலைகளைத் தொடர்ந்து செய்யும்போதுகூட நெஞ்சு வலி வந்ததென்றால், நிச்சயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.

ஒருமுறை நெஞ்சு வலி வந்தால்கூட மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். நெஞ்சு வலி இருப்பவர்க்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். சரியாகக் கையாண்டால் வலி வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழமுடியும்.

Heart Attack Symptoms in Tamil எதனால் ஏற்படுகிறது?

இதயத்தின் ரத்த நாளங்கள் குறுகலாக இருந்தால், குறைந்த அளவு ரத்தம்தான் இதயத்துக்குச் செல்கிறது. அதனால், இதயத்துக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜனே கிடைக்கிறது. கடினமான வேலைகளில் ஈடுபடும்போது, அதிக ரத்தம் தேவைப்படுவதால், குறுகிய நாளங்களால் அதிகமான ரத்தத்தை கொண்டு செல்ல முடியாது. இதனால், இதயத்துக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் வலி ஏற்படுகிறது.

வலியினால் ஓய்வெடுக்கும் அந்த சமயத்தில், இதயம் தன்னைச் சீர்செய்து கொள்ளும். ஆனால், இந்த வலியை இதயம் நமக்குத் தரும் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ளவேண்டும்

மாரடைப்பு ஏற்பட காரணங்கள்

அதிக ரத்த அழுத்தம், ரத்தச்சோகை, குளிர்ந்த சூழல், மதுப்பழக்கம், புகைபிடித்தல், உடற்பருமன், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு ஆகியவை நெஞ்சு வலி ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு, ரத்த நாளங்களில் படலங்கள் அதிகமாகப் படியக் காரணமாகின்றன.

Heart Attack Symptoms in Tamil கொழுப்புப் படலம் அதிகமாகும்போதோ, வேறு பல காரணங்களாலோ, நாளத்தை அடைத்து, ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடைப்படுத்துகிறது. இதனால், அந்த ரத்த நாளம் மூலமாக இதயத்துக்கு சென்று கொண்டு இருந்த ரத்தம் தடைப்படும். அதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.


மாரடைப்பு அறிகுறிகள்:

நெஞ்சு வலிதான் பொதுவான அறிகுறி. இந்த வலி அதிக வீரியத்துடனும், அழுத்தத்துடனும் இடது நெஞ்சுப் பகுதியில் இருந்து தாடை அல்லது இடது கைக்குப் பரவும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும். அதிகமாகவும் வேர்க்கும். வாந்தி மற்றும் மயக்கமும் ஏற்படலாம். சிலர் இந்த அறிகுறிகளால் பயம் மற்றும் பதட்டமாக உணர்வர்.

இந்த வலி ஓய்வு எடுத்தாலும் குறையாது. மிகவும் வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நெஞ்சு வலியின் வீரியம் குறைவாகவும், காரணமே இல்லாமல் சோர்வாகவும், களைப்பாகவும் இருக்கும்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் காலதாமதம் இன்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது.

Heart Attack Symptoms in Tamil மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகள்:

  • 65-க்கு வயதுக்கு மேற்பட்டோருக்கு இருபாலருக்குமே மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
  • ஆண்களுக்கு இளம் வயதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் வரும் வாய்ப்பு அதிகம்.
  • மரபு வழியாக குடும்பத்தினர் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.

Heart Attack Symptoms in Tamil மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம்

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொழுப்பு அவசியத் தேவை. இதன் அளவு அதிகரிக்கும்போதுதான் பிரச்சனையாகிறது. டிரை கிளிசிரைட் எனப்படும் மற்றொரு கொழுப்பு வகை அதிகமானாலும் சிக்கல்தான்.

கேக், பிஸ்கட் வகைகள், வறுத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பாலாடை, வெண்ணெய் ஆகியவை அதிகமாக உட்கொள்ளும் போது கொழுப்பின் அளவு அதிகமாகிறது.

உணவில் கவனம் செலுத்தாமலும் போனால், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும். இதைத் தவிர, தைராய்ட், சிறுநீரகக் கோளாறுகள், மதுப் பழக்கம் ஆகியவை ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

உடல் பருமன்:


சீரான உடல் எடைக்கு ஆரோக்கியமான சம­விகித உணவு, தொடர் உடற்பயிற்ச மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம். இதயம் சீராகச் செயல்பட உடல் எடை சீராக இருத்தல் அவசியம்.

ரத்த அழுத்தம்:


அதிக ரத்த அழுத்தம் இருந்தால் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனுடன் உணவில் உப்பின் அளவைக் குறைத்தல், சமவிகித உணவு, உடற்பயிற்சி, மது மற்றும் புகைப் பழக்கத்தை நிறுத்துதல், ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும். ரத்த அழுத்தத்துடன், புகை பிடிக்கும் பழக்கமும், அதிகக் கொழுப்பும் இருந்தால் மாரடைப்பின் அபாயம் அதிகம்.

புகை பிடித்தல்:


புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

சர்க்கரை நோய்:

சர்க்கரையின் அளவு சீராக இல்லை என்றால் இதயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிக சர்க்கரை, நாளங்களின் சுவற்றைப் பாதித்து அதிகக் கொழுப்பைப் படரச் செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

உடற்பயிற்சியின்மை:

தினமும் 30 நிமிடங்கள் வீதம் வாரத்துக்கு ஐந்து தடவையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது, ரத்தத்தின் கொழுப்பு அளவைக் குறைப்பதுடன் உடல் எடையைச் சீராக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயையும் தடுக்கும். இவை தவிர, மன அழுத்தம், மதுப் பழக்கம் போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமையலாம்.

Updated On: 31 May 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?